28 டிசம்பர், 2011

அன்றும் - இன்றும்


  • தல்ஹா (ரலி) அவர்களுக்கு நஃபில் தொழுகையில் பைரஹா தோட்டத்தின் நினைவு வந்ததால் அந்த தோட்டத்தையே வக்ஃபு செய்து விட்டார்கள். தொழுகைக்கு இடையூறென்றால் அப்படி ஒரு தோப்பே வேண்டாம் என்பது அவர்களின் நிலை. இன்று நமக்கு ஃபர்ளு தொழுகையில் கடை அல்லது தோட்டம் நினைவுக்கு வருமானால் அதை வக்ஃபு செய்யத் துணிவோமா?
  • ஆரம்பத்தில் சஹாபாக்கள் பசியின் காரணமாக தொழுகையில் நிற்கும்போது மயங்கி விழுந்தார்கள் . இன்று நாம் வயிறு நிரம்ப சாப்பிட்டதினால் ''உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு'' என்று உறங்கி தொழுகையை விட்டுவிடுகிறோம்.
  • சஹாபாக்கள் தொழுகை சஃப்பில் சிறிது நேரம் நின்று விசாலமான ரிஸ்கைப் பெற்றுக் கொண்டார்கள். இன்று நாம் ரேஷன் பலமணி நேரம் நின்றும் ஒரு கிலோ சர்க்கரை 2 லிட்டர் மண்ணெண்ணை பெறுகிறோம். தொழுகை சஃப்பில் நிற்க தயாரில்லை.
  • சஹாபாக்கள் நான்கு பைசா சம்பாதிக்க நாலாயிரம் மஸ்அலாக்களை விசாரித்தறிவார்கள். நாம் நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்க நான்கு மஸ்அலாக்களைக்கூட விசாரிப்பதில்லை.

  • சஹாபாக்கள் பைத்துல் முகத்தசை பார்வையை தாழ்த்தி நடக்கும்  ஒரு சுன்னத்தை உயிர்ப்பித்ததின் மூலம் இரத்தம் சிந்தாமல் வெற்றி கொண்டனர். இன்று பல லட்சம் பேர் இரத்தம் சிந்தி பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி போர் புரிந்தும் அதை வெற்றிகொள்ள முடியவில்லை.
  •  அன்று ஒரு முஹத்திஸ் மையை உலர்த்த தான் வாடகைக்கு இருந்த வீட்டின் சுவற்றிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணைக் கூட எடுக்க பயந்தார்; இன்று வாடகை வீட்டில், வந்ததுமே வீடு எனக்கே சொந்தம் என்கின்றனர். எப்படியும் வெளியேற்றவேண்டுமானால் பகிடி கொடுக்காமல் ஒரு அடி கூட எடுத்து வைக்கமாட்டேன் என்கின்றனர்.
  • அன்று தஸ்பீஹ் ஓதியதால் உள்ளங்கள் பிரகாசம் அடைந்தன. இன்று தஸ்பீஹ்தான் பிரகாசிக்கிறது (ஏனெனில் அது ரேடியம் தஸ்பீஹ்) ஆனால், உள்ளங்கள் என்னவோ இருட்டாகவே கிடக்கிறது.
  • அன்றைய முஸ்லிம்கள் ஈமானுக்காக அரச பதவியையும் உதறித் தள்ளினார்கள். ஆனால் இன்று நாம் ஒரு பியூன் வேலைக்காக ஈமானையும் உதறித் தள்ள தயார். தட்டு கழுவும் வேலைக்காக தாடியை தவிர்க்கவும் தயார்.
  • அன்று சஹாபாக்கள் கடையிலும் அல்லாஹ்வை தியானித்தனர்.ஆனால் இன்று நாம் தொழுகையிலும் கடையைப் பற்றி நினைக்கிறோம்
  • சஹாபாக்கள் சபிக்கப்பட்ட பஜார்களையும் பள்ளியின் சூழ்நிலைபோல் மாற்றினார்கள். ஆனால் இன்று நாம் பள்ளிகளையும் பஜாரைப்போல் ஆக்கிவிட்டோம்;சந்தைக் கடைபோல் ஆக்கி சந்தி சிரிக்க வைத்துவிட்டோம்
  • அன்று காட்டில் ஆட்டிடையன்கூட அல்லாஹ் என்னைப் பார்க்கிறான் என்று பயந்து ஆட்டை மோசடியாக விற்கவில்லை. இன்று பள்ளிக்கு வந்தே செருப்பைத் திருடி விற்று வயிறு வளர்க்கின்றனர்.
  • அன்று இரவின் இருட்டில் தனிமையில் பாலில் தண்ணீர் கலக்க தாய் சொன்னபோதும் அல்லாஹ் பார்க்கிறான்;அப்படி செய்யக்கூடாது'' என ஒரு பெண் சொன்னாள்; இன்று பட்டப் பகலில் பலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாலில் தண்ணீரையல்ல; தண்ணீரில் பாலை கலந்துவிடுகின்றனர்.
  • அன்று ஒரு தாய், இறந்து போன தன் சின்னஞ்சிறு மகனை இரண்டு ரகஅத் தொழுது இறைஞ்சி எழுப்பிக் காட்டினார். இன்று நமது பிள்ளைகளை சுபுஹுக்கு எழுப்ப முடிகிறதா?
  • அன்று பெண்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும் சளைக்காமல் செய்துவிட்டு தனது ரப்பின் கடமைகளையும் நிறைவேற்றினார்கள். அதிகாலையிலேயே எழுந்து தஹஜ்ஜத் சுப்ஹு தொழுதுவிட்டு வீட்டுவேலைகளைக் கவனித்தார்கள். இன்று பெண்கள் இரவு முழுதும் டிவி சீரியல்களில் மூழ்கி இரவுகளை வீணாக்கி சுப்ஹு தொழுகையைக்கூட தவறவிட்டு காலை எட்டு மணிக்கு எழும் பரிதாப நிலை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...