- முன் வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்ட முத்தான நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்.
- அவர்களின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்யாத எந்த நபியும் இல்லை. எந்த வேதமும் இல்லை.
- அவர்களை அவர்களின் அருமைத் தோழர்கள் வர்ணித்த விதத்தை ஹதீஸ்களில் படித்தால் மெய்சிலிர்த்துப் போகிறோம்.
- நாம் சுப்ஹான மவ்லிதில் வர்ணிக்கின்ற வார்த்தைகள் அளவுக்கு மீறியதல்ல.
- நபியை நேரடியாகக் கண்ட அருமைத் தோழர்கள் அவர்களின் அழகைப் பருகி ஆனந்தப் பரசவம் அடைந்து நபியவர்களை அவர்கள் வர்ணித்துப் பாடிய வார்த்தைகளை ஊன்றிக் கவனித்தால் சுப்ஹான மவ்லிதின் வரிகளெல்லாம் அதற்கு ஈடாகாது.
- சுப்ஹான மவ்லிதின் வரிகளே "ஷிர்க்" (இணைவைப்பு) என்று கூறுவதானால் ஹதீஸ்களில் உள்ள அந்த சஹாபாக்களின் வரிகளை என்னவென்று கூறுவது?
- ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நவீன மார்க்க வாதிகள் (குழப்பவாதிகள்) எடுத்து வைத்த வாதம்: "கவிதைகளுக்கு மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை" "கவிதைகளே கூடாது" என்பதுதான். 'நபியே உமக்கு கவிதையை நாம் கற்றுத் தரவும் இல்லை. அது உமக்குத் தேவையுமில்லை'. என்ற வசனத்தை தவறாக விளங்கி அதையே ஆதாரமாக அடிக்கடி கூறி, "எனவே கவிதைக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை" என்றுதான் சமீபத்திய நாட்கள் வரை கூறிக் கொண்டிருந்தார்கள்.
- இது குறித்து அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி என்பவர் மவ்லிதைக் கிண்டல் அடித்துப் பேசிய வீடியோ உரையை அடிக்கடி தெருவில் போட்டுக் காண்பித்து கூட்டமாக அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதில் அவர் அடிக்கடி அழுத்துகிற ஒரு விஷயம் 'கவிதை மார்க்கத்தில் கூடவே கூடாது' என்பதுதான்.
- அதற்குப் பிறகு நமது உலமாக்கள், 'நல்ல கவிதைகளுக்கு மார்க்கத்தில் எந்தளவுக்கு ஆர்வப்படுத்தப் பட்டுள்ளது' என்று புஹாரி, திர்மிதி போன்ற பல்வேறு கிரந்தங்களிலிருந்து ஆதாரங்களை அடுக்கியதற்குப் பிறகு அந்த நவீனவாதிகள் அந்தர் பல்டி அடித்தார்கள்: 'கவிதை உண்டு ஆனால் நபியை அதிகமாகப் புகழ்ந்து கவிதை உண்டா?'
- அதற்கும் நாம் ஆதாரங்களை அடுக்கினோம். ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலி) அவர்களுக்கு நபி அவர்களே மஸ்ஜிதுன் நபவியில் மிம்பர் அமைத்துக் கொடுத்து, "பாடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் உதவுவான்" என்றெல்லாம் நபி அவர்கள் ஆர்வப் படுத்தியதையும் இன்னும் பல ஆதாரங்களையும் கூறியதற்குப் பிறகு அதையெல்லாம் எதையாவது சால்ஜாப்பு சொல்லி மறுக்க முடியுமா என்று பார்த்தார்கள். முடியவில்லை போலும். எல்லாம் ஆதராப் பூர்வமான ஹதீஸ்கள். உடனே இப்போது அவர்களின் இணைய தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் இப்படி எழுத ஆரம்பித்து விட்டார்கள்: சஹாபாக்கள் நபியப் புகழ்ந்து பாடியது உண்மைதான். ஆனால் அதைவிட அதிகமாக வர்ணிக்கின்றன மவ்லிது வரிகள். (கவனிக்க: ஏற்கனவே அவர்கள் கூறியது கவிதையோ பாடலோ அறவே கூடாது என்பது. இப்போது கூறுவது: "கவிதை கூடும்; ஆனால் வரம்பு மீறாமல் இருக்கவேண்டும்.")
- மவ்லிது, வரிக்கு வரி எந்த வகையிலும் குர்ஆனுக்கு- ஹதீசுக்கு முரண்படவில்லை என்பதை அல்லாமா அபுத் தலாயில் ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்களும் அல்லாமா ஸைபுத்தீன் ரஷாதி ஹழ்ரத் போன்ற அநேக உலமாக்களும் ஆதாரத்துடன் விளக்கியதற்குப் பிறகு கொஞ்சம் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
- ஒரு நேரம் அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்: "மவ்லிது புகழ் பாடல் என்பது ஏதோ தமிழகம் கேரளா போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் சிலர் தன் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கியது உலகில் வேறு எங்கும் இதைக் காணமுடியாது" என்று கூறி மக்களை நம்ப வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பாலஸ்தீன் மொரோக்கா பாக்கிஸ்தான் துருக்கி எகிப்து ஏன்.. மக்கா மதினாவில் கூட நபி புகழ் பாடி மக்கள் ஆனந்தப் பரவசம் அடைந்தத வீடியோ காணொளிகள் இணையத்தில் வந்து குவிந்தபோது குழப்பவாதிகள் இன்னும் மூச்சடைத்துப் போயிருக்கிறார்கள்.
30 ஜனவரி, 2014
உத்தம நபி (ஸல்) உதயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
முக்கியப் பதிவுகள்
இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இஸ்லாம் இயற்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் (ஹதீஸ்களிலும்)...
-
1) திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும் ? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் ( 16:98) மற்றும் ப...
-
முந்தைய பதிவுகள்: திருக்குர்ஆன் வினாடி வினா 1-40 திருக்குர்ஆன் வினாடி வினா 41-80 81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை ? ...
-
இதுவரை அடியேனின் பார்வையில் பட்ட தளங்கள்.! இன்னும் இருந்தால் அதை கருத்துரையில் தெரிவித்தால் அவசியம் சேர்த்துக்கொள்கிறேன் இன்ஷா அல்லாஹ். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்