தகவல்: சதக் மஸ்லஹி
படங்கள்: முஹம்மது மதாஸ்
நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் சமீபத்தில் நம் ஒப்பிலானிலும் ஒரு சில குழந்தைகளைத் தொட்டதைத் தொடர்ந்து ஒப்பிலான் ஊராட்சி சார்பாகவும் ஜமாத் சார்பாகவும் சில துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜும்ஆ மேடைகளில் இது பற்றி அதிகம் பேசப்பட்டது.
கிணறுகளிலும் பாதையோரங்களிலும் மருந்து தெளிக்கப்பட்டது. தெருக்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளபட்டது.
சுத்தம் சுகாதார விழிப்புணர்வு பேரணி:
இன்று (02-06-2012 சனி) மாலை 4 மணி அளவில் சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பள்ளிவாசலிலிருந்து புறப்பட்ட இந்த பேரணியில் ஜமாஅத்தார்கள், மதரஸா மாணவ மாணவியர், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி மன்றத் தலைவர், ஜமாஅத்தின் உதவித் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பெருமக்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்,
- சுகாதார விழிப்புணர்வு பற்றிய முழக்கங்களை கோஷமிட்டுக்கொண்டே பேரணி புறப்பட்டுச் சென்றது.
- சுகாதார விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கரங்களில் ஏந்தியவர்களாக வந்த பேரணியை ஒப்பிலான் இஸ்லாமிய வாலிப சங்கத்தினர் குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர்.
- அனைத்து தெருக்களிலும் உலா வந்த பேரணி இறுதியாக பள்ளியில் வந்து நிறைவுற்றது.
பேரணியில் முழங்கப்பட்ட டெங்குக்கு எதிரான பத்து கட்டளைகள்:
குடிநீரைக் காய்ச்சி
வடிகட்டி அருந்துவோம்!
டெங்கு போன்ற காய்ச்சலை
எங்குமின்றி துரத்துவோம்
பெருகிக் கிடக்கும் கூளங்கள்
பேரழிவின் மூலங்கள்!
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கூட்டிப் பெருக்கித் தள்ளுங்கள்!
ஈ மொய்க்கும் பண்டங்கள்
நோய் நொடியின் சொந்தங்கள்!
தெருக்களில் தேங்கும் கழிவு நீர்
கொசுக்கள் பெருகும் அழிவு நீர்!
குடியை ஒழிப்போம்!
செடியை வளர்ப்போம்!!
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்!
நாட்டுக்கு நலன் புரிவோம்!!
காய்கறிகள் உணவில் சேர்த்து
நோய் நொடியைத் துரத்துவோம்!
அளவோடு உண்டு
நலமோடு வாழ்வோம்!
சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இடலாமே! அல்லது கீழ்காணும் தளங்களில் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே!
nalla pakirvu!
பதிலளிநீக்குseeni
நீக்குunkaL varavukkum
karuththukkum
mikka nanRi
nalla iruku
பதிலளிநீக்குok, brother, thanks
நீக்குOPPILAN ROCKS♥♥♥
பதிலளிநீக்கு