வாழ்கிறதே!
நடுவர் அவர்களே! உங்களை
எல்லோருமே புகழ்ந்து 'ஐஸ்' வைத்தார்கள். எனக்கும் தங்களை புகழ ஆசை தான் ஆனால் அதற்கான
வார்த்தை இல்லாத ஏழையாகி விட்டேன்.
நீதியை பற்றி என்னிடம் ஒரு
கவிதை எழுதச் சொன்னால் தாங்களுடைய பெயரைத்
தான் எழுதுவேன்
மேலும் எடக்கு மடக்காக பேசி
அமர்ந்து இருக்கிற எனது எதிரி இல்லை, இல்லை எதிர் அணியினர்களே! மேலும் ஏக்கமான தூக்கமான இந்த நேரத்திலும்
கூட மார்க்கமான விஷயத்தை மூர்க்கமாக கேட்பதற்காக வருகை தந்திருக்கும் வருங்கால ஹாஜிகளே!
ஹாஜாக்களே மனித நேயமிக்க புனிதர்களே!.
நம்மை இப்புனித விழாவில்
ஒன்று கூட்டியது போல் தம்மையெல்லாம் சுவர்க்கத்திலும் ஒன்று கூட்டுவானாக
ஆமீன்....
நான் விஷயத்திற்கு வருகிறேன்.
மனித நேயம் வாழ்கிறது!
எதிரணியிலே ஹஸீனா தங்கச்சி
வந்தாங்க! வந்து
வானத்தை பார்த்தேன். பூமியை
பார்த்தேன். மனுஷன இன்றும் பார்க்கலே என்று காந்தி காலத்து பாடல் ஒன்றை பாடினார். அதெல்லாம் ஓல்ட் நடுவர் அவர்களே! எங்களுக்கும்
பாட தெரியும்! வானம் பெருசுடா பூமி பெருசுடா அதுக்கு மேலயும் நட்பு பெருசுடா இது தான்
லேட்டஸ்ட் அது ஒல்ட் இது கோல்ட்.
நடுவர் அவர்களே! இன்றைக்கு நட்பு முறை இல்லாமல் யாராவது இருக்கிறார்களா? யாராவது எனக்கு நண்பர்கள் கிடையாது என்று சொல்லட்டும் பார்க்கலாம்.
தாய்,தந்தை, சகோதரன், சகோதரி, மனைவி மக்கள் கூட இல்லாதவனை இச்சமூகத்திலே காட்டி விடலாம். ஆனால்
நண்பன் இல்லாதவனை யாருமே காட்ட முடியாது.
மனைவியிடம் சொல்லாத விஷயங்களை கூட நண்பனிடம். சொல்கிறான்.
ஃபிரண்ட்டுக்கும், கரண்ட்க்கும் வித்தியாசம்
என்ன தெரியுமா! நடுவர் அவர்களே!
உயிரை கொடுப்பது ஃபிரண்ட்
உயிரை எடுப்பது கரண்ட்
நடுவர் அவர்களே!
சில மாதங்கள் முன் நடந்த சம்பவம் இது சத்தியமான விஷயம் என் நண்பருக்கு கிட்னி
பிரச்சனை இன்னொரு நண்பர் தான் ஓடி வந்தாரு
வந்து சொன்னாரு.
என் நண்பருக்கு கிட்னி பிரச்சனையா?
என் கிட்னியை தருகின்றேன்
என்று சொல்கிறானே இது மனித நேய மில்லையா?
ஹிதேந்திரன் என்று சொல்லக்கூடிய
இளைஞன் இறந்த பின்னால் தான் பலருக்கு இதயம் இருப்பதே தெரிந்தது. அவனது இதயத்தையே பிறருக்கு
தானமாக கொடுத்தார்களே அவனது பெற்றோர் இது மனிதநேயமில்லையா?
நடுவர் அவர்களே! நண்பனுக்காக
கிட்னியையே கொடுத்தானே. இன்னொரு நண்பன்.
சட்னியை கூட கொடுக்காத எதிரணியினர்களுக்கு கிட்னியை பற்றி என்ன தெரியும்.
கிட்னியை கொடுத்த தியாகியினுடைய மனித நேயம் பற்றி என்ன தெரியும்.
பேச வந்துட்டாங்க! மனித
நேயம் வீழ்கிறதுன்னு. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். மேலும் மஞ்சள்
காமாலையனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தான் தெரியுமாம்!.
அது போல எதிரணியினர் வீழ்கிறது.....
வீழ்கிறது.... வீழ்கிறது. என்று தாம் புடிச்ச முயலுக்கு 3 காலு தான் பேச வந்துட்டாங்க.
நடுவர் அவர்களே! வாதத்திற்கு
மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தே கிடையாது. நீங்க தான் பக்குவமாக அவர்களுக்கு புரிய
வைக்கணும். வாழ்கிற மனிதநேயத்தை வாழ வைப்போம் என்று.
அருமை நீதிமான் அவர்களே
இன்றைக்கு இஸ்லாத்தில் மட்டும் கிட்ட தட்ட 250அமைப்புகள் உள்ளது. மேலும் இந்த இந்தியாலே
எத்தனையோ போராட்டங்கள் நடைபெறுகின்றன எத்தனையோ கொடிக் கம்பங்கள் பரகின்றன. இதெல்லாம்
ஏன் ஒரு மனிதனின் உரிமை மதிக்கபட வேண்டும் என்று தானே மனித நேயம் வாழ்கிறது என்று தானே
அர்த்தம் இது ஏன் இந்த மனித நேயமற்றவர்களுக்கு புரிய மாட்டேங்குது.
2004ம் ஆண்டிலே இந்தோநேசியா
சுமித்ரா தீவிலே ஏற்பட்ட பூகம்பம் அதனால் ஏற்பட்ட சுனாமி அந்த சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவிக்கரம் ஏந்திய நல் உள்ளங்கள் ஏராளம், ஏராளம் இதெல்லாம் சுனாமியின் போது சுனாமிக்கு பயந்து திருநெல்வேலிக்கு எஸ்கேப்பான அம்ரின் போன்ற முதியோர்களுக்கு
எங்கிருந்து தெரிய போகுது.
எதிரணியிலே அம்ரின் வந்தாக
வந்து சொன்னாக எதிரணியில் என்னைப் பார்த்து குழந்தை என்று சொன்னாக ஆம் நானும் என் அணியினர்களும்
குழந்தைகள் தான் பாவமே அரியாத பால் மனம் மாராத வெள்ளை மன குழந்தைகள் நாங்கள்
சும்மா இருக்கிற சிங்கங்களை
சீண்டி பார்க்கிறார்கள். கர்ஜிப்பதற்க்கு தான் ஆசை இருந்தாலும் நடுவருடைய அன்பு, பண்பு, பாசம் நேசக் சங்கிலிகள் என்னைக் கட்டி விட்டது.
ஒரே ஒரு வார்த்தையை நான்
சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடுகு சிருத்தாலும் ஏய் பாப்பா அதன் காரம் குறையாது
டோய் நாங்களெல்லாம் தூசி தான் கண்ணிலே விழுந்தோம். துன்யாவையே மறைத்திடுவோம்! ஜாக்கிரதை!
அருமையான நடுவரவர்களே வாழ்கிற மனித நேயத்திற்கு பல எடுத்துக்காடுகளை சொல்லலாம்.
ஒரு சமயம் பாகிஸ்தானில்லிருந்து ஒரு கடிதம் வந்தது. எங்களது சிறுமிக்கு
நீங்கள் சிகிச்சை செய்ய வேண்டும்மென்று
அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. அந்த பாகிஸ்தான் சிறுமியை சென்னையில் இருக்கிற
மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறது. அந்த சிறுமிக்கு இருதயம் பாதிக்கப்பட்டு முச்சிலும்
பழுது அடைந்து விட்டது. டாக்டர்கள் சொன்னார்கள் பாகிஸ்தான் சிறுமிக்கு இருதயம் மாற்றப்பட
வேண்டும் என்று சொன்னார்கள்.
உடனே தீயில் கருகி காயமடைந்து
அங்கு சேர்க்கப்படு இருக்கிற துர்கா சிறுமியுடைய பெற்றோர்களிடம் கேட்கிறார்கள் உங்களது
சிறுமி துர்கா இறந்து போகுவது நிச்சயமாகி விட்டது. சிறுமியின் இதயத்தை பாகிஸ்தான் சிறுமிக்கு
கொடுக்க தயாரா எனக் கேட்க துர்காவின் பெற்றோர்கள் கூறினார்கள். எங்களது சிறுமி செத்தாலும்
அவளது இதயம் வாழ்வதை நாங்கள் பிரியப்படுகிறோம் அது இந்தியாவில் வாழ்ந்தால் என்ன? பாகிஸ்தானில் வாழ்தால் என்ன
சிறுமி துர்காவின் இதயத்தையே
கொடுத்தார்கள் அச்சிறுமியின் இதயம் பாகிஸ்தான் சிறுமிக்கு இதயமாக பொருத்தப்பட்டது.
பாகிஸ்தான் சிறுமியின் உடலுக்குள் இந்திய சிறுமியின் இதயம் பொருத்தி வாழ்த்து கொண்டு
இருக்கிறது.
இப்படி நாடு விட்டு நாடு
மனிதநேயம் வாழ்க்கிற போது மனிதநேயம் செத்து விட்டது வீழ்ந்து விட்டது. என செய்திகளை
தெரியாமல் செய்தித்தாள்களை படிக்காமல் வாயிக்கு வந்த படியெல்லாம் உலறாதீர்கள்.
அருமையான நடுவரவர்களே! குடும்பத்திலேயும்
நாம் மனிதநேயத்தை பார்கிறோம்.
கென்னிய நாட்டிலே ஒரு சிறுமிக்கு கிட்னியிலே கோளாறு ஏற்படுகிறது. உடனே தந்தை தன்னுடைய
கிட்னியை கொடுக்கிறார். ஒழுங்கான முறையில் பொருத்தப்படாததால் மீண்டும் கிட்னி பிரச்சனை
வருகிறது. தனது சகோதரி கிட்னி கொடுக்கிறாள்
அப்பொழுதும் அதே பிரச்சனை மூன்றாவதாக ஆக தம்
தந்தை கிட்னி கொடுக்க முன் வருகிறான் அது இந்தியாவில் பொருத்தினால்; தான் சரியாக வரும் என்று நினைத்து இந்தியாவுக்கு வந்து அந்த கென்னிய நாட்டு சிறுமி
இந்திய நாட்டுக்கு வந்து கிட்னி பொருத்திட்டு உயிர் வாழ்கிறாளே இப்படி குடும்பத்துக்குள்ளே
மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மனிதநேயம் செத்து விட்டது. மறுத்து விட்டது.
என்கிறார்களே இந்த மனிதாபிமானம் மற்றவர்கள்!.
மனிதநேயம் என்பது நிறைய
நிரம்பி கிடக்கிற ஒரு விஷயம் மனிதநேயம் என்பது ஒரு முழுமையான வெள்ளை பேப்பர் போன்றது.
அதிலே ஒரத்திலே ஒரு கருப்புள்ளியை வைத்து விட்டு இதில் என்ன தெரிகிறது என்று கேட்டால்
கருப்புள்ளி தெரிகிறது என்போம் ஆக தீய விஷயம் தான் உடனே தெரியும் மனிதநேயமான பல நல்ல
விஷயம் கண்ணுக்கு தெரியாது. ஆக தீய விஷயம் உடனே தெரியும் நல்ல விஷயம் உடனே தெரியாது.
மனிதநேயம் என்பது முழுமையான
வெள்ளை பேப்பர் போன்றது மனித நேயம் வீழ்கிறது. என்பது ஒரத்தில் உள்ள கருப்புள்ளி போன்றது.
மனிதநேயம் என்பதற்கு கோடாணக்கோடி
விஷயம் இருக்கிறது. மனிதநேயம் வீழ்வு என்பதற்கு ஒரு சில விஷயம் தான் இருக்கிறது.
அரபிலே கூறுவார்கள் அந்நாதிரு கல் மஃதூமி
விரல்விட்டு எண்ணக்கூடிய
சில விஷயங்களை அது இல்லாதது போல் என்று கூறுவார்கள் ஆகவே மனிதநேயம் என்பது வாழ்ந்து
கொண்டு இருக்கிறது.
மனிதநேய வீழ்வு என்பது எங்கோ
நடக்கிற அதை வைத்து கொண்டு உலகமெல்லாம் மனித நேயம் வீழ்ந்து விட்டது என்று சொன்னால்
அது நானும் சரி என்றுமே ஏமாறாத நடுவரும் சரி
யாரையும் ஏமாற்றாத ஏமாற்ற தெரியாத பொது மக்களான நீங்களும் சரி ஒரு போதும் ஏற்க்க மாட்டோம்.
ஆகவே மனிதநேயம்
வாழ்கிறதா வீழ்கிறதா என்றும் செத்தவனை எழுப்பி கேட்டாலும் சரி தான் சாராயம் குடிச்சவனை கேட்டாலும்
சரி தான் பிறந்த குழந்தையிடம் கேட்டாலும் சரி தான் ஏன் ஒரு பைத்திய காரனிடம் கேட்டாலும்
கூட
மனித நேயம் வாழ்கிறது என்று சொல்வான்.
அருமையான என் சகோத சகோதரிமார்களே!
ஒரு சின்ன பையன் இவ்வளவு நேரம் மனித நேயத்தை பற்றி பேசி இருக்கிறேன். நெஞ்சிலே ஈவு
இரக்கம் கொண்ட கண்மணிகளே பொன்மணிகளே, பெண்மணிகளே நடுவருடைய
தீர்வுக்கு முன் உங்களது பொன்னான வாயிலிருந்து இனிப்பான வார்த்தையை கேட்க எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கிறது. ஆகவே ஆண்கள்
உரத்த குரலிலும் பெண்கள் மெல்லிய குரலிலும், சிறுவர்கள் கனத்த குரலிலும் மூன்று தடவை சத்தம் போட்டு சொல்லுங்கள்
அப்பவாவது எதிர் அணிக்கு நல்ல உறைக்கட்டும்.
இன்றைய உலகில் மனிதநேயம்
வாழ்கிறதா? வீழ்கிறதா?
இன்றைய உலகில் மனித நேயம்
வாழ்கிறதா? வீழ்கிறதா?
இன்றைய உலகில் மனிதநேயம்
வாழ்கிறதா? வீழ்கிறதா?
அல்ஹம்து லில்லாஹ் உங்கள்
எல்லோருடைய சப்தத்தை விட எங்கள் நீதிமான் நடுவருடைய சப்தம் தான் எனக்கு ரொம்ப நல்ல
கேட்டது.
ஆக மக்கள் தீர்ப்பே நடுவர் தீர்ப்பு
என்று ஆணித்தணமாக கூறி வாய்ப்பளித்தமைக்கு
நன்றி கூறி பெறுகிறேன். விடை தருகிறேன். ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வஆகிரு தஃவானா அனில் ஹம்து
லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
அருமையான தெளிவுரை
பதிலளிநீக்கு