''உங்கள் பெயர் என்னவோ?''
''உங்கள் பிறப்பு வளர்ப்பைப் பற்றி சொல்ல முடியுமா?''
''தாராளமாக! நான் பிறந்தது இந்தியாவில் பேராசை பிடித்த பெரிய மனிதர்கள் வீட்டில். அங்குதான் என் பரிணாம வளர்ச்சியும்! . என்றாலும் உலகெங்கிலும் எனக்கு செல்வாக்கு உண்டு ''.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?''
''இதுஎன்ன கேள்வி? இந்த நாட்டில் வேறு யாருக்கும் மகிழ்ச்சி உண்டோ இல்லையோ எனக'கு உண்டு.''
''உங்கள் லட்சியம்? ''
''ரொம்ப ஒன்றுமில்லை. ஷைத்தானுக்கு உதவி புரிவதும் மனித இனத்தை குறிப்பாக பெண்ணினத்தை இழிவு படுத்துவதும் என் முக்கிய குறிக்கோள்!''
''அது நிறைவேறியுள்ளதா?''
''உம்.. எக்கச்சக்கமா.!
அண்ணல்நபி அவர்களும் அருமை கலீஃபாக்களும் இருந்த காலம் வரை நல்லோர்கள் மிகைத்திருந்த காலம் வரை நான் மதிப்பிழந்து கிடந்தேன். எல்லோரும் மஹரை மதித்தனர் ; என்னை சீந்துவாரில்லை.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ்...!

நான் ரொம்பவும் முன்னேறிவிட்டேன். எத்தனையோ பெண்கள் என்னுடன் மோதிப் பார்த்து விட்டு இறுதியில் சமாதானமாகிவிட்டனர். இன்னும் சில பேர் விவகாரத்தாகி வாழ்க்கை இழந்தனர்.
வீட்டிற்கு வரும் விருந்தாளிக்காக ஆடுகோழி அறுக்கப்படுவதை ப் பார்த்திருப்பீர்கள். அதுபோல் என் மகிழ்ச்சிக்காக கன்னிப் பெண்களும் மணமான இளம் பெண்களும் அறுக்கப்படுகின்றனர்; எரிக்கப்படுகின்றனர். இப்போ புரியுதா என்னுடைய வளர்ச்சியை? ''''உங்களின் பிரச்சாரம் எப்படி உள்ளது?''
''பொதுவாக எல்லாமக்களிடமும் நான் பிரச்சாரம் செய்கிறேன். பேராசை பிடித்த மனிதர்களை நான் கவர்ந்து விடுகிறேன்.
இப்பொழுதெல்லாம் பணக்காரர்கள் வீட்டில் மட்டுமல்ல ; ஏழைகள் வீட்டிலும் என்னைப் பார்க்க முடியும். அவர்களும் என்னை விரும்புகிறார்கள். இதற்காக கடன் படவும் தயார் ; வட்டிக்கு வாங்கவும் தயார்.
''உங்களுக்கு கவலையே இல்லையா?''
''பேராசை பிடித்தவர்கள் இருக்கும் வரை எனக்கு என்ன கவலை ? அவர்கள் மூலம் அப்பாவி அபலைகளின் குருதியையும் கண்ணீரையும் உறிஞ்சி தெம்பாக வாழ்வேன். ஆனால் சில சீர்திருத்தவாதிகளிடம் மக்கள் சிக்கிவிடக்கூடாது. அவர்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் என்னையும் என் உடன்பிறப்புகளான வட்டி லஞ்சம் லாட்டரி சூதாட்டம் இவற்றை ஒழிக்கத் துடிக்கின்றனர். இவர்களைக் கண்டால் எனக்குகொஞ்சம் அலர்ஜி. ''
''சரி... எங்கே அவசரமாக கிளம்பி விட்டீர்கள் ?''
''என் தீவிர பக்தர் ஒருவர் வரதட்சணை பாக்கி கேட்டு தன் மனைவியை அடித்து துன்புறுத்தி இறுதியில் கொலையும் செய்துவிட்டார். இவர் காவல்துறையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க யார் யாருக்கு எவ்வளவு எலும்பு துண்டு போடவேண்டும் என்று யோசனை சொல்ல விரைந்து போய்க்கொண்டு இருக்கிறேன். மீண்டும் சந்திப்போம்...வரட்டுமா??''
இப்பொழுதெல்லாம் பணக்காரர்கள் வீட்டில் மட்டுமல்ல ; ஏழைகள் வீட்டிலும் என்னைப் பார்க்க முடியும். அவர்களும் என்னை விரும்புகிறார்கள். இதற்காக கடன் படவும் தயார் ; வட்டிக்கு வாங்கவும் தயார்.
''உங்களுக்கு கவலையே இல்லையா?''
ஆலிம்களின் வரதட்சணை ஒழிப்புபிரச்சாரம் |
ஆலிமாக்களின் பிரச்சாரம் |
''சரி... எங்கே அவசரமாக கிளம்பி விட்டீர்கள் ?''
''என் தீவிர பக்தர் ஒருவர் வரதட்சணை பாக்கி கேட்டு தன் மனைவியை அடித்து துன்புறுத்தி இறுதியில் கொலையும் செய்துவிட்டார். இவர் காவல்துறையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க யார் யாருக்கு எவ்வளவு எலும்பு துண்டு போடவேண்டும் என்று யோசனை சொல்ல விரைந்து போய்க்கொண்டு இருக்கிறேன். மீண்டும் சந்திப்போம்...வரட்டுமா??''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்