07 மார்ச், 2012

தீராத விளையாட்டுப் பிள்ளை (பாம்புடன்)


ஒப்பிலான் மையவாடியில் பாம்புடன் ஒரு செல்ல விளையாட்டு.
விளையாடுபவர்: பள்ளியின் துணை இமாம் புரோஸ்கான்.


ஒடிய பாம்பை இவர் பிடிக்கப் போக அது ஒரு பொந்துக்குள் ஓடி மறைந்துகொள்ள முயற்சித்தது. விடுவாரா புரோஸ்கான்? பிடித்து இழுத்து மரத்தில் இரண்டு சாத்து.


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த பாம்பே நடுங்கும் என்றால் இவரைப் பார்த்துத்தான்.


ஒரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா?
ஒப்பிலான் பள்ளிக்கு பணிபுரிய வரும் ஒவ்வொருவருமே விலங்கியல் நிபுணராகவே அமைந்துவிடுவதுண்டு. இதற்கு முன்பு இந்த பள்ளியில் பணிபுரிந்த ஹாஃபிழ் நூருல் முஸ்தகீம் பல்லிக்கு கொல்லி வைத்த புள்ளியாக விளங்கினார். ஆமாம். நமது பள்ளியில் குடிகொண்டிருந்த அத்தனைப் பல்லிகளும் இவர் வந்த இரண்டே நாட்களில் எமலோகம் சென்றுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதற்கு பிறகு பல்லிகளின் வாடையே நமது பள்ளியில் இல்லை.
இப்பொழுது புரோஸ்கானின் இந்த விளையாட்டால் இனி பாம்புகளும் இந்த பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்காது என்று ஒப்பிலான் மக்கள் நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...