29 ஏப்ரல், 2012

இக்கால இப்றாஹீம்கள்





உலமாக்களே!
மதரசா எனும் அரண்மனையில் பிறந்த 
மவ்லவிகள் எனும் மன்னர்கள் நீங்கள். 
குர்ஆன் கோட்டைக்குள் ஹதீஸ் குடையின் கீழ் 
கோலோச்சுகின்ற காரணத்தால் 
நாங்கள் உங்களுக்கு குடிமக்கள். 


ஓதுதல் என்னும் நண்ணீர் கொண்டு 
உங்களின் இதயங்கள் இருப்பதால்தான் 
உங்கள் தூக்கம் கூட தொழுகைக்கு சமம். 
நீங்கள் ருகூவுக்குப் போகும் முன் 
ரூஹே போனாலும் நாங்கள் முந்தக் கூடாது. 


சூரியன் உதிப்பதே நீங்கள் 
சுப்ஹுக்கு எழுவதைக் கண்டுதான். 


உலமாக்களே! 
மதரசா சூளையில் 
மலர்ந்த செங்கற்கள் நீங்கள். 
நீங்கள் அடிக்கல்லாக 
அடுக்கப் படவில்லையானால் 
இறையச்சக் கோட்டை 
எழுவது எப்படி? 


உலகம் முழுவதும் செல்ல 
உங்களுக்கு தடையில்லை. 
காரணம், 
நீங்கள் ஆன்மீகத்தில் 
ஆசாத் விசா பெற்றவர்கள். 


உங்களைக் 
கண்ணியப் படுத்தும் போதெல்லாம் 
நாங்கள் 
புண்ணியப் படுத்தப் படுகிறோம். 


தீனுக்கு எதிரென்றால் 
தீக்குண்டத்திற்கும் அஞ்சாத 
இக்கால இப்றாஹீம்கள் நீங்கள்.


உலமாக்களே!
நீங்கள் கூடினால் 
அது எங்களுக்கு தேன்கூடு. 
நீங்கள் பேசினால் 
அது எங்களுக்கு பேரீச்சம் பழம். 


பலர் வருமானத்தால் வளர்கிறார்கள் 
தேய்வதற்காக... 
நீங்களோ தேய்கிறீர்கள் 
சமுதாய வளர்ச்சிக்காக! 


உலமாக்களே!  நீங்கள் 
ஆடம்பர சாட்டைக்கு 
ஆடாத பம்பரம். 
ஆன்மீக காற்று சேர 
அகல விரியும் பாய்மரம்.


அல்லாஹ்வின் அருள்தனை சுமந்திருக்கும் 
அண்ணல் நபியின் வாரிசுகளே !
உங்கள் மறை வாழ்க்கை வெற்றி பெற
மனதாற வாழ்த்துகிறேன்.

4 கருத்துகள்:

  1. ஆலிம்களை பற்றிய-
    அருமையான-
    கவிதை!!

    நீங்கள் வெகுண்டெழுந்தால்-
    சமூகமும்-
    மாறும் இன்ஷா அல்லா!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் சீனி..
    எழுந்து நடந்தால்
    எரிமலையும் சிரம் பணியும்
    சும்மா கிடந்தால்
    சிலந்தி வலையும் நம்மை
    சிறை பிடிக்கும் என்று
    சும்மாவா சொன்னார்கள்?

    பதிலளிநீக்கு
  3. பின்னே.. ஆலிம்கள்னா சும்மாவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்..ம்..
      நபிமார்களின் வாரிசுகள் என்று
      நபியின் வாயாலே வாழ்த்துப்
      பெற்றவர்களாயிற்றே.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...