27 ஜூன், 2012

நடுவர் முன்னுரை



வாழ்த்துவதற்கு நாவையும் தாழ்த்துவதற்கு சிரசையும் தந்த ஒரே இறைவன் ஒப்பற்ற இறைவனை வாழ்த்தி வணங்கி இந்த பட்டிமன்றத்தை துவங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பெருந்தொகையாக கூடியிருக்கும் பெருந்தகைகளே அருகிலிருந்து வந்திருக்கும் ஆன்றோர்களே சான்றோர்களே வானவர்கள் வாழ்த்துகின்ற மாணவர்களே

இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு: உயர்ந்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பதுகல்வியா செல்வமா?
இது போன்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்துவது காலத்தின் கட்டாயம். காரணம் இன்று கல்வி'பொருளாதாரம் இரண்டிலும் மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயம் இந்த சமுதாயம்தான்.
இந்நிலையில் பட்டிமன்றம் மூலமாகவும் கல்வி மற்றும் பொருளாதார அவசியத்தை மக்களுக்கு உணர்த்தலாம் என்ற மேலான எண்ணத்தில்தான் இந்த பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இங்கு கல்வியே என்று கருத்துரை வழங்க இரண்டு பேர் முன் வந்துள்ளனர் செல்வமே என்று கருத்துரை வழங்க இரண்டு பேர் முன் வந்துள்ளனர். முதலில் இவர்களை மோதவிடுவோம் பிறகு ஒரு முடிவுக்கு வருவோம் சரியா?
இப்பொழுது செல்வமே சிறந்தது என்று உரையாற்ற அதிரடி பேச்சாளர் அஃப்சர் வருகிறார். வாருங்கள் தோழரே. வந்து உங்கள் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுங்கள்.

2 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...