17 நவம்பர், 2011

வாலிநோக்கம் மூழ்கும் முன் தடுப்புச்சுவர் எழுப்புக!



ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் மூன்று புறம் கடல் சூழ 
 அமைந்துள்ள எழில்மிகு  கிராமமாகும். கடற்கரையில்
 கிடைக்கும் சுவைமிகு நல்ல தண்ணீரும், கடலுக்கு நடுவே
 அமைந்திருக்கும் நல்லதண்ணீர் தீவும் இந்த ஊருக்கு இறைவன்
 தந்த அருட்கொடையாகும்.
 இந்த ஊர் பாரம்பரியமிக்க பழமைவாய்ந்த ஊர் என்பதற்கு
 இங்குள்ள பெரிய பள்ளிவாசல் சான்றாகத் திகழ்கிறது.
 இங்குபல ஆயிரம் குடும்பங்கள் வரை வசிக்கின்றனர்.
 இவர்களில் பெரும்பாலோர்  முஸ்லிம்களாகவும்
 மீன்பிடித்தொழிலை பிரதானமாக கொண்டவர்களாகவும்
 இருக்கின்றனர்.
 மூன்று புறம் கடல் சூழ உள்ளதால் இந்த கிராமத்தை  சுற்றுலாத்
 தளமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு சார்பாக
 கடற்கரையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு
 அது அரைகுறையாக விடப்பட்டது. இது ஒருபுறமிருக்க,

 இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊர் கடல் அரிப்பால்
 அழியும் சூழல் உள்ளதாக அதிர்ச்சிதரும் செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வூரின் கோடிமுனை என்ற பகுதியில் கடலின்
 சீற்றத்தால் கரை அரிப்பின் காரணமாக கடல் நீர்
 ஊருக்குள் புகுந்து பாதிப்பை உண்டாக்கும் நிலை
 உருவாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளாக கோடிமுனையில் கடல் அரிப்பு ஏற்பட்டு

தற்போது அது அபாய கட்டத்தை எட்டியுள்ளது.உடனே இது குறித்து
 நடவடிக்கை  எடுத்து, கோடிமுனையில் கடலின் சீற்றத்தை
கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புச்சுவர் எழுப்பாவிட்டால்,
நீர் கிராமத்திற்குள் புகுந்து கிராமமே மூழ்கிவிடும் வாய்ப்புள்ளது.
எனவே போர்கால டிப்படையில் தடுப்புச்சுவர் எழுப்பவேண்டும்  
எனவே வழக்கம்போல 'வந்தபின் பார்ப்போமே'
 என்று அரசு மெத்தனமாக இருக்காமல் உடனடியாக
 ஊராட்சித் தலைவரின் கோரிக்கை மீது நடவடிக்கை
 எடுத்து பாரம்பரியமிக்க கிராமத்தையும் ,
 மக்களையும் காக்க அரசு உடனடயாக ஆவன
 செய்யவேண்டும் என்பதே அவ்வூர்வாசிகளின்
 எதிர்பார்ப்பாக உள்ளது.
                          அரசு கவனிக்குமா..?

''தமிழக அரசியல்'' பத்திரிக்கை தரும் செய்தி

வாலிநோக்கம் விபரீதம்...
மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டால் உருட்டுக் கட்டை!

 மணல் கொள்ளையால் ஒரு கிராமமே கடலில் மூழ்கும் அபாயத்தில் இருக்க..
. இதைத் தட்டிக் கேட்டவருக்கு உருட்டுக் கட்டைத் தாக்குதல் கிடைத்திருக்கிறது
 ராமநாதபுரம் மாவட்டத்தில்! 


தகவல் கிடைத்ததும் கடல் கிராமமான வாலிநோக்கத்துக்கு
 விரைந்தோம். வழியில்... உருட்டுக்கட்டைத் தாக்குதலுக்கு ஆளாகி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருக்கும் வாலிநோக்கம்
 கவுன்சிலர் பஷீரைச் சந்தித்தோம். இவர் ‘புவர்ஸ் ஹெல்ப் லைன்’
 அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். 

நம்மிடம் பேசிய பஷீர்,

‘‘ஏறத்தாழ 5 ஆயிரம் மக்கள் வசிக்கும் ஊர் வாலிநோக்கம்.
 கடலை மட்டும் நம்பி வாழும் மீனவ கிராமம். இக்கிராம
 பஞ்சாயத்து தலைவியான வகிதா சகுபர் ஆளும்
 தி.மு.க.வை சேர்ந்தவர், அமைச்சர் சுப.தங்கவேலனின்
 தீவிர ஆதரவாளர்.

ராமநாதபுரம் கனிம வளத்துறையிலும், கடலாடி தாசில்தாரிடமும் தன்னுடைய சொந்த உபயோகத்துக்கென சொல்லி,
 தன்னுடைய சொந்த பட்டா நிலத்தில் மணல் அள்ளுவதற்காக
 10 நாளைக்கு மட்டும் அனுமதி வாங்கினார் வகிதா. ஆனால்..
. 3 ராட்சஸ பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு, 3 டிராக்டர்கள்
 மூலம் நாளொன்றுக்கு 500 லோடு மணலை வாலிநோக்கம் பகுதி முழுக்க அள்ள
 ஆரம்பித்தார். இதை அங்கே கட்டப்பட்டு வரும் 300 சுனாமி வீடுகளுக்கு விற்கவும்
 ஆரம்பித்தார்.
 இதனால், கடற்கரையில் இருந்து 230 மீட்டர் தொலைவிலுள்ள
 ஊர் ஏரியா முழுவதும் கடல்நீர் புக ஆரம்பித்தது. ஊருக்குள் கடல்நீர்
 புக நேரிடுவதைப் பார்த்து அஞ்சிப்போன நாங்கள் உடனடியாக வகிதாவிடம்
 மணல் அள்ளுவதை நிறுத்துமாறு கேட்டோம். ஆனால் அவர் நிறுத்தவில்லை.

அதனால்... சொந்த உபயோகத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு, வகிதா மணல்
 பிசினஸ் செய்வதாகமாவட்ட கலெக்டர், சுரங்கத்துறை இயக்குனர், கடலாடி
 தாசில்தாருக்கெல்லாம் நேரில் போய் மனு கொடுத்தோம். இதனால் மாவட்ட நிர்வாகம்
 வகிதாவை விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்து இறுக்கியது. இதனால்
 ஆத்திரமடைந்த வகிதா, என்னை அடித்து, துவைக்க உருட்டுக்கட்டை படையை
 ஏவிவிட்டார்.

என்னுடைய அலுவலகத்துக்கு வகிதாவின் கணவர் சகுபர், அவருடைய மகன்
 தவ்பீக் ரகுமான், கொழுந்தனார்கள் மைதீன் மற்றும் ஜாகீர் உசேன், வகிதாவின்
 மணல் ஏஜென்ட்
 ஆகியோர் வந்தனர். 

‘ஏண்டா! எங்க மணல் பொழப்பில் மண் அள்ளிப் போடுற... உன்னை இப்படியே விட்டால்
 நல்லா இருக்காது’ எனக் கூறிக்கொண்டே உருட்டுக் கட்டையால் என்னுடைய கண்ணை
 குறிவைத்து தாக்கினார்கள். என்னுடைய அலறல் சத்தம் கேட்டு என்னுடைய
 உறவினர்கள் ஓடோடி வந்ததும், அந்த ஐவர் கும்பல் தப்பியோடியது.

உடனடியாக நான், வாலிநோக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து--விட்டு...
 ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். இந்தத் தாக்குதலால் என்னுடைய
 கண் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிப்போர்ட் தந்துள்ளார்கள் டாக்டர்கள்.

காவல்துறை முழுக்க முழுக்க வகிதாவுக்கு ஆதரவாக இருப்பதால்,
 வாலிநோக்கம் கிராமத்துக்கும், என்னுடைய உயிருக்கும் வகிதா மூலம்
 எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்’’ என்று வலியில் துடித்தபடியே
 தகவலைக் கூறினார் பஷீர்.

இந்நிலையில், நாம் வாலிநோக்கம் கிராமத்துக்குப் போனோம். கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள
 கோடிமுனைப் பகுதியில் வாலிநோக்கம் பஞ்சாயத்து தலைவியான வகிதா சகுபருக்கு
 மணல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது தெரிந்தது. பெரிய பெரிய
 பொக்லைன்கள் மணலை வாரிக் குவித்துக் கொண்டிருந்தன. கிராமத்தில் நம்மிடம்
 பேசிய அனைவரும் வகிதாவின் மணல் குவாரியை எதிர்த்து கருத்துச் சொன்னார்கள்.

இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான வகிதாவை சந்தித்து பஷீர் மீதான தாக்குதல்
 பற்றி கேட்டோம்.

‘‘பஷீர் என்னுடைய பஞ்சாயத்தில் 4-வது வார்டு மெம்பராக உள்ளார். என்னுடைய
 நெருங்கிய உறவினர்தான். எனக்கு சொந்தமான, அரசு அனுமதி கொடுத்த ஏரியாவில்
 மட்டும்தான் நான் மணல் அள்ளினேன். பிளாக்மெயில் ஆசாமியான பஷீர்,
 தனக்கு 50 ஆயிரம் கமிஷன் கொடுத்தால் சிரமமே இல்லாமல் மணல் அள்ளலாம்.
 இல்லாவிட்டால், பெட்டிஷன் போட்டு தொந்தரவு கொடுப்பேன் என்று என்னை
 மிரட்டினார். நானோ, விதிமுறைக்கு உட்பட்டு உரிய அனுமதி வாங்கி மணல்
 அள்ளுவதால் பஷீரின் மிரட்டலை பொருட்படுத்தாமல், கமிஷனும் கொடுக்க
 மறுத்துவிட்டேன். 

அந்த ஆத்திரத்தில்தான், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு பெட்டிஷன்கள் போட்டு,
 எனக்கு குடைச்சல் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த என்னுடைய கணவர்,
 கொழுந்தனார்கள், ‘சொந்தக்காரனாக இருந்தும் இப்படி தொல்லை கொடுக்கலாமா?
’ என நியாயம் கேட்டார்கள். அதில் ஏற்பட்ட வாய்த் தகராறை, சாமர்த்தியமாக ‘தாக்குதல்’
 எனச் சொல்லி, தன்னுடைய தவறை மறைத்து அனுதாபம் தேடப்பார்க்கிறார்...’’ என்றார். 

கடலாடி தாசில்தார் காளிமுத்துவிடம் இதுபற்றி பேசியபோது, ‘‘வகிதாவின் சொந்த
 உபயோகத்திற்கு மட்டும்தான் மணல் அள்ள அனுமதி அளித்தோம். அவர்
 வணிக நோக்கத்துக்கு பயன்படுத்தியிருந்தால், உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

வாலிநோக்கம் காவல்துறையினரோ, ‘‘பஷீர் கொடுத்த புகாரின் பேரில், அவரை
 தாக்கியவர்கள் மீது எப்.ஐ.ஆர். போட்டுள்ளோம். அதேபோல தங்களை தாக்கியதாக
 பஷீர் மீதும் அவர்கள் புகார் கொடுத்ததால்... பஷீர் மீதும் அதே பிரிவில்
 எப்.ஐ.ஆர். போட்டுள்ளோம். விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்கள்.

கரன்ஸியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சிலரின்

 சுயநலத்தால்... வாலிநோக்கத்தை கடல்
 குடித்துக்கொண்டே இருக்கிறது! 

3 கருத்துகள்:

  1. வாலிநோக்கம் மூழ்கும் முன் தடுப்புச்சுவர் எழுப்புக!

    ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் மூன்று புறம் கடல் சூழ
    அமைந்துள்ள எழில்மிகு கிராமமாகும். கடற்கரையில்
    கிடைக்கும் சுவைமிகு நல்ல தண்ணீரும், கடலுக்கு நடுவே
    அமைந்திருக்கும் நல்லதண்ணீர் தீவும் இந்த ஊருக்கு இறைவன்
    தந்த அருட்கொடையாகும்.
    இந்த ஊர் பாரம்பரியமிக்க பழமைவாய்ந்த ஊர் என்பதற்கு
    இங்குள்ள பெரிய பள்ளிவாசல் சான்றாகத் திகழ்கிறது.
    இங்குபல ஆயிரம் குடும்பங்கள் வரை வசிக்கின்றனர்.
    இவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாகவும்
    மீன்பிடித்தொழிலை பிரதானமாக கொண்டவர்களாகவும்
    இருக்கின்றனர்.
    மூன்று புறம் கடல் சூழ உள்ளதால் இந்த கிராமத்தை சுற்றுலாத்
    தளமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு சார்பாக
    கடற்கரையில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டு
    அது அரைகுறையாக விடப்பட்டது. இது ஒருபுறமிருக்க,

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊர் கடல் அரிப்பால்
    அழியும் சூழல் உள்ளதாக அதிர்ச்சிதரும் செய்தி வெளியாகியுள்ளது.
    இவ்வூரின் கோடிமுனை என்ற பகுதியில் கடலின்
    சீற்றத்தால் கரை அரிப்பின் காரணமாக கடல் நீர்
    ஊருக்குள் புகுந்து பாதிப்பை உண்டாக்கும் நிலை
    உருவாகியுள்ளது.

    மூன்று ஆண்டுகளாக கோடிமுனையில் கடல் அரிப்பு ஏற்பட்டு

    தற்போது அது அபாய கட்டத்தை எட்டியுள்ளது.உடனே இது குறித்து
    நடவடிக்கை எடுத்து, கோடிமுனையில் கடலின் சீற்றத்தை
    கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புச்சுவர் எழுப்பாவிட்டால்,
    நீர் கிராமத்திற்குள் புகுந்து கிராமமே மூழ்கிவிடும் வாய்ப்புள்ளது.
    எனவே போர்கால டிப்படையில் தடுப்புச்சுவர் எழுப்பவேண்டும்

    எனவே வழக்கம்போல 'வந்தபின் பார்ப்போமே'
    என்று அரசு மெத்தனமாக இருக்காமல் உடனடியாக
    ஊராட்சித் தலைவரின் கோரிக்கை மீது நடவடிக்கை
    எடுத்து பாரம்பரியமிக்க கிராமத்தையும் ,
    மக்களையும் காக்க அரசு உடனடயாக ஆவன
    செய்யவேண்டும் என்பதே அவ்வூர்வாசிகளின்
    எதிர்பார்ப்பாக உள்ளது.
    அரசு கவனிக்குமா..? ௮௧மதுஐலாலுதின்வாலிநோக்கம்
    Ahamed Jalal's photo.
    Ahamed Jalal's photo.
    Ahamed Jalal's photo.
    Ahamed Jalal's photo.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...