கலிபோர்னியாவைச் சேர்ந்த இஸ்ரேலிய அமெரிக்கன் ஒருவன் எடுத்த இஸ்லாமியர்கள் குறித்த படமானது உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் படம் இருப்பதால் இஸ்லாமியர்கள் குமுறி வருகின்றனர். பல்வேறு நாடுகளிலும் அமெரிக்க அரசையும், அதன் தூதரகங்களையும் குறி வைத்து தாக்குதல்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன.
பாகிஸ்தானிலும் கொந்தளிப்பான நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சமாதானப் பேச்சை விளம்பரமாக ஒளிபரப்பு செய்யும் பணிகளில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. இதற்காக அது பாகிஸ்தான் டிவி நிறுவனங்களுக்கு விளம்பரங்களைக் கொடுத்து வருகிறது. அதில், ஒபாமாவும், ஹில்லாரி கிளிண்டனும் பேசும் பேச்சுக்கள் இடம் பெற்றுள்ளன. இதற்காக இதுவரை 70 ஆயிரம் டாலர் வரை செலவிட்டுள்ளதாம் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம்.
ஐநா சபையையே ஆட்டிப்படைக்கிற அமெரிக்கா தன் நாட்டைச் சார்ந்த ஒரு பிரஜை எடுத்த படத்தை தடை செய்யமுடியவில்லையாம். அவனைத் தண்டிக்கமுடியவில்லையாம். யாரு காதுல பூ சுத்துறீங்க?
nalla sonneenga ....
பதிலளிநீக்குasarath!
nanri seeni
நீக்குunkaL varavukkumkaruththukkum
nanari