பசிக்கின்ற மனிதனுக்கு புசிக்கின்ற
உணவளித்து ரசிக்கின்ற ரட்சகன் அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ்.
இறைவா! தொடக்கையிலும் உன்னினைவு
தூய உன் நபிநாதர் பாதையில் நடக்கையிலும் உன்னினைவு நோயுற்று பாயில் கிடைக்கையிலும்
உன்னினைவு இறுதியில் எடுத்து அடக்கையிளும் உன்னினைவு திருப்புகழ் பாடி துவக்கையிலும் உன்னினைவு!
அகிலத்துக்கே அருள் கொடையாக
வந்து வகித்த மக்கத்து ராஜாவாம் மதினத்து ரோஜாவாம் நற்குணத்தின் தாயகமாம் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களை போற்றி புகழ்ந்தவளாகவும் எனது
உரையை ஆரம்பம் செய்கிறேன்.
இரவு சூரியனாக காட்சி தந்திருக்கும்
நடுவரவர்களே சத்தியமாக பல கருத்துக்களை இவ்வயத்திற்கு எடுத்து உரைப்பதற்காக வந்துள்ள
சத்தியவான்;களான என்
அணியினர்களே
ஊசிபோன எதிர் அணிகளே
கள்பில் நிறைந்த கண்மணி
நாயகம் (ஸல்) அவர்களின் பாக்கியம் நிறைந்த உம்மத்துக்களே எல்லோருக்கும் மீண்டும் என்
ஸலாமை தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
நான் பேச எடுத்திற்கும்
மகுடம் இன்றைய சூழ்நிலையில் மனிதநேயம் வாழ்கிறதா? வீழ்கிறதா?
வாழ்கிறதே என்று சொல்வேன்.
நடுவரவர்களே இன்று மனிதநேயம்
வாழ்கிறது.
எதிர் அணி சொல்கிற எங்கெங்கொ நடக்கிற 1,2 நிகழ்ச்சிகளை எல்லாம் பூதாகரமாக ஆக்கி மிகப் பெரிதுபடுத்தி மிகை
படுத்தி உலறிச் சென்றுள்ளனர்.
ஒட்டு மொத்தமாக பாருங்கள்
இன்று உலகமே அப்படித்தான்.
ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகி விட்டால் அந்த
விபத்துள்ளே இரண்டு பேர் பலி நான்கு பேர் காயம் என்று சொன்னால் செய்தித்தாள்களிலே அதைத்
தான் போடுவார்கள் என்றைக்குமே, நெகடிவ்வை தான் போடுவார்கள்.
ஆனால் ஒரு பேருந்திலே
52 பேர் அல்லது 42 பேர் காப்பாற்றப்பட்டார்கள் உயிர் பிழைத்தார்கள் என்ற செய்தி அதில்
இருக்காது.
ஒரு பஸ் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு
நல்லவிதமாக சென்றடைந்தது என்றால் அதை யாராவது செய்தித்தாளில் போடுவார்களா?
நடுவரவர்களே என்றைக்குமே நல்லது மறைந்துதான் இருக்கும்
தங்கபொக்கிஸம் மறைந்து தான் இருக்கும்.
நடுவரவர்களே நீங்கள் ஓர் தங்கபொக்கிஸம் நீங்கள்
மறைந்து தான் இருந்தீர்கள், உங்களை தோண்டி அல்ல அல்ல தேடிக்கொண்டு
வந்து இங்கே உட்கார வைத்துள்ளோம்.
நடுவரவர்களே நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள்
சொன்னார்கள் உங்களது தலைவர்
கருப்பு நிற அடிமையாய் இருந்தாலும் அவர் தலை
திராட்சை போன்று, சொலை சொலையாய் இருந்தாலும் அவருடைய பேச்சை கேளுங்கள், அவருடைய கட்டளைக்கு கட்டுப்படுங்கள் என்றார்கள். அப்படிப்பட்ட
மனிதநேயம் இன்று வாழ்கிறதா இல்லையா?
அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள் 44வது அதிபராக கருப்பு நிற
அடிமை பாரக் ஒபாமா அவர்கள் வெள்ளை மாளிகையில் கருப்பு சிங்கமாக புகுந்து கலக்கி கொண்டு
இருக்கிறார்;.
இது வாழ்கின்ற மனித நேயத்திற்கு நல்ல சான்று
ஆக வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு சிங்கம் நுழைந்திருப்பது அதுவும் மிகப் பெரும்
வல்லரசு நாடான அமெரிக்காவிலே இப்படிப்பட்ட
நிகழ்வா?
77சதவீதம் வெள்ளையர்கள்
வாழக் கூடிய மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டிலே வெறும் 13 சதவீதம் உள்ள கருப்பின
மக்களிலே ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று சொன்னால் .... வாழ்கின்ற மனித
நேயத்திற்கு இதைவிட வேறு சான்று கிடையாது.
இதைத்தான் திருக்குர்ஆன் இப்படிச் சொல்லும் ஓ
மனிதர்களே கேளுங்கள் ஒரு தாய் தந்தையிலிருந்து
உங்களை படைத்துள்ளேன். எனவே ஒவ்வொருக்கொருவர்
சகோதரர்கள்.
அவர் முஸ்லீமாக இருந்தாலும் சரி, கிறிஸ்துவராய் இருந்தாலும்
சரி, இந்துவாய்
இருந்தாலும் சரி, யூதர்களாக இருந்தாலும் சரி, நஸரார்களாக இருந்தாலும் சரி மாற்று மத சகோதரர்களாக இருந்தாலும்
சரி அவர்கள் எல்லோருமே சகோதரர்கள் என்று திருமறை குர்ஆனில் மனித நல் இணக்கத்தை சொல்லி
கொண்டிருக்கிறது.
நடுவரவர்களே உலக மக்கள் அனைவர்களும் சகோதரர்கள்; என்று சொன்னால் ஒருவொருக்கொருவர் உதவி செய்பவர்களே சகோதரர்கள்
இரக்கப்படுவர்களே சகோதரர்கள்
என்று நபிகள்நாயகம்(ஸல்)அவர்கள் சொன்னார்கள் பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம்
காட்டுங்;கள். அப்பொழுது தான் வானிலே உள்ளவர்; உங்கள் மீது இரக்கப்படுவான் என்று சொன்னார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு
ஏற்பட்ட சுனாமிலே எந்த அளவு மக்கள் உதவி செய்தார்கள் தெரியுமா? நான் என் கண்ணால் பார்த்த காட்சி
ஒரு பிணத்தை இரு சகோதரர்கள் வுறழ விலரில் எடுத்துச் சென்றார்கள்; இதை விட வேறு உதவி வேணுமா?
சுனாமிலே விழுந்த பிணத்தை டூவிலரில் கொண்டு சென்று
கபர்ஸ்தானிலே புதைப்பதை நான் பார்த்தேன். இது தானே மனிதநேயம், ஆனால் எதிர் அணி சகோதரி அம்ரின் சுனாமி நேரத்திலே அகதியாக கடலே
இல்லாத ஊருக்கு எஸ்கேப் ஆகிட்டா. அவளது
உயிர் தோழியான என்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை
எஸ்கேப் இந்த மாதிரி ஆள்கள் இருந்தால் மனித நேயம் எப்படி வாழும்?
அதை விட நாகூர் பகுதிலே சுனாமி வந்த போது மக்கள் எந்த வித வேற்றுமை இல்லாமல்
உதவினார்கள். அங்குள்ள மைய வாடியிலே எத்தனியோ சுனாமிலே பாதிக்கப்பட்ட பிணங்கள,;
அதிலே எத்தனியோ பிர சமயத்தவர்களின் பிணங்கள்.
நடுவரவர்களே சுனாமி நிதி
என்பது வேறு, உதவி என்பது
வேறு உதவிகள் நிறைய நடத்துள்ளது. அதனால் மனிதநேயம்
வாழ்ந்திருக்கிறது.
மாநிலம் விட்டு மாநிலம்
சுனாமி உதவி வந்தது. சுனாமிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்தார்கள.; அவர்களுக்கு செல்வங்களை குவியல் குவியலாக கொடுத்தார்கள். ஆடைகளை
அணி அணியாக வழங்கினார்கள் இதெல்லாம் யாரால் மறுக்க முடியுமா?
ஆகவே இவைகளெல்லாம் வாழ்கிற
மனித நேயத்திற்கு சான்று.
நடுவரவர்களே முன்னாள்; ஜனாதிபதி இரண்டாம் காந்தி என்று பெருமையோடு அழைக்கப்படுகின்ற A.P.J அப்துல்கலாம் அவர்கள் ஒரு பாதையில் நடக்கின்ற போது ஒரு ஊனமுற்றவரை
பார்த்தார் அவர் கேம்ஸ்டிங்கை வைத்து கொண்டு மிக சிரமத்தோடு நடந்து கொண்டிருந்தார்.
அந்த ஊனமுற்றவரை பார்த்து A.P.J அப்துல்கலாம் அவர்கள்
இரக்கப்பட்டார். ஒரு சகோதரர் கஷ்டப்படுவதை தாங்க முடியாமல் உடனே கம்பெனிகளுக்கு உத்தரவிட்டார். பிளாஸ்டிக்
கால் செய்யுங்கள் ஊனமுற்றவருக்கு நீங்கள் உதவி
புரியுங்கள் என்று சொன்னார்கள் பிளாஸ்டிக்
காலை செய்தார்கள். செய்து கால் இப்ப முக்கால் அளவு செய்து ஊனமுற்றவர்கள் மிகவும் நலமானவர்களாக
நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சுலபமான முறையிலே டூவிலரை ஓட்டி கொண்டும் இருக்கிறார்கள்
4விலரை ஓட்டி கொண்டும் இருக்கிறார்கள். இப்படி இரக்கமுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வாழும் மனிதநேயத்திற்கு
இதை விட சான்று வேறு எதுவும் கிடையாது.
சமீபத்திலே திருநெல்வேலி
மாவட்டம் உடன்குடி அருகிலே இருக்கிற பரமன்குறிச்சிலே மௌலவி அக்மல் அவர்களின் பள்ளிவாசலுக்குள்
ஒரு பாம்பு வந்தது அப்பொழுது அந்த பாம்பு அவரை கொத்திவிட்டது அதனால் அவர்கள் மரணமானார்கள்
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிவூன்) ஷஹித் ஆனார்கள் அந்த மௌலவிற்கு உதவி செய்யவில்லையா
நமது அண்ணாநகர் பள்ளிவாசலில் கூட மரணமடைந்த
அந்த ஆலிம்காக வேண்டி ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வசூல் செய்யப்பட்டது வாரி தந்த வள்ளல்களான
நீங்களே அதற்கு சாட்சி ஆக மனிதநேயம் அண்ணாநகரிலும் வாழ்கிறது. இல்லை இல்லை இந்த அன்பு
நகரிலும் மனிதநேயம் வாழ்கிறது. இன்ஷா அல்லாஹ் கியாமத் நாள் வரை வாழத்தான் போகிறது.
அவரது குடும்பத்தை யாரும்
பார்க்கவில்லையா? அந்த ஆலிமை இழந்தவர்களுக்கு உதவவில்லையா?
திருநெல்வேலி மாவட்ட ஜமா
அத்துல் உலமா மக்களிடம் நிதி திரட்டி அவர்களது குடும்பத்திற்கு ரூபாய் 2லட்சம் கொடுத்தார்கள்
அங்;குள்ள ஜமாத்தார்களும் பல உதவிகள் செய்து வாழ்கிற மனிதநேயத்தை
தூக்கி நிறுத்தினார்கள்.
எதிர் அணியில் இருந்து எனது சகோதரி அம்ரின் வந்தாள்
அவள் சொன்னாள் அநீயாயகாரர்களுக்கு உதவி செய்ராங்க
அநீயாயகாரர்களுக்கு உதவி செய்ராங்கன்னு சொன்னாள் நான் சொல்கிறேன். அநீயாயகாரர்களுக்கு
உதவி செய்ய வேண்டும். இதை நான் சொல்லவில்லை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
உன்ஸூர் அகாக்க இன்க்கான ழாலிமன் அவ் மழ்லூமா
உன் சகோதரன் அநியாய காரனாக
இருந்தாலும் உதவி செய் அல்லது அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் உதவி செய் என்றார்கள்.
உடனே நபித்தோழர்கள் கேட்டார்கள்
வியப்போடு யா ரஸீலுல்லாஹ் அநீதி இழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்வது சரி அநியாயகாரர்களுக்கு
உதவி செய்வது எப்படி என வியப்போடு கேட்டார்கள்.
அதற்கு நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் சொன்னார்கள் அநீயாய காரனை அந்த அநீயாயம்
செய்வதைவிட்டும் நீ தடுப்பதும் அவனுக்கு செய்கிற உதவி ஆகும்.
சும்மா வாய்யிக்கு வந்ததல்லாம்
வந்து உலறக் கூடாது இப்படி நபி மொழி இருக்கிறதை
மறந்துவிட்டாயா? சகோதரியே!
எய்து விட்ட அம்பையும் விட்டு
விட்ட வார்த்தையையும் பொறுக்க முடியாது சகோதரியே?
ஆகவே மனிதநேயம் மனிதன் உள்ளவரை
வாழ்ந்தது இன்றும் வாழ்கிறது. இன்ஷா அல்லாஹ் இனியும் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கும்.
ஒரே ஒரு நாள் மனித நேயம் அழிந்திருக்கும். அன்று உலக வாழ்வு முடிந்திருக்கும்.
ஆகவே இன்றைய உலகில் மனிதநேயம்
வாழ்கிறதே! வாழ்கிறதே! வாழ்கிறதே!
என்று ஆணித்தரமாகக் கூறிக் கொண்டு பெறுகிறேன் விடை தருகிறேன்
ஸலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்