09 பிப்ரவரி, 2013

உத்தமிகளே உங்களைத்தான் ...


 உடலில் பர்தா; உள்ளத்தில் உறுதியான ஈமான்:
சென்ற தொடரில் பெண்களைப் பாதுகாக்க நவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தந்தோம்
ஆனால் உண்மையான உத்தமிகளின் உடலில் பர்தாவும் உள்ளத்தில் உறுதியான ஈமானும் இருந்தால் அவர்களைக் காக்க கருவிகள் தேவையில்லை
பர்தாவே அவர்களுக்கு பாதுகாப்புக் கவசம்தான் சமீபத்தில் லணடன் மாநகரில் நடந்த நிகழ்வு ஒன்று :
ஒரு ஒதுக்குப் புறம்பான ஓரப் பகுதியில் சில ரவுடிகள் ஒளிந்து நின்றுகொண்டு அந்த வழியாக வரும் பெண்களை
நோட்டமிட்டுக்கொண்டிருப்பர் யாராவது தனிமையில் பெண் வந்தால் அவளை அப்படியே கடத்திக் கற்பழிப்பது அல்லது நகையைக் களவாடுவது அவர்களின் வழக்கம். 
அன்றும் அப்படித்தான் வழக்கம் போல வாய்ப்பை எதிர்பார்த்து வாயைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றனர். ஒருத்தி கடந்து போனாள். விட்டுவிட்டார்கள் அடுத்து இன்னொருத்தி நடந்துபோனாள். அப்படியே அவளை அள்ளி காரில் போட்டுக்கொண்டு காரியத்தை முடிக்க கடும் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள் ஆனால் அதற்குள்ளாக ஒரு போலீஸ் வாகனம் விரைந்து வந்து அவர்களைத் துரத்திப் பிடித்தது 
பொதுவாக லண்டனில் பல இடங்களிலும் ரகசிய கேமிராக்கள் உண்டு அது இது போன்ற கயவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும் அது தெரியாமல் அந்த மூடர்கள் முட்டாள்தனமாய் முயற்சி செய்துகொண்டிருக்கும்போது காவலர்கள் வந்து கச்சிதமாய்ப் பிடித்து நீதிமன்றத்திலே நிறுத்தினார்கள் நீதிபதி விசாரித்தார்: நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள் உங்கள் நோக்கம் என்ன ?
அய்யா நாங்கள் ஒதுக்குபுறமாய் ஒளிந்து நின்றுகொண்டு தன்னந்தனியாக செல்லும் அப்பாவிப் பெண்களை அமுக்கிப் பிடித்து அவர்களை காலி செய்வது அல்லது கற்பழிப்பது அல்லது களவாடுவது இதுதான் எங்களின் திட்டம்''
'' அப்படியா அவ்வாறானால் இந்தப் பெண்ணுக்கு முன்பாக இன்னொருத்தி பர்தா அணிந்தவள போனாளே அவளை ஏன் நீங்கள் ஒன்றும் செய்யவில்லை ?
''அவள் தனியாக செல்லவில்லை அவளுடன் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் இரண்டு ஆசாமிகள் இணைந்து சென்றனர் எனவே அவளை விட்டுவிட்டோம் என்றனர் 
உடனே நீதிபதி அந்த கேமரா பதிவு வீடியோவை ஓடவிட்டார் . அதில் பர்தா அணிந்த அந்த பெண் அப்போது தனியாக செலவ்துதான் தெரிந்தது 
ஆனால் அந்த ரவுடிகள் அடித்துக் கூறினார் இல்லை நாங்கள் நன்றாக பார்த்தோம் அவளுடன் பாதுகாப்புக்கு இரண்டு பேர் சென்றதால்தான் விட்டோம் .''
இது எல்லோருக்கும் புரியாத புதிராக இருந்தது. ஆனால் நமக்கு இது புரியாத புதிரல்ல . ஒரு பெண் அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து பர்தா என்பது ஒரு பாதுகாப்பு கவசம் என்று உணர்ந்து விரும்பி அணிந்து சென்றால் அவளைப் பாதுகாக்க அல்லாஹ் அமரர்களைக் கூட நியமிப்பான் என்பது ஆச்சரியமல்ல .

பர்தா ஒரு கொடுமையா?:
பர்தா என்பது ஒரு கொடுமையான கடுமையான சட்டமாக இருக்குமானால் அது பெண்களின் மீதான அடக்குமுறையாக இருக்கமானால் அப்படி ஒரு அடக்குமுறையை அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ அனுமதித்திருக்கமாடார்கள் காரணம் அல்லாஹ்வும் தூதரும் அபலைப் பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பகை ?
இன்னும் சொல்லப்போனால் அபலைப் பெண்களின்மீது அக்கறை கொள்வதில் அண்ணல் நபிக்கு நிகர் கிடையாது . பெண்களுக்கு சொத்துரிமை இல்லாத வாழ்வுரிமை இல்லாதஅந்த அறியாமை காலத்தில் -ஏன் பெண்களை ஒரு மனிதப் பிறவியாகவே கருதாத அந்த காலத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் நானிலத்தில் அவதரித்து அந்த உரிமைகளை எல்லாம் மீட்டுக் கொடுத்தார்கள்
அவர்கள் உலகைப் பிரிவதற்கு முன்பு இறுதி ஹஜ்ஜிலே அரபா மைதானத்திலே ஒன்றே கால் இலட்சம் மக்கள் கூடியிருந்த அந்த கூட்டத்திலே தன் இறுதிப் பேருரை ஆற்றுகிறார்கள் அதில்கூட அவர்கள் அதிகம் வலியுறுத்திய அடிப்படையான விஷயம் பெண்களைப் பற்றியது.

فَاتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانِ اللَّهِ وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ وَلَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ فَإِنْ فَعَلْنَ ذَلِكَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ(صحيح مسلم)



''என் அருமை சமுதாயமே! கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

 خطب النبي صلى الله عليه وسلم النساء ذات يوم فوعظهن وأمرهن بتقوى الله والطاعة لأزواجهن ، وقال : « إن منكن من تدخل الجنة - وجمع بين أصابعه - ، ومنكن حطب جهنم ، - وفرق بين أصابعه - » ، فقالت الماردة أو المرادية : يا رسول الله ، ولم ذلك ؟ ، قال : « تكفرن العشير ، وتكثرن اللعن ، وتسوفن الخير » صحيح ابن حبان


பெண்களே ! நரகை விட்டும் தப்பித்துக் கொள்ளுங்கள் . உங்களை நான் நரகத்தில் அதிகமாக கண்டேன் . அதற்கு காரணம் உங்களில் சிலர் அதிகமாக ஏசுவதும் கணவனிடத்தில் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்வதுமாக இருக்கலாம். ஆகவே அதைத் தவிர்ந்துகொண்டால் நீங்கள் சுவனத்தில் சுகமாக இருக்கலாம். என்று சுலபமான வழியை சொல்லிக் கொடுத்தவர்கள் சுந்தர நபி ஸல் அவர்கள். ( ஸஹிஹ் இப்னு ஹிப்பான் )
நரகத்தின் கொடுமையிலிருந்து தப்பிக்க வழி காட்டிய நாயகம் அவர்கள் நாதாரிகளின் சில்மிஷங்களிளிருந்தும் தப்பிக்க நங்கையருக்கு நல்லதொரு வழிமுறையை வகுத்தார்கள் அதுதான் பர்தா.

கற்புக்கு களங்கம் மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து :

பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது.

தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது.
இது வெறும் யூகமல்ல ; இந்த ஆராய்ச்ச்சியின் விரிவான தகவலை நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் http://sadhak-maslahi.blogspot.in/2012/07/blog-post_28.html


பர்தாவை முழுவதும் நடைமுறைப் படுத்தினால் கன்னிகளின் கற்புக்கு மட்டுமல்ல ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் உண்டு.

இஸ்லாம் வலியுறுத்தும் பர்தா பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது. 2003ல் ஜெர்மனியில் மட்டும் 8000 பெண்கள் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அவர்களிடம் கேட்கப்பட்டது : நீங்கள் கலிமா சொன்னதற்கு என்ன காரணம்?
அவர்கள் சொன்ன வாக்குமூலம் என்ன தெரியுமா? 
மேற்கத்திய கலாச்சாரம் எங்களை சீரழித்துவிட்டது. இதனால் பெண்கள் மானமரியாதையை இழந்து மன அமைதியைத் தொலைத்து அணு அணுவாக செத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று இஸ்லாத்தை ஏற்று பர்தா அணிந்து கொண்டதால் பாதுகாப்பும் உறுதியாகிவிட்டது; கண்ணியமும் கிடைத்துவிட்டது'' என்றார்களாம் அந்த பெண்கள்.

கவர்ச்சியான ஆடைகளும் கள்ள உறவுகளும் :


சமீபத்தில் (12 பிப்ரவரி 2013) அன்று தினசரிகளில் வெளியான செய்தி கவர்ச்ச்சிகரமான ஆடைகளால் பெண்களுக்கு நேரும் ஆபத்தை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது :
பீகார் மாநிலத்தில் உள்ள மக்னுபூர் கிராமத்தில் இளம்பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மக்னுபூர் என்னும் கிராமம் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்திலிருந்து 3 இளம் பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, தற்போது அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

மாயமான 3 இளம்பெண்களின் நிலையை குறித்து கிராம மக்கள் விவாதித்தபோது, மூன்று பெண்களும் எப்போதும் ஜீன்ஸ், டி - ஷர்ட் அணிந்து, அதிக நேரம் செல்போனில் பேசிகொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இனி இளம் பெண்கள் யாரும் ஜீன்ஸ், டி - ஷர்ட் உள்ளிட்ட உடைகளை அணியக்கூடாது என்று மக்னுபூர் கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனுடன் இளம்பெண்கள் செல்போன் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்னுபூர் கிராமத்தை சேர்ந்தவர் கூறுகையில், இளம் பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் போன்ற உடைகளை அணிவதும், செல்போனில் அடிக்கடி உரையாடுவதும் தான் காதலில் சிக்கிக்கொள்ள முக்கிய காரணம். இதனால் பல பெண்கள் வீட்டிலிருந்து வெளியேறி ஆதரவற்ற நிலையில் துன்பப்படுகிறார்கள்.

இவையனைத்தையும் கருத்தில் கொண்டுதான் எங்களது கிராமத்தில் இளம் பெண்கள் ஜீன்ஸ், டி - ஷர்ட் போன்ற உடைகளை அணிவதற்கும், செல்போன் உபயோகிபதற்கும் தடை விதித்துள்ளோம். இந்த தடையை அமல்படுத்த 11 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளோம் என தெரிவித்தனர்.

பீகாரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 20 கிராம பஞ்சாயத்துக்கள் இளம் பெண்கள் செல்போனில் பேச தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/newsworld/news/national/1302/12/1130212024_1.htm

பயணிப்போரின் பாதுகாப்புக் கவசம் ஹெல்மெட் என்றால் 
பாவையரின் பாதுகாப்புக் கவசம் பர்தா என்பதை ஆதாரங்களை அடுக்கித்தானா அறியப்படவேண்டும்?

ஆட்சேபனைகளும் அர்த்தமுள்ள பதில்களும் :


  • கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் பர்தாவைப் போட்டுக்கொண்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு முக்காட்டை மூடிக்கொண்டு வீதியிலே நடக்கனும் என்று வியாக்கியானம் பேசுவது நல்லாவா இருக்குவெயில்ல பர்தா அணிந்தால் வெக்கையா இருக்காதா?


  •  நாம கருப்பா அசிங்கமா இருந்தா பர்தா போட்டு மறைக்க வேண்டியதுதான். சிவப்பா அழகா இருக்கும்போது ஏன் பர்தா போடனும்? பார்த்து ரசிக்கத்தானே அழகு?''


  • பர்தா என்பது ஓர் அடிமைத்தனம் அல்லவா? பெண்களின் வீரமெல்லாம் பர்தாவுக்குள் அடங்கி ஒடுங்கிப் போகிறதே.. இதை எப்படி அனுமதிக்க முடியும்?

இதுபோன்ற அநேக கேள்விகளுக்கு கீழ்காணும் இந்த கட்டுரையைக் காணவும்: பர்தா அவசியமா? அநாகரீகமா?--விவாதம்

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பதிவைப் பார்த்ததும் படாரென கருத்து எழுதி பதிவர்களை உற்சாகப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு நன்றி

      நீக்கு
    2. கண்ணியத்திற்குரிய ஜின்னா மஸ்லஹி,
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும். மிக நன்று, நிகழ்ச்சிகளின் ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ரியாஸ் அவர்களே
      அனைத்திற்கும் இயன்ற அளவு
      ஆதாரங்கள் தந்துள்ளேன் லண்டன் நிகழ்ச்சி
      சில நாட்களுக்கு முன் படித்தது
      எதில் படித்தேன் என்று நினைவில்லை

      நீக்கு
  3. பதில்கள்
    1. மவ்லானா
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...