21 டிசம்பர், 2011

இஸ்லாமிய பார்வையில் ஆடை அலங்காரம்


  • ஆடை இல்லா மனிதன் அரை மனிதன்
  •  அன்னாசு பில்லிபாஸ் الناس باللباس  ஆடையை வைத்தே மனிதர்கள் மதிக்கப்படுகிறார்கள்
முல்லா ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்; குறித்த நேரத்தில் விருந்துக்கு சென்றார். எளிமையான உடையில் இருந்ததால் வாட்ச்மேன் உள்ளே விடவில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அனுமதிக்கவில்லை. முல்லா திரும்பி சென்றார்; கடைக்குச் சென்று ஒரு அழகான டிப்டாப்பான உடையை வாடகைக்கு வாங்கி அணிந்துகொண்டு மீண்டும் விருந்துக்கு வந்தார்.இப்பொழுது வாட்ச்மேன் வாயெல்லாம் பல்லாக வாங்க வாங்க என்று வரவேற்றான். உள்ளே சென்ற முல்லா விருந்தை எடுத்து தன் சட்டைப் பைக்குள் போட்டு ''சட்டையே ! இந்தா தின்னு'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் ''என்ன முல்லா.. என்னாச்சு உங்களுக்கு?'' என ஏளனமாக கேட்டனர். முல்லா சொன்னார்; ரொம்ப நல்லா சொன்னார்: ஆமா.. முதலில் எளிமையா வந்தேன்; எதுவும் கிடைக்கல.. டிப்டாப்பா வந்தேன்; எல்லாமே கிடச்சது. அப்படின்னா இந்த விருந்து எனக்கா? இந்த சட்டைக்கா?''
  • ஆடையழகு அவசியம்தான்; அதற்காக ஆடையில் அனாச்சாரத்தைப் புகுத்தி கலாச்சாரத்தை மாற்றக்கூடாது 
தற்போதைய மாறி வரும் சூழ்நிலையால், இளைஞர்களையும் மற்றும் இளைஞிகளையும் டீ சர்ட் புரட்சியானது அவர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு விட்டது. டீ சர்ட் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்று ஆராய்ந்தால் மேலைநாட்டு கலாச்சாரம் என்று கூறலாம்

டீ சர்ட் சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை.. அதில் கூட என்னனென்ன அலங்கோலங்கள் இருக்கிறது என்பதினை நாம் பார்த்தால் கண்றாவியாக இருக்கும். பார்ப்பவர்களின் கண்களை கூசச்செய்யும் அளவிற்கு பல கலர்கள், பல கெட்ட கெட்ட வாசகங்கள், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், ரஸ்ஸிலின் போட்டோக்கள், பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என்று எல்லா நட்சத்திரங்களின் படங்கள் போட்டதாக இருக்கும். இது ஆண்கள் உடுத்தும் டீ சர்ட் என்பது மட்டுமில்லை, பெண்கள் உடுத்தும் டீ சர்ட்டிலும் இத்தகைய அலங்கோலங்கள் இருக்கத்தான் செய்யும்.
அது போல் ஜீன்ஸை எடுத்து கொண்டால், பல வண்ணங்கள்..பல வடிவங்கள்.. ஒரு பக்கம் கிழிந்து போய் இருக்கும் ஒரு பக்கம் கலர் மங்கிப்போய் இருக்கும். ஒரு வயதான முதியவர் தன்னுடைய பேரனிடம் இப்படி கேட்கிறார்.. என்ன பேரான்டீ. நீ வாங்கிட்டு வந்த பேண்ட் துணி (அவருக்கு ஜீன்ஸ் என்று சொல்ல தெரியவில்லை..) கிழிந்து தொங்குது.. அதற்கு பேரனின் பதில்.. போங்க.. தாத்தா.. உங்களுக்கு எப்பவும் ஒரு கிண்டல் தான்.. இது தான் இப்போது ஃபேஷன் தாத்தா என்பான்.
ஒரு இளைஞியிடம் ஒரு முதியோர்.. என்னபுள்ளையாக இருக்கிறாய் நீ.. ஆம்பிளை புள்ளை போடுற பேண்டை போட்டுக்கொண்டு திரிகிறாய்.. அந்த இளைஞியின் பதில்.. போங்க பெரிசு.. உங்க காலத்தில் இதுவெல்லாம் எங்கே கிடைத்தது.. எங்க காலம் வேற.. நாங்க நாகரீக காலத்தில் மாறி விட்டோம்.. இப்பாவெல்லாம் இது தான் எங்களுக்கு பிடிச்சு இருக்குது.. வேணும் என்றால் உங்களுக்கும் வாங்கி தரட்டா.. என்றுசொல்வாள்.. என்ன செய்வது.. காலங்கள் மாறிவிட்டது.. மாற்றங்கள் அவசியமானது தான். ஆனால் அது நாகரீகத்தினை குப்பைக்கு கொண்டு சென்றால் என்ன செய்வது..?..!
இதுமட்டுமல்லாமல், தற்போது பல கடைகளில் ஷார்ட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அரைக்கால் டவுசர்கள் விற்பனைக்கு வந்து விட்டது. அதனையும் விரும்பி அணியக்கூடிய பலரை நாம் பார்த்து இருக்கலாம். அந்த ஆடையானது முழங்கால் தெரியக்கூடிய அளவிலும் மற்றும் தொடைகள் தெரியக்கூடிய அளவிலும் தான் இருக்கும். இத்தகைய ஆடைகளை அணியக்கூடியவர்கள் இளைஞிகளும் தான். ஆனால் இஸ்லாம் மார்க்கமோ இத்தகைய ஆடைகளை அணிவதை தடை செய்து உள்ளது. நாம் அணியும் ஆடையானது, நம்முடைய கணுக்கால் மேல் இருக்கவேண்டுமே தவிர கணுக்காலுக்கு கீழே இருக்கக்கூடாது என்றும், மற்றும் தொடைப்பகுதிகளையும் காலின் மற்ற பகுதிகளையும் மறைக்கக்கூடிய அளவிலும் தான் இருக்க வேண்டும். மானத்தை மறைக்கத்தான் ஆடையே தவிர மானத்தினை காற்றில் பறக்கவிடுவதற்கல்ல.
يا بني آدم قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس  التقوى دالك خير (அல் அஃராஃப் 26)
இந்த வசனத்தில் ஆடை யென்பது 
1. மானத்தை மறைக்க வேண்டும்
2. ஓரளவு அழகாக இருக்கவேண்டும்
3. இதை விட மேலாக இறையச்சத்தை உண்டாக்க வேண்டும்
என்று கூறி இறையச்சம் என்ற ஆடைதான் சிறந்தது என்கிறான் இறைவன்.
எனவே ஆடை என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; அது நமது உடலில் உள்ளத்தில் குணத்தில் சிந்தனையில் வாழ்வில் ஒரு மாபெரும் பிரதிபலிப்பை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது.
  • உமர் (ரலி) அவர்கள் ஒருனாள் மஸ்ஜிதுன் நபவியில் குத்பா பிரசங்கம் நிகழ்த்த வந்தார்கள்.அலங்காரமான ஜுப்பா அணிந்திருந்தார்கள். குத்பா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அந்த ஜுப்பாவைக் கழற்றி எறிந்தனர்.''இதை இனி ஒருபோதும் அணியமாட்டேன்; ஏனெனில் இதை அணிந்தவுடன் உள்ளதில் அகம்பாவமும் ஆணவமும் உண்டாகிறது''என்றார்கள். 
மேற்படி வசனத்தின் அடிப்படையில் அறிஞர்கள் ஆடை என்றால் அதில் சில அம்சங்கள் அமைய வேண்டும் என்கிறார்கள். 
1. மானத்தை மறைக்க வேண்டும்
ஆடை அணிந்தும் மானம் மறையாமல் இருப்பதற்கு 3 காரணங்கள் இருக்கலாம்.
  • குட்டையாக சிறியதாக இருப்பது
  • மெல்லிசாக இருப்பது
  • மேடு பள்ளங்கள் தெரியும் அளவுக்கு இறுக்கமாக இருப்பது
மூன்றுமே தவறுதான்:
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது உம்மத்தில் பிந்திய காலத்தில் சில பெண்கள் தோன்றுவார்கள். அவர்கள் ஆடை அணிந்த நிர்வாணிகளாக இருப்பார்கள். அவர்களின் தலைகளின் மேல் ஒட்டகங்களின் திமில் போன்றவை (தலைமுடி வைக்கப்பட்டு) இருக்கும். அவர்களைச் சபியுங்கள். நிச்சயமாக அவர்கள் சபிக்கப்பட்ட வர்களே. (அல்லது சபிக்கப்பட வேண்டியவர்களே.) (அத்தபரானி)
رُبَّ كَاسِيَاتٍ فِي الدُّنْيَا عَارِيَاتٍ فِي الْآخِرَة 
மெல்லிய ஆடை அணியும் பெண்கள் தமது உடலின் வனப்பை, கவர்ச்சியை வெளிக்காட்டுபவர்களாவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக காட்சி தருபவர்களாவர் என்ற கருத்தையே நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் சொல்கின்றார்கள் என இமாம்   ஸுயூத்தி கூறுகின்றார்கள்.
இவ்வாறு அரைகுறையாக ஆடை அணியும் பெண்களை எச்சரிக்கும் மற்றுமொரு ஹதீஸும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர்(அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள். (முஸ்லிம்)  
பெண்களின்  ஆடை இறுக்கமானதாக உடலுடன் ஒட்டியதாக இருத்தல் கூடாது. மாறாக தளர்வாக, தாராளமானதாக, பெரிதாக இருத்தல் வேண்டும். ஆடை இறுக்கமாக இருந்தால் அது உடலமைப்பைக் காட்டும். இது பெண்ணுக்குரிய இஸ்லாமிய உடையின் நோக்கத்தைப் பாழ்படுத்தி விடும்.
பெண்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும்என்ற அல்குர்ஆனின் கட்டளை அருளப்பட்டபோது பெண்கள் தம் மெல்லிய ஆடைகளை கைவிட்டனர். தடித்த (கம்பளி போன்ற) துணிகளால் முந்தானைகளைத் தயாரித்துக் கொண்டனர் என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள். (அபூதாவூத்)
  • ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு எகிப்திய ஆடையை உஸாமா (ரழி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அவர் அதனை தனது மனைவிக்கு அணியக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் அணியவில்லையா? என உஸாமாவிடம் கேட்டபோது, அதனை அவர் தனது மனைவிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். அப்போது அன்னார், அதனை அணியும்போது அதனுள்ளே ஓர் உள்ளாடையை அணிந்து கொள்ளும்படி கூறும். ஏனெனில் அது அவளது உடலின் கட்டமைப்பை காட்டுவதாக இருக்குமோ என நான் அஞ்சுகின்றேன்என்றார்கள்.

2.وريشا அவலட்சணமாக இல்லாமல் ஓரளவு அழகாக இருக்கவேண்டும் 


قَالَ: " لا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ، وَلا يَدْخُلُ النَّارَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ "، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، الرَّجُلُ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنًا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ " إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ مَنْ بَطَرَ الْحَقَّ وَغَمَصَ النَّاسَ "

ணுஅளவும் உள்ளத்தில் பெருமை உள்ளவன் சுவனம் நுழையமுடியாது யென்று நபி (ஸல்) கூறியபோது ஒருவர் கேட்டார்: யாரசூலல்லாஹ்! ஒரு மனிதன் தன் ஆடை, செருப்பு அழகாக இருக்கவேண்டும் என விரும்புவது இயல்புதானே அதுவும் பெருமையா? ''இல்லை. அல்லாஹ் பேரழகன்; அவன் அழகை விரும்புகிறவன் (எனவே அதுவெல்லாம் பெருமையல்ல




 " كُلُوا وَاشْرَبُوا وَتَصَدَّقُوا وَالْبَسُوا وَلا سَرَفٍ، فَإِنَّ اللَّهَ سُبْحَانَهُ يُحِبُّ أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهُ عَلَى عَبْدِهِ "
நன்றாக உண்ணுங்கள் பருகுங்கள் தானம் செய்யுங்கள் நன்றாக உடுத்துங்கள்; வீண்விரயம் செய்யாதீர்கள் அல்லாஹ் தஆலா தனது அடியார் மீது தன் நிஃமத்தின் பிரதிபலிப்பு தென்படுவதை விரும்புகிறான்
" كُلُوا، وَاشْرَبُوا، وَتَصَدَّقُوا، وَالْبَسُوا، غَيْرَ مَخِيلَةٍ وَلَا سَرَفٍ
நீ விரும்பியதை உண்; விரும்பியதை உடுத்து  ஆனால் வீண்விரயம் பெருமை இவை இரண்டும் இல்லாமல் பார்த்துக்கொள்!
பட்டு போன்றவை ஆண்களுக்கு ஆகாது ஏனெனில் அது பெண்களுக்கு வேண்டுமானால் அலங்காரமாக இருக்கலாம்; ஆண்களுக்கு ஆணவத்தை உண்டாக்கும்
  • " أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى فِي فُرُوجِ حَرِيرٍ ثُمَّ نَزَعَهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، صَلَّيْتَ فِيهِ ثُمَّ نَزَعْتَهُ؟، فَقَالَ: إِنَّ هَذَا لَيْسَ مِنْ لِبَاسِ الْمُتَّقِينَ "
  • حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي، وَأُحِلَّ لِإِنَاثِهِمْ " ترمدي
  • " مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا، لَمْ يَلْبَسْهُ فِي الآخِرَةِ، وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا، لَمْ يَشْرَبْهُ فِي الآخِرَةِ، وَمَنْ شَرِبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ فِي الدُّنْيَا، لَمْ يَشْرَبْ بِهَا فِي الآخِرَةِ، ثُمَّ قَالَ: لِبَاسُ أَهْلِ الْجَنَّةِ، وَشَرَابُ أَهْلِ الْجَنَّةِ، وَآنِيَةُ أَهْلِ الْجَنَّةِ
  • " مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ فِي الدُّنْيَا أَلْبَسَهُ اللَّهُ ثَوْبَ مَذَلَّةٍ يَوْمَ الْقِيَامَةِ  ثُمَّ تَلَهَّبُ فِيهِ النَّارُ
ஒப்பாகாதிருத்தல்
இன்றைய பல இளைஞிகள் கல்லுரிக்கு செல்கிறார்களோ இல்லை.. அவர்களுக்கு பிடித்தமான இளைஞர்களுடன் தான் அதிகம் சுற்றி வருகிறார்கள்அவர்கள் உடுத்தும் ஆடைகளை இவர்கள் உடுத்துவதும்இவர்கள் உடுத்தும் ஆடைகளை அவர்கள் உடுத்துவதும் இன்னொரு நாகரீகமாக மாறி விட்டதுஆண்கள் பெண்களை போல் ஒப்பனைகளை செய்வதையும்பெண்கள் ஆண்களை போல் ஒப்பனைகள் செய்வதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
  • ஆண்களைப் போன்று ஆடை அணியும் பெண்களும், பெண்களைப் போன்று ஆடை அணியும் ஆண்களும் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.’ (அஹ்மத், நஸாஈ, ஹாகிம்)

" لَعَنَ رَسُولُ اللَّهِ صلي الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ " 
  • நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய ஆடைகளை அணியும் ஆண்களையும், ஆண்களுக்குரிய ஆடைகளை அணியும் பெண்களையும் சபித்தார்கள்.’ (அபூதாவுத், இப்னுமாஜா
  •  மூவர் சுவனம் புகமாட்டார்கள். அல்லாஹ் மறுமையில் அவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (அவர்கள் யாரெனில்) தனது பெற்றோருக்கு அநியாயம் செய்தவன், ஆண்களைப் போன்று நடந்து கொள்ளும் பெண், தனது மனைவி விபசாரத்தில் ஈடுபடுவதை அங்கீகரித்து அதற்கு ஒத்தாசையாக இருப்பவன் ஆகியோராவார்.(அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

ஆண்களின் ஆடை கரண்டைக்கு சற்று மேலாக இருக்கவேண்டும் 
  •  أَزُرَّةُ الْمُؤْمِنِ إِلَى أَنْصَافِ سَاقَيْهِ، لا جُنَاحَ عَلَيْهِ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَيْنِ، وَمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فِي النَّارِ، لا يَنْظُرُ اللَّهُ إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ بَطَرًا "-(بيهقي)
  • ثَلاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ  قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ هُمْ خَابُوا وَخَسِرُوا؟، فَأَعَادَهَا، فَقُلْتُ: مَنْ هُمْ؟ فَقَالَ: الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنْفِقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ كَاذِبًا
கரண்டைக்கு கீழ் உள்ளது நரகிற்கு சொந்தம் அப்படி உடுத்துபவனை அல்லாஹ் மறுமையில் அன்பு கொண்டு பார்க்கமாட்டான்; பேசமாட்டான்; கடும் வேதனையும் உண்டு۔

தொப்பி அணிந்து அதற்கு மேல் தலைப்பாகை  
أَنَّ رُكَانَةَ صَارَعَ النَّبِيَّ  فَصَرَعَهُ النَّبِيُّ صلي الله عليه وسلم قَالَ رُكَانَةُ: وَسَمِعْتُ النَّبِيَّ صلي الله عليه وسلم يَقُولُ: " فرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلانِسِ "
நமக்கும் இணைவைப்பாளர்களுக்கும் வித்தியாசம் தொப்பி அணிந்து அதற்கு மேல் தலைப்பாகை கட்டுவதுதான் ( திர்மிதி، அபூதாவூத்، பைஹகீ)

சுன்னத்தான ஆடைகளை விரும்பி அணியவேண்டும் யாராவது ஏளனம் செய்தாலும் அதைப் பொருட்படுத்தக்கூடாது:

உதுமான் (ரலி) ஹுதைபியா உடன்படிக்கையின் பொழுது காஃபிர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த புறப்பட்டனர். அப்பொழுது அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஒரு யோசனை சொன்னார்: உங்களின் கைலி கரண்டைக்கு மேலே உள்ளது இதை மக்கா குறைஷிகள் ஏளனமாகப் பார்ப்பார்கள்.மதிக்கமாட்டார்கள்; ஆகவே சற்று கைலியை கரண்டைக்கு கீழே இறக்கிக் கட்டுங்கள்'' உதுமான் (ரலி) உடனே மறுத்தார்கள் ம்ஹூம்... இதுதான் நம் தோழர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள கைலி கட்டும் முறை.'' 

சிறந்த ஆடை எவை?
ஆண்களுக்கு வெண்மை:
" الْبَسُوا هَذِهِ الثِّيَابَ الْبِيضَ فَإِنَّهَا أَطْيَبُ وَأَطْهَرُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ("بيهقي)


عَنْ عَائِشَةَ، قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ عَنْ وَرَقَةَ، فَقَالَتْ لَهُ خَدِيجَةُ: إِنَّهُ كَانَ صَدَّقَكَ، وَلَكِنَّهُ مَاتَ قَبْلَ أَنْ تَظْهَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ : " أُرِيتُهُ فِي الْمَنَامِ، وَعَلَيْهِ ثِيَابٌ بَيَاضٌ وَلَوْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ لَكَانَ عَلَيْهِ لِبَاسٌ غَيْرُ ذَلِكَ "،( ترمدي)


அறிவியலார் தரும் அற்புதமான தகவல்:
சூரியனிலிருந்து நம் உடலுக்கு தக்க வெப்பத்தை மட்டும் கிரகித்துக்கொண்டு தேவைக்கு அதிகமானதை ரிட்டன் செய்து விடுகிற தன்மை வெண்மைக்கு மட்டுமே உள்ளது 

 நபியவர்கள் சில நேரம் பச்சையும் அணிந்துள்ளனர் 
عَنْ أَبِي رِمْثَةَ، قَالَ: انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ  النَّبِيُّ صلي الله عليه وسلم فَرَأَيْتُ عَلَيْهِ بُرْدَيْنِ أَخْضَرَيْنِ "


-----------------------------------------------------------------------------------------------------
இது தொடர்பான இதர பதிவுகள்:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...