ஃபிரண்ட்ஸ் ஹவ் ஆர் யூ?''
''ஃபைன். அது சரி… அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஆரம்பித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த அகிலத்திலேயே அழகான வாழ்த்தும் அருமையான காணிக்கையும் அதுதானே தோழி..''
சலாமெல்லாம் இருக்கட்டும்..இதுஎன்ன வினோதமான ட்ரெஸ்.?சிங்கிச்சான் சிங்கிச்சான் கருப்புக் கலரு சிங்கிச்சான்னு.. நல்லாவா இருக்கு?''
(பர்தாவை கிண்டல் செய்கிறார்)
‘’அதுஎன்ன அப்படி கேட்டுப்புட்டே.. விஷயம் தெரியாதா உனக்கு? நமது இஸ்லாமிய பண்பாடே இதுதானே? பல வருடமாக நமதூர் மதரஸாவில் இதுதானே யூனிஃபார்ம்? இப்போது வெளியூர் செல்லும் தாய்மார்கள் கூட தவராமல் அணிந்து செல்வதைப் பார்த்து பக்கத்து ஊர்களில்லொம் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்களாமே அதெல்லாம் உன் காதுக்கு வரலையா?
‘’வந்தது..வந்தது.. என்னதான் சொன்னாலும் எனக்கு என்னமோ இந்த பர்தா மேல இஷ்டமே இல்லப்பா!
‘’ஏன் தோழி அப்படி சொல்றெ..’’
‘’பின்ன என்னப்பா.. கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் பர்தாவைப் போட்டுக்கொண்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு முக்காட்டை மூடிக்கொண்டு வீதியிலே நடக்கனும் என்று வியாக்கியானம் பேசுவது நல்லாவா இருக்கு? வெயில்ல பர்தா அணிந்தால் வெக்கையா இருக்காதா?
‘’தோழி.. உனக்கு வெக்கையப் பத்தி கவலை. எங்களுக்கு வெக்கத்தப் பத்தி கவலை. வெயில்ல பர்தா அணிந்தால் வெக்கையா இருக்குமேன்னு ஆதங்கப் படுகிறாய். ஆனால் அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்தால் நரகத்தின் வெப்பம் எவ்வளவு கடுமையாக இருக்கும் தெரியுமா?
அப்படித்தான் தோழி.. சமீபத்திலே சிரியாவிலே டமாஸ்கஸ் பல்கலைக் கழகத்திலே பர்தா அணிந்த மாணவிகளைச் சந்தித்து ஒரு நிருபர் கேட்டார். ''கடும் வெயிலிலும் எப்படியம்மா பர்தா அணிந்து நடமாடுகின்றீர்கள்?''
அதற்கு அந்த மாணவி சொன்ன பதில் என்ன தெரியுமா?
அதற்கு அந்த மாணவி சொன்ன பதில் என்ன தெரியுமா?
''குல் நாரு ஜஹன்னம அஷத்து ஹர்ரா’’
உலகத்தின வெப்பத்தை விட நரகத்தின் வெப்பம் கடுமையானது; கொடுமையானது. மஹ்ஷர் மைதானத்தின் வெப்பம் பயங்கரமானது. உலகிலே ஒழுக்கமாக வாழாவிட்டால் நரக நெருப்பில் போட்டு தண்டிக்கப்படுவோமே தாங்கமுடியுமா? அதனால் ஒருபோதும் புர்காவைப் புறக்கணிக்க மாட்டோம்’’ என்று அந்த மாணவி கூறியிருக்கிறார். உலகப் படிப்பு மாணவிக்கே இவ்வளவு இறையச்சம் இருக்கும்போது மதரஸா மாணவி நீ இப்படி மறுத்துப் பேசலாமா?''
அதில்லப்பா! முன்ன பின்ன பர்தா போட்டு பழக்கமில்ல. புதுசா போட வெக்கமா இருக்குல்லெ?’
''அட்ரா சக்கை.. அப்படிப் போடு அருவாள.. அல்லாஹ்வின் கோபத்தையும் அண்ணலாரின் சாபத்தையும் அதிகமாக பெற்றுத் தரும் அரைகுறையான ஆடைகளை அணிவதற்கு வெட்கமில்ல.. .மெல்லிசான உடையணிந்து மேக்கப்புகளை போட்டுக்கொண்டு ஊரெல்லாம் சுற்றிவர உள்ளத்துல உறுத்தல் இல்ல… பெண்ணியத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றும் பர்தாவை அணிவதற்கு மட்டும் வெட்கமாக இருக்கிறதா? நல்லா இருக்கும்மா உன்னோட வெட்கம்.!''
''சரி.. நாம கருப்பா அசிங்கமா இருந்தா பர்தா போட்டு மறைக்க வேண்டியதுதான். சிவப்பா அழகா இருக்கும்போது ஏன் பர்தா போடனும்? பார்த்து ரசிக்கத்தானே அழகு?''
ஆமா ரசிக்கத்தான் அழகு! யாரு ரசிக்க?
கண்டவனெல்லாம் கண்டு ரசிக்கவா?
கட்டிய கணவன் கண்டு ரசிக்க !
அந்நிய ஆடவருக்கெல்லாம் அழகைக் காட்டவா ஆண்டவன் படைத்தான்?
பாத்திமா நாயகிக்கு இல்லாத அழகா?
அவர்கள் என்ன இப்படியா அலைந்தார்கள்?
வீட்டில் கணவருக்கு மட்டும் கண்ணுக்கு அழகாய் காட்சி தந்தார்கள். வெளியிலோ யாருமே அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு கடினமான உடையல்லவா உடுத்தியிருந்தார்கள்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு சென்றிருந்தபோது நரகத்தில் ஒரு காட்சியைக் கண்டார்கள்.சில பெண்கள் அவர்களுடைய இரண்டு கால்களுக்கிடையில் நெருப்பு மூடப்பட்டு உடல் உறுப்புகளெல்லாம் உருகி ஓடிக்கொண்டிருந்தது. இவர்கள் யார்? ஏன் இப்படி வேதனை செய்யப்படுகிறார்கள் என்று நபியவர்கள் கேட்டதற்கு இவர்கள்தான் அந்நிய ஆடவர்கள் பார்ப்பதற்காக தங்களை அலங்கரித்துக்கொண்டவர்கள் என்றுசொல்லப்பட்டது.
அதுமட்டுமல்ல தோழி... எந்த பெண் அந்நிய ஆடவன் பார்ப்பதற்காக ஒரே ஒரு முறை கண்ணுக்கு மை தீட்டினாலும் மறுமையில் அல்லாஹ் அவளது முகம் முழுவதையும் கன்னங்கரேரென்று ஆக்கிவிடுவான். அவளது கப்ரை தீக்கிடங்காக மாற்றிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அப்படியிருக்க அந்நிய ஆடவருக்கு நம் அழகைக் காட்டலாமா தோழி?
''சரி.. அழகைக் காட்டவேண்டாம்.. வீரத்தையுமா காட்டக்கூடாது ?
''ஏன் காட்டக்கூடாது ? தாராளமாகக் காட்டலாமே !
''பர்தா போட்டால் எப்படியம்மா வீரம் வெளிப்படும்?''
இது என்னடியம்மா அதிசயமா இருக்கு ? பர்தா போடுறதுக்கும் கோழைத்தனத்துக்கும் என்ன சம்மந்தம்?
''ஆமாம் பர்தா என்பது ஓர் அடிமைத்தனம் அல்லவா? பெண்களின் வீரமெல்லாம் பர்தாவுக்குள் அடங்கி ஒடுங்கிப் போகிறதே.. இதை எப்படி அனுமதிக்க முடியும்?
அதுசரி.. இவ்வளவுதானா நீ படிச்சது? எத்தனை பேரைக் காட்டவேண்டும் உனக்கு? புர்கா போட்டுக்கொண்டே புரட்டி புரட்டி எடுக்கும் வீராங்கனைகள் ஒன்றா இரண்டா? இஸலாமிய வரலாற்றைப் புரட்டிப்பார்!
மொகலாய மன்னர் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹானைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? அவர் புலிகளை அடக்கிய வீரப் பெண்மனியல்லவா? ஒரு முறை தன்னந்தனியாக ஒரேசமயத்தில் 4 புலிகளை வேட்டையாடிவிட்டு வெற்றியுடன் திரும்பி வந்தாராம். பல போர்களிலும் வீரமாகப் போர் புரிந்துள்ளார் நூர்ஜஹான். அவரது வீரத்திற்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை பர்தா !
''அதுமட்டுமா காதிஸிய்யா போரிலே ஒரு ஸஹாபிப் பெண்மனி தனது நான்கு புதல்வர்களுக்கு வீரத்தைச் சொல்லிக் கொடுத்து போருக்கு தயார் செய்து அனுப்பினாரே அந்தப் பெண்மனி புர்காவைப் புறக்கனித்தவரா?
''ஸிஃப்பீன் போரை தலைமை தாங்கி நடத்திய அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) வீரத்தில் குறைந்தவரா? பர்தாவைத் தூக்கி எறிந்துவிட்டுத்தான் வீரத்தைக் காட்டினார்களா?''
தோழி.. அதெல்லாம் அந்த காலம். இன்றைக்கு நாகரீகம் வளர்ந்துவிட்டது; சுதந்திரம் கூடிவிட்டது. கலர்கலரா ஆடைகள்; டிசைன் டிசைனா சேலைகள்...இதெல்லாம் அணிந்து சுதந்திரமா திரியிறத விட்டுட்டு எங்கே போனாலும் புர்கா போடு புர்கா போடுன்னு சொல்லி சுதந்திரத்தைப் பறிக்கலாமா?
''என்னது புர்கா அணிந்தால் சுதந்திரம் பறிபோகுதா? சரி அப்படியே வைத்துக்கொள்வோம். அணியாவிட்டால் மானம் பறிபோகுமே.. அது பரவாயில்லையா? இந்த இந்தியாவில் மட்டும் 50 நிமிடங்களுக்கு ஒரு பெண் என்ற கணக்கில் மானபங்கப்படுத்தப்படுகிறாள்.
பெண்கள் இந்தநாட்டிலே தங்கள் மானமரியாதையை இழக்கின்றனர்.இந்த கொடுமைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன?
தினமலர் பத்திரிக்கை சொல்கிறது ஈவ்டீசிங் கொடுமைகளுக்கும்பெண்கள் சீரழிக்கப் படுவதற்கும் மிக முக்கிய காரணம் அவர்கள் அணிகின்ற அரைகுறையான ஆடைகள்தான்.
''ஆனால் இஸ்லாம் வலியுறுத்தும் பர்தா பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது. 2003ல் ஜெர்மனியில் மட்டும் 8000 பெண்கள் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர். அவர்களிடம் கேட்கப்பட்டது : நீங்கள் கலிமா சொன்னதற்கு என்ன காரணம்?
அவர்கள் சொன்ன வாக்குமூலம் என்ன தெரியுமா?
மேற்கத்திய கலாச்சாரம் எங்களை சீரழித்துவிட்டது. இதனால் பெண்கள் மானமரியாதையை இழந்து மன அமைதியைத் தொலைத்து அணு அணுவாக செத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இன்று இஸ்லாத்தை ஏற்று பர்தா அணிந்து கொண்டதால் பாதுகாப்பும் உறுதியாகிவிட்டது; கண்ணியமும் கிடைத்துவிட்டது'' என்றார்களாம் அந்த பெண்கள்.
''அடடா.. புர்காவில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது புரியாமல் இவ்வளவு நாள் இருந்துவிட்டேனே. பர்தாவை விரும்பி பல பெண்கள் இஸ்லாத்தில் இணைந்துகொண்டிருக்கும்போது முஸ்லிமாக பிறந்த நான் பர்தா அணியாமல் இருக்கலாமா? இதோ இப்போதே சென்று இந்த கண்றாவியை எல்லாம் கழட்டிப் போட்டுவிட்டு கண்ணியமான பர்தாவை அணியப்போகிறேன்.
மாஷா அல்லா!
பதிலளிநீக்குநல்ல விவாதம்-
நல்ல கருத்துகளும்!
நன்றி நண்பரே..
பதிலளிநீக்குஉங்களின் ஊக்கமே
எங்களின் ஊட்டச்சத்து.
Masha allah Kalathuku thevaiyana visayangalai kodukireerhal allah ethaikondu pala penkaluku hidhayathai valnguvanaha, allah ungalathu intha service sai Eatruk kolvanaha.
பதிலளிநீக்குالحمد لله
பதிலளிநீக்கு