20 ஜூன், 2013

பராஅத் சிறப்புக் கட்டுரை


இது குறித்து கடந்த ஆண்டு நான் பதிவு செய்த கட்டுரையை வாசிப்பதற்கு முன் இந்த தகவலையும் சேர்த்துக் கொள்ளலாம் :

 நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம் மான் என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.
روى البخاري ومسلم عن أمِّ المؤمنين عائشة -رضي الله عنها- قالتْ: "ما رأيتُ رسولَ الله صلى الله عليه وسلم استكملَ صيام 
شهر قطُّ إلا شهر رمضان، وما رأيتُه في شهرٍ أكثر صيامًا منه في شعبان". وفي رواية لأبي داود قالتْ: "كان أحبّ الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أنْ يصومَه شعبان، ثم يَصِله برمضان".
நபி (ஸல்) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை, என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

وقد روى الترمذي والنسائي عن أسامة بن زيد، قَال: قُلتُ: يا رسول الله، لمْ أرَكَ تصوم شهْرًا من الشهور ما تصوم مِنْ شعْبان. قال: «ذلك شهْرٌ يغْفُل الناس عنْه بيْن رجب ورمضان، وهو شهْرٌ تُرْفَع فيه الأعْمال إلى ربِّ العالمين، فأحبُّ أنْ يرْفعَ عملي وأنا صائمٌ».
உஸாமா (ரலி) இந்த ரகசியம் பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (அபுதாவூத், நஸஈ,ஸஹீஹ் இப்னு ஹுஸைமா).
நபித்தோழர்களும் தாபிஈன்களும் இந்த மாதத்தின் நோன்புக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர் :
 فعن لؤلؤة -مولاة عمار- قالت: "كان عمارُ رضي الله عنه يتهيَّأ لصوم شعبان كما يتهيَّأ لصومِ رمضانَ".
لقدْ كانوا يهتمون بهذا الشهر اهتمامًا خاصًّا؛ لِمَا عرفوا من نفَحَاته وكَرَاماته، فكانوا ينكبُّون على كتاب الله يتلونه ويتدارسونه، ويتصدقون من أموالهم، ويتسابقون إلى الخيْرات، وكأنهم يُهيِّئون قلوبَهم لاستقبال نفحات رمضان الكُبرى، حتى إذا دخلَ عليهم رمضان دَخَلَ عليهم وقلوبُهم عامرةٌ بالإيمان وألسنتُهم رطبةٌ بذِكْر الله، وجوارحُهم عفيفةٌ عن الحرام طاهرةٌ نقيَّةٌ، فيشعرون بلذَّة القيام وحلاوة الصيام، ولا يَملُّون من الأعمال الصالحة؛ لأنَّ قلوبَهم خالطتها بشاشةُ الإيمان وتغلغَل نورُ اليقين في أرواحِهم.
ولذلك قال سلمة بن كهيل الحضرمي الكوفي التابعي -رحمه الله تعالى- عندما رأى قومَه إذا أقْبَلَ عليهم شهر شعبان تفرَّغوا لقراءة القرآن الكريم: "شهرُ شعبان شهرُ القُرَّاء".
وكانَ عمرو بن قيس إذا دَخَلَ شهرُ شعبان أغْلَقَ حانوتَه، وتفرَّغ لقراءة القرآن.
بل كانوا يقولون: شهرُ رجب هو شهرُ الزرع، وشهرُ شعبان هو شهرُ سَقْي الزرع، وشهرُ رمضان هو شهْرُ حَصادِ الزرع. بل شبَّهوا شهرَ رجب بالريح، وشهرَ شعبان بالغيم، وشهْرَ رمضان بالمطَرِ، ومَن لم يَزْرعْ ويَغْرِسْ في رجب، ولم يَسْقِ في شعبان، فكيف يريد أن يحْصدَ في رمضان؟!
ஒரு பராஅத் இரவு ஒருவர் வணக்கம் புரியாமல் குடி போதையில்  தூங்கிவிட்டார். கனவொன்று கண்டார். மஹ்ஷர் மைதாத்தில் மக்கள் எல்லாம் திரண்டு இருக்கிரார்கள். அப்போது அவரைக் கரும்பாம்பு ஒன்று துரத்தத் தொடங்குகிறது. அவர் விரண்டோடுகிறார். பாம்பு அவரை விடாது விரட்டுகிறது. அவர் நரகத்தின் விளிம்பிற்கே வந்து விடுகிறார். அப்போது வெண்ணாடை புனைந்த ஒருவர் தோன்றி, ஒரு மலையைச் சுட்டிக் காட்டி, ''அங்கு செல்! அங்கே முஸ்லிம்களின் அடைக்கலப் பொருட்கள் உள்ளன அவற்றின் மூலம் உனக்கு அபயம் கிடைக்கலாம். என்கிறார்.
அவர் அம்மலையை நோக்கி ஓடுகிறார். அதில் இரண்டு வாயில்கள் இருக்கின்றன. அவற்றில் திரைகள் தொங்குகின்றன. திரைகளை அகற்றுங்கள்; இந்த ஏழைக்கு இங்கு அபயம் இருக்கக்கூடும். என்று ஒரு அசரீரி கேட்கிறது. உடனே திரைகள் விலகுகின்றன. அங்கிருந்து ஒளிவண்ண  ஓவியம் போன்ற குழந்தைகள் வெளிவருகின்றன. அந்த குழந்தைகளில் ஒன்று வேகமாக வந்து ஒரு கையில் அவரை அனைத்துக் கண்டு வலக்கரத்தால் ஒரு ஈட்டியை எடுத்து கருநாகத்தை நோக்கி வீசுகிறது. கருநாகம் ஓடிவிடுகிறது.
அதன்பின் அந்தக் குழந்தை அவர் மடிமீது அமர்ந்து அன்போடு அழைக்கிறது. அவர் தன கண்களை அகல விரித்துப் பார்க்கிறார். அது வேறு யாருமல்ல. அவரின் அன்பு மகள்தான். சிறுவயதில் இறையடி சேர்ந்த சின்ன சிட்டுதான்.
நாங்கள் இங்கு உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களிடம் வரும்போது உங்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம். என்று கூறுகிறது அந்த குழந்தை. கனவு கலைகிறது. திடுக்கிட்டு எழுந்த வர இந்த புனித இரவில் கூட போதையில் கிடந்தது விட்டோமே என்று பதறுகிறார் குளித்தார். பள்ளிக்கு விரைந்தார் வணக்க வழிபாடுகளில் திளைத்தார். அதிலிருந்து அவர் போதையின் பாதைக்கே செல்லவில்லை.

கடந்த வருட பராஅத் கட்டுரை:

7 கருத்துகள்:

  1. ﺟﺰﺍﻙ ﺍﻟﻠﻪ ﺧﻴﺮﺍ ﻓﻰ ﺍﻟﺪﺍﺭﻳﻦ
    மிக அவசியமான தகவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முஹ்யித்தீன் மஸ்லஹி,
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி

      நீக்கு
  2. மௌலானா! எதிர்வரும் பராஅத்! நம் அனைவருக்கும் ஆக வேண்டும் ஸலாமத்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோல சரளமாக
      அடுக்கு மொழியில் அடுக்குவதுதான்
      தங்கள் கராமத்.

      நீக்கு
    2. சாதாரணமானவர்களுக்கும் பதில் சொல்வது உங்களது அதாலத்.

      நீக்கு
  3. ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையாது என குரானில் உவமையாக கூறுவது போல, இது போன்ற உவமைகள் குரானில் எத்தனை உள்ளது, விளக்கம் தேவை.

    பதிலளிநீக்கு
  4. அல்ஹம்துலில்லாஹ் பயனுள்ள தகவல்

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download