இப்போது ஆறு மாணவர்களும் அருமையாக பேசி முடித்துவிட்டார்கள். தீர்ப்பு சொல்ல வேண்டும்.
என்ன தீர்ப்பு சொல்வது?
நன்மையும்தான் நாசமும்தான் இரண்டுமே உண்டுதான் என்று சொன்னால் .... என்னை செருப்பக் கழட்டி அடிக்க வருவீங்க ''ஏண்டா.. இதுக்கா இத்தனை மணி நேரம் பொறுமையா உட்கார்ந்திருந்தோம் என்று பொங்கி விடுவீர்கள் ''யாருடா இப்படி ஒரு தீர்ப்பை எழுதித் தந்தது'' என்று எங்க ஆசியருக்கும் திட்டு விழும் .
அதுக்காக இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்னு சொல்ல முடியுமா ?
நான் ஒத்தி வச்சா நீங்கல்லாம் சேர்ந்து என்னை மொத்தி எடுத்து விடுவீங்க
அதுனால நல்ல தீர்ப்பை சொல்லாம என்னால நழுவ முடியாது . சரி தீர்ப்புக்கு வருவோம்.
இந்த தரப்பில் பேசும்போது என்ன சொன்னார்கள் :
'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்ச்சியில் எத்தனையோ குடும்ப பிரச்சினைகளை தீர்க்கிறார்கள் பிரிந்து கிடக்கிற குடும்பங்களை சேர்த்து வைக்கிறார்கள்'' என்றார்கள்
ஆனால் இந்த அணி என்ன சொல்கிறது? ''ஒற்றுமையாய் இருந்த எத்தனையோ குடும்பங்கள் நாடகங்களால் நாசமடைந்ததும் உண்டா இல்லையா'' என்று இவர்கள் கேட்கிறார்கள். அதையும் நாம் மறுக்க முடியாது.
உதாரணமாக , வேலை செய்து அலுத்து மனமும் உடலும் கலைத்து வரும் கணவருக்கு சேர்ந்தாற்போல ஒரு பத்து நிமிடம் அருகில் அமர்ந்து இன்று எந்த மனைவியாவது உணவு பரிமாறுவதைப் பார்க்க முடியுமா?
நாடகம் தொடங்கும் முன் தட்டு வரும் அடுத்த விளம்பர இடைவேளையில் சாதம் ; அதற்கடுத்த இடைவேளையில் சாம்பார்.
இப்படி இடைவேளைகளில் பரிமாறி பரிமாறி கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பெரிய இடைவெளியையே ஏற்படுத்தி விடுகின்றன இந்த டிவி நிகழ்ச்சிகள்
பஸ்ஸில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் இளவட்டங்களை பார்த்து சில பெரியவர்கள் ''தம்பி.. உள்ளே இடம் கிடக்கும்போது ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து தொங்கிக்கிட்டு வரணும் என்று சொன்னா, ''யோவ் பெருசு.. ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு சொல்லிட்டு கெக்கபிக்கன்னு ஒரு கேவலமான சிரிப்பு வேற. இதெல்லாம் யாரு கத்துக் கொடுத்தா? சினிமா இல்லையா ?
மதிக்கவேண்டிய பெரியவர்களை மதிப்பதில்லை மரியாதை தரவேண்டிய ஆசிரியர்களுக்கு மரியாதை இல்லை இதன் பின்னணியில் இந்த சினிமாக்கள் இல்லன்னு மறுக்க முடியுமா
அட அதை விடுங்க ..
இந்த வாண்டுங்க என்னமா வயாடுதுக? வகுப்பிற்கு அறுவையான ஆசிரியர் யாராவது வந்து விட்டால் உடனே ஒரு கமென்ட்: வந்துட்டான்யா .. வந்துட்டான்யா
இதெல்லாம் என்கிருந்து கற்றுக் கொண்டார்கள் பாழாப்போன சினிமா விலிருந்து தானே?
அதற்காக தொலைக் காட்சியினால் ஒரு பயனும் இல்லைன்னு அடியோடு ஒதுக்கவில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல நிகழ்ச்ச்சிகளும் உண்டு
ஆனால் டிவியால் ஏற்படும் பாதகங்களை பட்டியல போட பக்கங்கள் போதாது; நாசங்களைக் கூற நாவு போதாது; கேடுகளை எடுத்துச் சொல்ல ஏடுகள் போதாது .
இப்படி ஏராளமான அபாயங்களை அடுக்கிக் கொண்டே போனால் அதன் முடிவாக வருவது டிவியால் அதிகம் விளைவது நாசமே நாசமே என்று தீர்ப்பளித்து இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன்

- செய்திகளை உடனுக்குடன் இருபத்து நான்கு மணி நேரமும் தெரிந்து கொள்கிறோம்
- டிஸ்கவரி போன்ற சேனல்களில் அதிசய விலங்குகள் பறவைகளின் செயல்பாடுகளிக் கண்டு அல்லாஹ்வின் ஆற்றலை வியக்குகிறோம்.
- சமையல் குறிப்புகள், அருமையான அலசல்கள், சூடான விவாதங்கள் சுவையான தகவல்கள்.
ஆனால் டிவியால் ஏற்படும் பாதகங்களை பட்டியல போட பக்கங்கள் போதாது; நாசங்களைக் கூற நாவு போதாது; கேடுகளை எடுத்துச் சொல்ல ஏடுகள் போதாது .
- மாணவச் செல்வங்களுக்கு கடுமையான மறதியை உண்டாக்கிவிட்டது.
- அவர்களின் மன வளர்ச்ச்சியை மங்கச் செய்து சுறுசுறுப்பில்லாத சோம்பேறியாக்கிவிட்டது
- குடும்ப உறவுகளை குலைத்துவிட்டது
- மான மரியாதை, நல்லொழுக்கம் இறை பக்தி இவைகளுக்கு இதயத்தில் இடமே இல்லாமல் செய்துவிட்டது.
- பெற்றோரை எதிர்த்து அன்னியனோடு ஓடிப் போய் குடும்பக் கவுரவத்தை காற்றில் பறக்கவிடுவதை சாதனையாக காட்டுகிறது டிவி.
- படிக்கும் பருவத்திலேயே பாய் பிரன்ட் கேள் பிரான்ட் வைத்துக்கொள்கிற அசிங்கத்தை அழகாகக் காட்டுகிறது
- கல்வி கற்க வேண்டிய வயதில் கலவியை காமத்தைக் கற்றுத் தருகிறது.
இப்படி ஏராளமான அபாயங்களை அடுக்கிக் கொண்டே போனால் அதன் முடிவாக வருவது டிவியால் அதிகம் விளைவது நாசமே நாசமே என்று தீர்ப்பளித்து இந்த பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன்
தொலைக்காட்சி உள்பட தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்குக் கிடைத்திருக்கும் அனைத்து வசதிகளில் சாதகங்களும் பாதகங்களும் இருக்கவே செய்கின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை நாம் நினைவில் கொண்டு அளவோடு பயன்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும். கட்டுரை அருமை.
பதிலளிநீக்கு