08 பிப்ரவரி, 2012

நல்ல தூக்கம் வேண்டுமா?

                                         -டாக்டர் ஆ. தாமரைச் செல்வன்


மனிதனுக்கு மிகவும் இன்றியமைதாது மூன்று.
1. உண்ண உணவு 2. உடுத்த உடை. 3. நல்ல தூக்கம்

நல்ல தூக்கம் மகிழ்ச்சியும் இருந்தால் மனிதன் மிகவும் இளமையாக இருப்பான். முதுரை அவனை நெருங்காது என்று மிகப் பெரும் தத்துவ ஞானி பிளாட்டோ கூறுகிறார்.. அது நூற்றுக்கு நூறு உண்மை. இது அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் வாகனம் கூட சில நேரங்களில் நிறுத்தப்பட்டு ஓய்வளிக்கப் படுகிறது. அவை உலோகத்தால் ஆனவைதானே என்று நினைத்து ஓய்வு தராவிட்டால் என்ஜின் பழுதாகிவிடும். அது போலவே நாள் பூராவும் மனதாலும் உடலாலும், மனிதன் உழைக்கிறான். அவனக்கு ஓய்வு என்கிற தூக்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. தூக்கத்தை குறைத்தாலும் அதிகப்படுத்தினாலும் உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுகிறது. இது அனைவரும் உணர்ந்த செய்தி.

மெத்தைய வாங்கினேன்

தூக்கத்தை வாங்கலை

என்ற பாடல் நம் காதுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. இதற்கு அர்த்தம்தான் என்ன? தூக்கமின்மைக்கு என்ன காரணம். தூக்கத்தின் அளவு மனிதனுக்கு அவரவர் வயதிற்கேற்ப மாறுபடுகிறது. பிறந்த குழந்தைக்கு 16 மணியிலிருந்து 20 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது.

வயது வந்தவர்களுக்கு 7 மணி முதல் 9 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. வயதானவர்களுக்கு 5 மணி முதல் 6 மணி வரை தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கமின்மைக்கான காரணங்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.


  • தவறான பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் சூழ்நிலை.
  • மனநிலை காரணமாக
  • உடல் நோயின் காரணமாக

உணவில்லாமல் கூட மனிதன் ஓரிரு நாள் இருந்து விடலாம். ஆனால் ஒரு நாள் தூக்கம் கெட்டாலும் அதன் பாதிப்பு ஒரு வாரம் மனதையும் உடலையும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மருத்துவ அறிவியல் கூற்று.

 தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் சூழ்நிலை.


1۔தேநீர், காபி மதுபானங்கள், போதை பொருட்கள், புகை பிடிபோர் மற்றும் புகையிலையை வாயில் மென்று கொண்டிருப்போர் அவர்களுக்கெல்லாம் தூக்கம் என்பது குறைபாடாகவே இருக்கும். பாதிப்பை ஏற்படுத்தும் பல நோய்களை உண்டாக்கும். குறிப்பாக நரம்பு தளர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்துகிறது. ஆகவே மேற்கண்டவற்றை தவிர்க்கவும்.

2. நல்ல காற்றோட்டமில்லாத படுக்கையறை அதிக வெளிச்சம் உள்ள படுக்கை அறை, அதிக சத்தம் உள்ள படுக்கை அறைகளில் உள்ளவர்களுக்கு தூக்கமின்மை ஏற்பும். உதாரணமாக டேப்ரிக்கார்டர், தொலைக்காட்சிப் பெட்டி தொலைபேசி மற்றும் அலைபேசி படுக்கையறையில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும். அவைகள் தூக்கத்தை கெடுக்கும்

3. இரவில் அதிகமான உணவு உண்பதாலும் குறிப்பாக 11 மணிக்கு மேல் உணவு அருந்திஇட்டு உடனடியாக உறங்கபோவது அல்லது உணவு உண்ணாமல் பட்டினியாக தூங்குவது தூக்கத்தை கெடுக்கும். பயத்தின் காரணமாகவும், தூக்கத்தை கெடுக்கும் அல்லது நாளைந்து நபர்களுடன் படுக்கையில் படுத்தாலும் சிலருக்கு தூக்கத்தை சிதறடிக்கும். நபர்களுக்கும் , அதிக உடல உழைப்பு உள நபர்களுக்கும் அதனால் ஏற்படும் அசதி உடல்வலி காரணமாக தூக்கம் சிரமப்படும்.

நல்ல சுகாதாரமற்ற படுக்கை, கடுமையான குளிர், கடுமையான வெயில் காணமாக தூக்கமின்மை ஏற்டும். பகலில் தூங்குபவர்களுக்கும் இரவு வேளை பணியில் ஈடுபடுபவர்களுக்கும் தூக்கம் பாதிக்கப்படும்.

  தூக்கமின்மை மனநிலை காரணமாக

தேர்வுக்கு போகும் மாணவ மாணவிகளுக்கும்,தேர்வில் தோல்வியுற்றமாண மாணவிகளுகும்தூக்கம் தடைபடும்.

காதலில் ஈடுபட்டிருப்பவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள், நல்ல நண்பர்களை இழந்தவர்களுக்கும் தூக்கம் என்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்.

இரவில் மர்ம நாவல் படித்தவர்களுக்கும், திகலூட்டும் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கும் பயம் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். பெண்ணின் திருமணத்தை நடத்தவிருக்கும் பெற்றோகளுக்கும், புதிதாக புகுந்த வீடு செல்லும் மணப்பெண்ணுக்கும் தூக்கமின்மை ஏற்படும்.

பெற்றோர்களால், ஆசிரியர்களால் மற்றும் மேலதிகாரிகளால் தண்டிக்கப்பட்ட அல்லது பேச்சால் அவமானத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு தூக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வியாபாரத்தில் நஷ்டமடைந்த அல்லது கூட்டாளியால் ஏமாற்றப்பட்ட நபர்களுக்கும் தூக்கமின்மை ஏற்படும். பரிசு சீட்டில் கோடி ரூபாய் பரிசு பெற்ற நபர் அல்லது ஒரு நம்பில் பரிசை இழந்த நபருக்கும் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புண்டு.

கணவனை பிரிந்து வாழும் மனைவி அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டில் பணிபுரியும் கணவன்மார்களுக்கும் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வறுமையால் உள்ளவர் வறுமை காரணமாகவும், வசதி உள்ளவர் வருமான வரி அதிகாரியின் மேல் உள்ள பயம் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.

திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கும் ஆண்- பெண் இருபாலருக்கும், நன்றாகப் படித்து பட்டம் பெற்று வேலை கிடைக்காமல் இருக்கும் ஆண்-பெண் இருவருக்கும் தூக்கமின்மை ஏற்படும்.

மேற்கண்ட காரணங்களை கொண்டும், நோயாளிகளின் மனநிலை குணாதிசயங்களை கொண்டும் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் மருந்து கொடுக்க நல்ல தூக்கம் நிச்சயம் ஏற்படும்.

 குழந்தைகளுக்கான தூக்கமின்மை ஏற்படக் காரணங்கள்:

1. இரவில் சரியான உணவு உண்ணாத தாலும், அல்லது அதிக உணவு உண்பதாலும்,

2. வயிற்றில் உள்ள கிருமிகள் காரணமாகவும்

3. படுக்கையறையில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதாஉம்

4. பயம் மற்றும் சத்தம் காரணமாக

5. அதிகமான படிப்பு, மூளைச் சோர்வு, தேர்வு பயம்.

6. தாய் தந்தை சண்டை காரணமாக

மேற்கண்ட காரணங்களை கொண்டும் நோயின் தன்மை நோயாளியின் மனநிலை அவர்களுக்கு ஏற்படும் கனவுகள் அவர்கள் படுக்கையில் படுக்கும் விதம் கொண்டும் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் நல்ல தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.

 வயது வந்தவர்களுக்கு மற்றும் வயதானோருக்கு ஏற்படும் தூக்கமின்மைக்கான காரணங்கள்

1. சர்க்கரை நோயாலும் மற்றும் விந்துப்பை வீக்கத்தாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிப்பதால் தூக்கம் கெடும்.

2. இரத்தக்கொதிப்பு மற்றும் இருதய நோய் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்படும் சாவு பயம் காரணமாகவும் அதே சமயத்தில்அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வெளிநாடு () வெளியூர் சென்று விட்டாலும் நோயாளிக்கு தூக்கமின்மை ஏற்படும்.

3. மனநிலை பாதிகப்பட்டவர் மற்றும் பல் வேறு காரணங்களால் ஏற்படும் மனச்சோவு மற்றும் அசதி காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.

4. காக்கை வலிப்பு, இத்த சோகை, புற்றுநோய் போன்றபெரு நோய் உள்ளவர்களுக்கும் தூக்கமின்மை ஏற்படும்.

5. முதன்முறையாக கருவுற்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புண்டு.

6. சொறி, சிரங்கு, சோரியாஸிஸ் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் இரவில் அதிகம் அரிப்பை ஏற்படுத்துவதாலும் தூக்கமின்மை ஏற்படும்.

7. தாம்பத்ய உறவில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.

8. மூச்சு விட சிரம்ப்படும் கீழ்க்கண்ட நோய் உள்ளவர்கள்

ஆஸ்துமா, காசநோய் (TB), நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள்

இருதய சம்பந்தப்பட்ட இருதய இத்த குழாய்களில் அடைப்பு உள்ள நோயாளிகள்

ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை

சிறுநீரக்க் கோளாறுகள்

வாயு தொந்தரவு மற்றும் மலச்சிக்கல்கள் உள்ள நோயாளிகளுக்கும் தூக்கமின்மை ஏற்படும்

 கனவுகள் :

கனவுகளை கொண்டு ஹோமியோபதி மருந்துகள் தேர்வு செய்யப்பட்டு நல்ல தூக்கத்தை ஏற்படுத்த முடியும். உதாரணமாக:

1. விபத்து நேர்வது போல

2. உயரத்திலிருந்து குதிப்பது போல

3. பாம்பு மற்றும் மிருகங்களை பற்றி கனவு

4. இறந்தவர் பற்றிய கனவு.

5. சதா கனவு மையம் (சினிமா பார்ப்பது போல)

6. ஆகாயத்தில் பறவைகளை போலவே பறப்பது போலான கனவு

7. தண்ணீர் குடிப்பது போலதாகம் எடுப்பது போலபசி எடுப்பது போலான கனவு.

8. சிற்றின்பக் கனவு.

9. தூக்கத்தில் சிரிப்பது, பேசுவது போல

10. தூக்கத்தில் பல்லை கடிப்பது

11. தூக்கத்தில் நடப்பது (Somanmzulism)

12. தூக்கத்தில் பயம் (Night Mare)

 படுக்கும் விதம் :

நோயாளிகள் படுக்கும் வித்த்தை கொண்டும் ஹோமியோபதி மருந்துகள் தேர்வு செய்யப்பட்டு நல்ல தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.

1. குப்புறப் படுத்தல்.

2. மல்லாந்து படுத்தல்

3. தலைமீது கை வைத்துப் படுத்தல்

4. தலைக்கு கீழே வைத்து படுத்தல்.

5. ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு தூங்குதல்.

6. ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டிப் படுத்தல்

7. காலை அசைத்துக் கொண்டே தூங்குதல்

8. குளிர்காலத்தில் கூட போர்வையை பயன்படுத்தாமல் இருத்தல்.

9. வெயில் காலத்திலும் போர்வை தலைமூடி படுத்து உறங்குவது.

10. தலைக்கு இரண்டு மூன்று தலையணை வைத்து உறங்குவது

11. தலையணையில்லாமல் உறங்குவது.

மேற்கண்ட முறையில் படுக்கும் விதத்தை கொண்டு நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கப்பட்டு வியாதிகள் குணப்படுத்தப்படுகின்றன என்பது உங்களுக்கு விந்தையாக இருக்கும்.

 நிறைவுரை

தூக்கமின்மை என்பது வியாதி கிடையாது. அது பல்வேறு வியாதி காரணமாக உண்டாகும் ஒரு குறிதான். அடிப்படை காரணத்தை அறிந்து நோயை கண்டறிந்து குணப்படுத்தினால் மட்டுமே தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.

நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

நல்ல தூக்கம் வேண்டுவோர் இதன் அடிப்படையில், அருகில் உள்ள ஹோமியோபதி மருத்தவரை அணுகி பயன்பெற வேண்டுகிறேன்.

அனைவரும் நல்ல தூக்கத்தைப் பெற ஹோமியோபதி மருத்துவத்தை நாடி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!

-தன்னம்பிக்கை.





1 கருத்து:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...