08 பிப்ரவரி, 2012

வேந்தர் நபி பற்றி வேத அறிஞர்களின் சான்று-தொடர்-2


மன்னர் ஹிராக்ளியஸ் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மற்றொரு வேதப் பண்டிதர் அஸ்கஃப். நபியின் அழைப்புமடல் அரசவையில் வாசிக்கப்பட்டு உரையாடல் நடந்தபோது அவர் அங்கிருந்தார். அவர் சொன்ன வார்த்தை:

فقال الأسقف: هذا الذي كنا ننتظر ، وبشرنا به عيسى - عليه السلام -  أما أنا فمصدقه ومتبعه . فقال له قيصر: أما أنا إن فعلت ذلك ذهب ملكي . ثم قال الأسقف لرسول النبي صلى الله عليه وسلم : خذ هذا الكتاب واذهب إلى صاحبك ، فأقرئ عليه السلام ،وأخبره أني أشهد أن لا إله الا الله وأن محمدا رسول الله ، وأني قد آمنت به وصدقته ،وأنهم قد أنكروا على ذلك .ثم خرج إليهم فقتلوه .[ ابن حجر في فتح الباري 1/42-43].
நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இறுதிநபி இவர்தான். இவரைப் பற்றித்தான் ஈசா (அலை) முன்னறிவிப்பு செய்திருந்தனர். இவரை நபி என நான் ஏற்றுக்கொள்கிறேன்.'' என்று சான்று பகர்ந்தார். ஆனால் பிறகு இவரை அந்நாட்டு மக்கள் கொலை செய்துவிட்டனர். (ஃபத்ஹுல் பாரீ புஹாரியின் விளக்கவுரை,1/42,43)

ஸல்மான் ஃபாரிஸி (ரலி):
 பாரசீக நாட்டின் இஸ்ஃபஹானில் வாழ்ந்த சல்மான் ஃபாரிஸீ சத்தியத்தைத் தேடி நாடு நாடாக அலைந்து பல துறவிகளைச் சந்தித்து அவர்களின் வஸிய்யத் இறுதி உரை படி இறுதித் தூதர் இன்ன காலத்தில் இன்ன இடத்தில் இன்ன அடையாளங்களோடு வருவார்கள் என அறிந்து ஆவலோடு புறப்பட்டார்.அந்த துறவிகள் இறுதி நபியைப் பற்றி என்ன சொன்னார்கள்?
«قد أظلّ زمان نبي، مبعوث بدين إبراهيم يخرج بأرض العرب، مهاجره إلى الأرض بين حرّتين بينهما نخل، به علامات لا تخفى، يأكل الهديّة ولا يأكل الصّدقة، بين كتفيه خاتم النبوة، فإن استطعت أن تلحق بتلك البلاد فافعل».[112]
 அவரது பயணம் பற்றி முழுமையாய் அறிய இங்கே சென்று பாருங்கள் http://kadaladitkulama.blogspot.in/2012/02/blog-post.html
 இறுதியில் நபியவர்கள் 'குபா'வில் தங்கியுள்ளார்கள் என்று கேள்விப்பட்டு கையில் சிறிது பொருளை எடுத்து செல்கிறார். அந்த பொருளை நபியிடம் கொடுத்து இது நான் தரும் தர்மம். என்று வழங்குகிறார். நபி அதை தன் தோழர்களுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்; தான் சாப்பிடவில்லை; சல்மான் தனக்குள் கூறிக்கொண்டார்: இது முதல் அடையாளம். ஒரு நபி சதக்கா பொருளை அனுபவிக்கமாட்டார்கள்.
பிறகு திரும்பி வந்து வேறு சிறிது பொருளை எடுத்துக்கொண்டு நபியிடம் தந்து ''இது அன்பளிப்பு''என்றார். நபி அதை வாங்கி தானும் உண்டு தோழர்களுக்கும் கொடுத்தார்கள்.  சல்மான் தனக்குள் கூறிக்கொண்டார்: இது இரண்டாம் அடையாளம். நபியானவர் அன்பளிப்புகளை மட்டுமே ஏற்றுக்கொள்வர். அதன்பிறகு ஒரு சந்தர்பத்தில் நபியின் முதுகில் நபித்துவ முத்திரை இருப்பதயும் கண்டு கொண்டார். இப்பொழுது உறுதியாகிவிட்டது: அவர் சந்தித்த துறவி சொன்ன அடையாளங்கள் அத்தனையும் நபிக்கு அப்படியே பொருந்தியிருந்தது. உடனே இஸ்லாமைத் தழுவினார்.

قال سلمان : وقد كان عندي شي قد جمعته فلما أمسيت أخذته ثم ذهبت به إلى رسول الله صلى الله عليه وسلم وهو بقباء فدخلت عليه، فقلت له : إنه قد بلغني أنك رجل صالح ومعك أصحاب لك غرباء ذو حاجة وهذا شيء كان عندي للصدقة فرأيتكم أحق به من غيركم، قال : فقربته إليه، فقال صلى الله عليه وسلم لأصحابه : كلوا وأمسك يده فلم يأكل، قال سلمان : فقلت في نفسي هذه واحدة، ثم أنصرفت عنه فجمعت شيئاً، وتحوَّل رسول الله صلى الله عليه وسلم إلى المدينة، ثم جئته به فقلت : إني رأيتك لا تأكل الصدقة وهذه هدية أكرمتك بها، قال : فأكل رسول الله صلى الله عليه وسلم منها وأمر أصحابه فأكلوا معه، قال فقلت في نفسي : هاتان إثنتان، ثم جئت رسول الله صلى الله عليه وسلم وهو ببقيع الغرقد وقد تبع جنازة رجل من أصحابه عليه شملتان له وهو جالس في أصحابه فسلمت عليه ثم أستدرت أنظر إلى ظهره هل أرى الخاتم الذي وصف لي صاحبي، فلما رآني رسول الله صلى الله عليه وسلم استدرت عرف أني استثبت في شيء، فالقى ردائه عن ظهره صلى الله عليه وسلم فنظرت إلى الخاتم فعرفته، فانكببت على رسول الله صلى الله عليه وسلم أقبِّله وأبكي، فقال لي رسول الله صلى الله عليه وسلم : تحوَّل فتحولت، فقصصت عليه حديثي كما حدثتك يا ابن عباس، قال فاعجب رسول الله صلى الله عليه وسلم أن يسمع ذلك أصحابه.
  • நபியின் அங்க அடையாளம் மட்டுமல்ல; நபி ஹிஜ்ரத் செய்து எங்கே வந்து தங்குவார்கள் என்பதைக் கூட வேத அறிஞர்கள் அறிந்து வைத்து அந்த நபியை எதிர்பார்த்து அங்கே (யத்ரிப்) சென்று தங்கியிருந்தார்கள்.
துப்பவு' என்ற அரசர் பல நாடுகளை வெற்றி கொண்டு ஹிஜாசின் மீது படையெடுத்து மதீனாவை வீழ்த்தி அழிக்க நினைத்தபொழுது அவரை சந்திக்க இரண்டு யூதத் துறவிகள் வந்தார்கள் ''அரசே! இந்த மதீனாவை ஒன்றும் செய்ய வேண்டாம். இங்குதான் நாம் எதிர்பார்க்கிற இறுதினபி வந்து தங்குவார்கள் .இது புனித இடம். இத அழிக்க நினைத்தால் உங்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல'' என்றார்கள். அவர் அதை ஏற்றுக்கொண்டார். [ابن إسحاق ، انظر السيرة النبوية لابن هشام 1/133 ]
  •  நபியின் வருகைக்கு முன்பு வரை ஏதாவது ஒரு ஆபத்து என்றால் இந்த நபியின் பொருட்டால்தான் இறைவனிடம் பாதுகாப்பு தேடுவார்கள் யூதர்கள். நபி வந்து 'நான்தான் அந்த நபி' என்று சொன்னபோது அங்க அடையாளங்கள் அத்தனையும் அப்படியே பொருந்தியும் ஒரு சில யூதர்கள் மறுக்கிறார்கள் என்றால் இது பிடிவாதமே அன்றி வேறென்ன? 
قال ابن عباس «كانت يهود خيبر تقاتل غطفان فلمّا التقوا هُزمت يهود خيبر فعاذت اليهود بهذا الدعاء فقالت «اللهم إنا نسألك بحقّ محمد النبيّ الأميّ الذي وعدتنا أن تخرجه لنا في آخر الزمان إلا نصرتنا عليهم»، فكانوا إذا التَقَوا، دعوا بهذا الدعاء فهزموا غطفان، فلما بُعث النبي صلى الله عليه وسلم كفروا به فأنزل الله ﴿وَكَانُواْ مِن قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُواْ﴾».[113 

ஸைத் பின் அம்ரு பின் நுஃபைல் என்பவர் 'ஆமிரிப்னு ரபீஆ'விடம் ஒருமுறை 
இப்படி சொன்னாராம்:

أنا أنتظر نبيًا من ولد إسماعيل ثم من بني عبدالمطلب ولا أراني أدركه، وأنا أؤمن به وأصدّقه وأشهد أنه نبيّ، فإن طالت بك مدة فرأيته فأقرئه مني السّلام، وسأخبرك ما نعته حتى لا يخفى عليك. قلت: هلمّ. قال: هو رجل ليس بالقصير ولا بالطويل ولا بكثير الشعر ولا بقليله وليست تفارق عينيه حمرة وخاتم النبوة بين كتفيه، واسمه أحمد، وهذا البلد مولده ومبعثه، ثم يخرجه قومه منها، ويكرهون ما جاء به حتى يهاجر إلى يثرب فيظهر أمره، فإيّاك أن تخدع عنه فإني طفت البلاد كلها أطلب دين إبراهيم، فكل من أسأل من اليهودوالنصارى والمجوس يقولون "هذا الدين وراءك" وينعتونه مثل ما نعته لك ويقولون "لم يبق نبي غيره"».[114]

நான் ஒரு நபியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இஸ்மாயீலின் சந்ததியில் தோன்றும் நபி. அவர் ஆக நெட்டையுமில்லை; ஆக குட்டையுமில்லை. முடி மிக அதிகமானவருமில்லை; முடி மிக குறைந்தவருமில்லை. அவரது இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரை இருக்கும். அவர் வரும் வரை நான் இருப்பேனா என்று தெரியவில்லை. அவரை நீ சந்திக்கும் பாக்கியம் கிடைத்தால் என் சலாம் கூறு. நான் அவரை நபியாக ஏற்றுக் கொண்டதை எத்திவைத்துவிடு.
  • இப்படி ஒரு நபி வருவார் என்பதை முன்பே கல்லும் மரமும் கூட அறிந்திருந்தன என்பதே உண்மை. 
وقد كان محمد يرى قبل بعثته أمورًا، من ذلك ما قاله «إني لأعرف حجرًا بمكة كان يسلّم علي قبل أن أُبعث، إني لأعرفه الآن»،[115] وكان إذا خرج لحاجة أبعد حتى تحسر عنه البيوت ويفضي إلى شعاب مكةوبطون أوديتها، فلا يمرّ بحجر ولا شجر إلا قال «السلام عليك يا رسول الله» يمينه وعن شماله وخلفه فلا يرى إلا الشجر والحجارة. فمكث كذلك يرى ويسمع، حتى جاءه جبريل في غار حراء.[116]

 நான் மக்காவில் ஒரு கல்லை அறிவேன்; அது என் நபித்துவத்திற்கு முன்பே எனக்கு ஸலாம் சொல்லும். அந்த கல்லை இப்பொழுதும் என்னால் அடையாளம் காட்டமுடியும்.


   ( வாக்குமூலங்கள் வளரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...