05 டிசம்பர், 2020

 ஒரு கேள்வி: பிராணிகளின் கண்திருஷ்டி ( தீய பார்வையின்) மூலமாகக் கூட மனிதர்களுக்கு பாதிப்பு உண்டா


நாமறிந்த விஷயம்:


  1. கண்திருஷ்டி என்பது உண்மை.

روى مسلم (2188) عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  الْعَيْنُ حَقٌّ، وَلَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ سَبَقَتْهُ الْعَيْنُ، وَإِذَا اسْتُغْسِلْتُمْ فَاغْسِلُوا

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்
கண் திருஷ்டி உண்மை. விதியை முந்த கூடிய ஒன்று இருக்குமானால் அது கண் திருஷ்டி தான்


2. மனிதர்களுடைய தீய பார்வையின் விளைவால் பாதிப்பு உண்டு.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சில தோழர்களும் மக்காவை நோக்கி புறப்பட்டனர் ஜுஹ்ஃபா என்ற இடத்திற்கு அருகில் தங்க நேரிட்டது அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஸஹ்ல் பின் ஹுனைஃப் என்கிற ஒரு தோழர் குளித்தார். 

ரொம்ப அழகான மனிதர். அழகுக்கும் வனப்பும் சொந்தக்காரர் அந்த வழியாக கடந்து சென்ற ஆமிர் பின் ரபீஆ என்கிற தோழர் அவருடைய மேனியின் அழகை பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு வார்த்தை சொன்னார் இப்படி ஒரு அழகை நான் இதுவரை கண்டதே இல்லை என்று சொல்லிவிட்டார் அவ்வளவுதான் குளித்துக் கொண்டிருந்த தோழர் பட்டென கீழே விழுந்து மயக்கம் உற்றார்


அவரை தூக்கிக் கொண்டு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி செல்லும் அவரிடத்திலே அன்புத் தோழர்கள் வந்தார்கள் அல்லாஹ்வின் தூதரே இங்கே பாருங்கள் இவர் தலையை உயர்த்தவும் இல்லை கண் விழிக்கவும் இல்லை என்னவென்று பாருங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சொல்லும் கேட்டார்கள் என்ன நடந்தது உடனே நடந்த விஷயத்தை நபித் தோழர்கள் சொன்னார்கள் குளித்துக் கொண்டிருந்தார் அமீர் என்பவர் இவரை பார்த்து ஆச்சரியப்பட்டு ஒரு வார்த்தை சொன்னால் அவ்வளவுதான் பட்டனை இவர் மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டார்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தார்கள் கொஞ்சம் கடிந்து கொண்டார்கள் சகோதரருடைய ஆச்சரியத்தை பார்த்தால் அவருக்காக துஆ செய்ய வேண்டாமா யாராவது ஒருத்தர் தன் சகோதர முஸ்லிமின் அழகையோ ஆச்சரியத்தோடு பார்த்தாள் உடனே அருள் வளத்திற்காக பிரார்த்திக்கும் 


மாஷா அல்லாஹ் என்று சொல்லலாம் பாரக்கல்லாஹ் என்று சொல்லலாம் இப்படி சொன்னால் கண் திருஷ்டி பலிக்காது


உடனே நபியவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வர வைத்து அதிலே ஆமிர் அவர்களை முகம் கை கால் கழுவி வைத்து அந்த தண்ணீரை எடுத்து மயங்கி கிடந்த தோழரின் முகத்தில் தெளித்த பிறகு அவர் எழுந்து உட்கார்ந்தார் நிலைமை சீரானது என்று வரலாறு முடிகிறது


ஜின் இனத்தின் கண்திருஷ்டி


புகாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் வருகிறது உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது இல்லத்தில் ஒரு சிறுமியின் முகத்தில் கருப்பு தழும்பு இருப்பதை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த சிறுமிக்கு ஓதி பாருங்கள் ஏனென்றால் இவளுக்கு தீய பார்வையின் பாதிப்பு இருக்கிறது ஒரு ஜின்னின் கண்திருஷ்டி பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.



பிராணிகளின் கண்திருஷ்டி

பிராணிகள் தங்களது தீய பார்வைகளால் அல்லது கூறிய பார்வைகளால் மனிதர்களில் சில பாதிப்பை ஏற்படுத்த முடியும் நபிகள் நாயகம் சொன்னார்கள்

நாய்களையும் பாம்புகளையும் கொள்ளுங்கள் அதிலும் குறிப்பாக முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் இருக்கின்ற பாம்புகளையும் குட்டை வால் அல்லது வாலே இல்லாத பாம்புகளையும் கொள்ளுங்கள் ஏனென்றால் அவைகள் பார்வைகளைப் அழித்துவிடும் கர்ப்பத்தை கலைத்து விடும்


இவைகளின் விஷத்தால் மனிதனுக்கு பாதிப்பு என்பது நாம் அறிந்த விஷயம் சில பாம்புகள் சில பறவைகளைக் கூர்ந்து நோக்கி தன் பார்வையை கீழே வீழ்த்திவிட்டு மயக்கமடையச் செய்யும் செய்த நிகழ்ச்சிகள் உலகில் நடந்திருக்கின்றன சில பாம்புகள் தன் கூறிய பார்வையால் சிங்கத்தைக் கூட திசைதிருப்ப வைத்து விடும் என்பதும் அறிவியல் சொல்கிறது


இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் சொன்னார்கள் சில நாய்கள் பின் என்கிற இனத்தை சேர்ந்தது என்பது ஜின்களில் பழகின இனத்தைச் சேர்ந்தது எனவே நீங்கள் உணவு உண்ணுகிற போது அவைகள் ஏக்கத்துடன் வந்து நின்றாள் அவைகளுக்கும் சிறிது உணவு வைத்து அதை அப்புறப்படுத்தி விடுங்கள்

அவைகளை பார்க்க வைத்துக்கொண்டே நீங்கள் உண்ண வேண்டாம் எனில் அவைகளுக்கும் ஒரு தீய பார்வையும் இயக்கமும் இருக்கிறது அதனால் உங்களுக்கு சில பாதிப்புகள் வரலாம் என்று சொன்னாள் அதனால்தான் பண்டைய காலத்து இந்திய அறிஞர்களும் மரபு மேதைகளும் யூனானி வைத்தியர்களும் கூட பிராணிகள் கண் முன்னே நாம் உணவு உண்ணுவதை விரும்பவில்லை. 

அதேபோல இன்னும் சிலர் வேலைக்காரர்களும் சமையல்காரர்கள் பசியாய் இயக்கத்துடன் இருக்கிற பொழுது அவர்களுக்கு முன்னாள் உணவு உண்ணுவதை விரும்புவதில்லை ஒன்று முதலில் அவர்களுடைய பசியை அமர்த்தி விட்டு அதற்குப் பிறகு உண்ணுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அவர்கள் பசியுடன் இருக்கிற பொழுது அவர்கள் கண்முன்னே உணவு உண்ணுவதை தவிர்த்து விடுவார்கள்


எது எப்படியோ கண்திருஷ்டி என்பது உண்மை மனிதர்கள் ஜீன்களின் தீய பார்வையினால் எப்படி பாதிப்பு வர முடியுமோ அதை வெற்றி பாதுகாப்பும் தீர்வும் இருக்கிறதோ அதேபோல பிராணிகளின் தீய பார்வை கைகளாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு அவைகளை விட்டு பாதுகாத்துக் கொள்வதற்கும் வலியும் தீர்வும் சொல்லப்பட்டிருக்கின்றன


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...