17 ஆகஸ்ட், 2013

முஹம்மது (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா 4



76. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மரணித்த மனைவி யார்?
ஹழ்ரத் அன்னை ஸைனப் பின்து குஸைமா (ரலி) அன்ஹா

77. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முஹம்மது என பெயர் சூட்டியவர் யார்?
பாட்டனார் அப்துல் முத்தலிப் ஆகும்.

78. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் மிஃராஜ் எனும் விண்ணுலக பயணம் மேற்க்கொண்டார்கள்?
நபி (ஸல்) அவர்கள் தங்களது 52வது வயதில் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

79. முஹம்மது நபி (ஸல்)அவர்களுக்கும் அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் பிறந்த குழந்தைகள் யார்? யார்?
1. ஹழ்ரத் காஸிம் (ரலி)
2. ஹழ்ரத் அப்துல்லாஹ் (ரலி)
3. ஹழ்ரத் ஸைனப் (ரலி)
4. ஹழ்ரத் ருகைய்யா (ரலி)
5. ஹழ்ரத் பாஃத்திமா   (ரலி)
6. ஹழ்ரத் உம்மு குல்ஸும்  (ரலி)

80. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் அடிமையான மாரிய்யதுல் கிப்திய்யா (ரலி) அவர்கள் மூலம் பிறந்த குழந்தை யார்?
ஹழ்ரத் இப்ராஹீம் (ரலி) அவர்களாகும்

81. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத்திற்காக வெளியேறிய போது அவர்களின் வயது என்ன?
53 ஆகும்

82. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்போது ஹஜ் செய்தார்கள்?
ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ் செய்தார்கள்


83. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஸஹாபாக்களுடன் ஹஜ் செய்தார்கள்?
சுமார் ஒருலட்ச தோழர்களுடன் ஹஜ் செய்தார்கள்

84. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசியாக செய்த ஹஜ்ஜிக்கு என்ன பெயர் சொல்லப்படும்?
ஹஜ்ஜத்துல் வதா விடை பெறும் ஹஜ் என்று சொல்லப்படும்.

85. முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய ஆண் மக்கள் 3 பேர்களும் எப்போது மரணமானார்கள்?
நபி (ஸல்) அவர்களுடைய 3ஆண் மக்களும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட்டார்கள். இன்னா லில்லாஹி...

86. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேச்சி எவ்வாறு இருந்தது?
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
'நபி (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று விரைவாகப் பேசக்கூடியவர்களாக இருந்ததில்லை அவர்களிடம் அமர்ந்திருப்பவர் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளிவிட்டு தெளிவாக அவர்களின் பேச்சு இருக்கும்.

87. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்பார்களா?
நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்ப்பவர்களாகவும், அதற்குப் பிரதியுபகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்'.
88. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்தபின் அவர்களது புனித நெற்றியிலே முத்தமிட்ட ஸஹாபி யார்?
ஹழ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களாகும்.
89. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குணம் எப்படி இருந்தது?
நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே  இருந்தது.

90. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு என்ன சொல்லப்படும்?
ஸஹாபாக்கள் என்று சொல்லப்படும்.

91. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மகத்தான மாபெரும் பாக்கியம் எது?
அல்லாஹ்வை நேரடியாக கண்கூடாக கண்ட மிஃராஜ் உடைய பாக்கியம் ஆகும்.

92. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கடைசியாக சொன்ன வார்த்தை எது?
அல்லாஹும்ம ஃபிர்ரஃபீகில் அஃலா உயர்வான நண்பனின் பக்கம் சேரப் போகிறேன் என்ற வார்த்தையாகும்.


93. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிக்கு என்ன பெயர் சொல்லப்படும்?
அல் ஹதீஸ் என்று சொல்லப்படும்


94. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்களுக்கு என்ன சொல்லப்படும்?
அஹ்லபைத் என சொல்லப்படும்.


95. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த போர்க்களத்தில் பற்கள் உடைந்தது?
உஹது போர்களமாகும்.


96. முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அல்லாஹ் கொடுத்த 6 சிறப்பு அம்சம் என்ன?
1. குறைந்த வார்த்;தைகள் மூலம் நிறைந்த கருத்துக்களை கூறும் வாக்குகள்.
2. என்னைக் கானும் எவரும் மரியாதையுடன் அஞ்சும் தன்மை கொடுத்தும் உதவப்பட்டுள்ளேன்.
3. யுத்தத்தில் கிடைத்த பொருட்களை உபயோகித்துக் கொள்ள எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4. எங்கு வேண்டுமானாலும் தொழுவதற்கும் சுத்தம் செய்வதற்கும் எனக்கு இந்த பூமி ஆகுமாக்கப்பட்டுள்ளது.
5. படைப்புகள் அனைவருக்கும் பொதுவான முறையில் நான் தூதராக அனுப்பப்பட்டிருக்கிறேன்.
6. என்னைக் கொண்டு நபிமார்கள் வருகை முடிக்கப்பட்டுவிட்டது.


97. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் எத்தனை முறை முடி வெட்டி உள்ளார்கள்?
4முறையாகும்.

98. முஹம்மது நபி (ஸல்;) அவர்களுக்கு முடி வெட்டும் நாவிதர் யார்?
கிதாஷ் என்பவர் ஆகும்.

99. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கொடி எவ்வளவு உயரம் இருந்தது?
நபி(ஸல் அவர்களின் கொடி 12 அடி உயரம் இருந்தது.

100. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வேர்வை எப்படி இருக்கும்?
நபி (ஸல்) அவர்களின் வேர்வையின் நறுமணத்தைப் போல் வேறு எந்த ஒரு கஸ்தூரியையும் நான் மணந்ததில்லை என அனஸ்(ரலி) சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...