26 ஏப்ரல், 2012

இளம் மவ்லவி களம் இறங்கினார்



அன்பிற்கினிய ஆலிம் நண்பர்களே!

பொதுவாக சங்கைக்குரிய ஆலிம் பெருமக்கள் தங்களின் வீரிய உரைகளை ஜும்ஆ மேடைகளிலும் மீலாது மேடைகளிலும் மதரசாக்களிலும் விவாத அரங்குகளிலும் நிகழ்த்தி அதை மக்கள் நேரடியாகவும் வீடியோ ஆடியோக்கள் மூலமாகவும் கேட்டுப் பயன்பெற்றுக் கொண்டிருப்பது உண்மை.
ஆனால் அதையும் தாண்டி இன்று இண்டெர்நெட்டிலும் உலா வந்து குறுகிய நேரத்தில் தங்களின் கருத்துகளை உலகம் அறியச் செய்வதில் சில ஆலிம்கள் முனைப்பு காட்டுவது பாராட்டுக்குரியது மட்டுமல்ல.. காலத்தின் கட்டாயமும் கூட.

காரணம், இன்று மற்ற சமுதாயத்து மக்களாகட்டும்.. நம் சமுதாயத்து நண்பர்களாகட்டும்.. மார்க்க சட்ட நுணுக்கங்களைக்கூட இண்டெர்நெட்டில் பார்த்து தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிற காலம் இது. ஏனெனில் எந்த ஒரு தகவலாக இருப்பினும் மிகக் குறைந்த அவகாசத்தில் நிறைய தகவல்களை உடனுக்குடன் வழங்குவதுதான் இணையம்.

இன்று இந்த இணையத்தின் மூலம்தான் மாற்றுக் கொள்கையுடைவர்கள் சமுதாயத்தில் குழப்பத்தை விரைவாக விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது மிகைப் படுத்தப்பட்ட செய்தியல்ல. நீங்கள் வேண்டுமானால் இணையத்தில் இதை சோதனை செய்து பாருங்கள்.

 மார்க்கம் சம்பந்தப்பட்ட ஏதாவது குறிச் சொல்லை கூகிள் போன்ற தேடுபொறிகளில் தேடிப்பாருங்கள். அது பல இணைய முகவரிகளைக் காட்டும். அதில் அதிகமானது மாற்றுக் கொள்கையுடவர்களின் தளங்களாகத்தான் இருக்கும். சுன்னத் வல்ஜமாஅத்தினரின் தளங்களைக் காண்பது மிக மிக அரிது.

ஆனால் குழப்பவாதிகள் எங்கெல்லாம் ஊடுருவியிருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊருக்கு இரண்டு மூன்று இணைய தளங்கள், ப்ளாக்கர் என்ற வலைப் பதிவுகள் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் மார்க்கத்தில் புதிய புதிய சட்டப் பிரச்சனைகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை இணையத்தில் படிக்கிற மாற்று மத அன்பர்கள் கூட இதுதான் இஸ்லாம் என்று விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்த அபாய நிலையிலும் கடமையுள்ள ஆலிம்கள் சிலர் இண்டெர்நெட்டை ஒரு வைரஸ் கிருமியைப் போல நினைத்து ஒதுங்கி இருப்பது பொருத்தமல்ல என்பதை அதிகமான அறிஞர் பெருமக்கள் உணர்ந்துவிட்டார்கள். அதன் எதிரொலியாக ஒரு சில ஆலிம்கள் தங்களுக்கென ஒரு வலைப் பதிவை அல்லது இணைய தளத்தை உருவாக்கி அவ்வப்போது பயனுள்ள தகவல்களை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அதில் என் பார்வையில் பட்ட சில தளங்கள்: 


இவர்களுக்கு மிக்க நன்றி. 
அந்த வகையில் இப்பொழுது ஒரு இளம் மவ்லவி களம் இறங்கியிருக்கிறார். இணைய தளம் இறங்கியிருக்கிறார்.
அவர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி அவர்கள். இரமநாதபுரம் நகர & வட்டார செயலாளராக சேவை செய்யும் இவர் சுழன்று சுழன்று பணியாற்றுவதில் வல்லவர். குணத்தில் நல்லவர். இன்ஷா அல்லாஹ் இனி அவரது படைப்புகளும் நம் வலைப் பூவில் அரங்கேறும். அதன்மூலம் இந்த தளம் மெருகேறும். 

2 கருத்துகள்:

  1. மாஷா அல்லா!

    நல்ல விஷயம்!
    உங்கள் மூலம் அறிந்ததில்-
    சந்தோசம்!

    அல்லா நம்மை பொருந்தி
    கொள்வானாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சீனி. உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...