21 ஏப்ரல், 2012

உண்மையான முஃமின் யார்-5




உண்மையான முஃமினின் ஐந்தாவது அம்சமாக அல்லாஹ் கூறுவது என்ன?
ومما رزقناهم ينفقونஅவர்களுக்கு நாம் வழங்கிய செல்வத்திலிருந்து பிறருக்கும் தானம் வழங்குவார்கள்
 «ما منكم من أحدٍ إلا سيكلمه الله، ليس بينه وبينه ترجمان، فينظر أيمن منه فلا يرى إلا ما قدم، فينظر أشأم منه فلا يرى إلا ما قدم، فينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه، فاتقوا النار ولو بشق تمرة
நபி (சல்) கூறினார்கள்: மறுமையில் அல்லாஹ் உங்களில் ஒவ்வொருவரிடமும் எந்த மொழிபெயர்ப்பாளருமின்றி நேரடியாக பேசுவான் அப்பொழுது அடியான் தனது வலப்பக்கமும் இடப்பக்கமும்  பார்ப்பான் அவன் செய்த நன்மை தீமைகள் அங்கு காண்பான். தன் முன்னால் பார்ப்பான் அங்கு நரகம் இருக்கும். எனவே பேரீத்தம்பழத்தின் சிறு துண்டையாவது தர்மம் செய்து நரகிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். (புஹாரி, முஸ்லிம்)
பல பயன்கள்:
தானம் அளிப்பதால் உண்மையான முஃமினின் ஐந்தாவது தகுதியை மட்டுமல்ல.. இன்னும் பல அபரிமிதமான பயன்களை அடைந்துகொள்ளலாம்.
1.   ரகசிய தர்மம் இறைவனின் சினத்தை அணைத்துவிடுகிறது:
أنّها تطفىء غضب الله سبحانه وتعالى كما في قوله صلى الله عليه وسلم: «إن صدقة السر تطفىء غضب الرب تبارك وتعالى» [صحيح الترغيب].
3.   2. பாவத்தை அழித்துவிடுகிறது: 
 أنّها تمحو الخطيئة، وتذهب نارها كما في قوله صلى الله عليه وسلم: «والصدقة تطفىء الخطيئة كما تطفىء الماء النار» [صحيح الترغيب].
நபிசல் கூறினார்கள்: தண்ணீர் நெருப்பை அணைத்துவிடுவதுபோல தர்மம் 
 பாவத்தை அழித்துவிடுகிறது.
3. நரக நெருப்பிலிருந்து பாதுக்காக்கிறது:
  أنّها وقاية من النار كما في قوله صلى الله عليه وسلم: «فاتقوا النّار، ولو بشق تمرة».
பேரீத்தம்பழத்தின் சிறு துண்டையாவது தர்மம் செய்து நரகிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். (புஹாரிமுஸ்லிம்)

4. மஹ்ஷரில் நிழல் தருகிறது:
 أنّ المتصدق في ظل صدقته يوم القيامة كما في حديث عقبة بن عامر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «كل امرىء في ظل صدقته، حتى يقضى بين الناس». قال يزيد: "فكان أبو مرثد لا يخطئه يوم إلا تصدق فيه بشيء ولو كعكة أو بصلة"، قد ذكر النبي صلى الله عليه وسلم أن من السبعة الذين يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: «رجل تصدق بصدقة فأخفاها، حتى لا تعلم شماله ما تنفق يمينه» [في الصحيحين].
மறுமையில் மக்களெல்லாம் மஹ்ஷர் மைதானத்தின் வாட்டும் வெயிலில் வாடி வதங்கும்பொழுது கொடைவள்ளல் தனது தர்மத்தின் நிழலில் சொகுசாக நிம்மதியாக இருப்பார்.

5. உடல் பிணிகளுக்கு கூட மருந்தாக அமைகிறதாம் தர்மம். 
 أنّ في الصدقة دواء للأمراض البدنية كما في قوله صلى الله عليه وسلم: «داووا مرضاكم بالصدقة».
''உங்கள் வியாதிகளுக்கு தர்மத்தின் மூலம் சிகிச்சை செய்யுங்கள்''
பல வைத்தியம் பார்த்தும் பலனில்லாமல் கிணறு தோண்டி மக்களுக்கு தண்ணீரை தர்மம் செய்ததால் முட்டுக்காலில் நீண்ட நாட்களாக வடிந்துகொண்டிருந்த சீழ் நின்ற அற்புதமான வரலாறு
 يقول ابن شقيق: "سمعت ابن المبارك وسأله رجل: عن قرحةٍ خرجت في ركبته منذ سبع سنين، وقد عالجها بأنواع العلاج، وسأل الأطباء فلم ينتفع به، فقال: اذهب فأحفر بئرًا في مكان حاجة إلى الماء، فإني أرجو أن ينبع هناك عين ويمسك عنك الدم، ففعل الرجل فبرأ". [صحيح الترغيب].
6. மனவியாதிகளுக்கும் மருந்து:
 إنّ فيها دواء للأمراض القلبية كما في قوله صلى الله عليه وسلم لمن شكى إليه قسوة قلبه: «إذا إردت تليين قلبك فأطعم المسكين، وامسح على رأس اليتيم» [رواه أحمد].
அல்லாஹ்வின் தூதரே.. என் உள்ளம் கடினமாக இருக்கிறது என்று முறையிட்ட தோழருக்கு நபி சொன்ன ஆலோசனை: உன் உள்ளத்தை மிருதுவாக்க நீர் நாடினால் ஏழைகளுக்கு உணவளியும்; அனாதையை ஆதரியும்!

7. தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்.
யஹ்யா அலை தன் சமுதாயத்திற்கு தந்த உபதேசங்களில் ஒன்று: ''தானதர்மம் தாராளமாக அளியுங்கள். ஏனெனில் அது உங்களை எல்லா ஆபத்துகளை விட்டும் காக்கும். இதற்கு உதாரணம்: உங்களில் ஒருவரை எதிரி பிடித்து சிறைவைத்தான்; பிறகு கழுத்துடன் கைகளைப் பிணைத்தான்; கழுவில் ஏற்றுவதற்காக அவன் முனைந்தபொழுது நீங்கள் சுதாரித்துக்கொண்டு ஏதேனும் ஒரு சில பொருளை பிணையாக கொடுத்து தப்பிவிட்டீர்கள். அதுபோல உங்களின் தர்மம் உங்களைத் தக்க தருணத்தில் காப்பாற்றுகின்ற பிணைத் தொகையாகும்.''
فالصدقة لها تأثير عجيب في دفع أنواع البلاء ولو كانت من فاجرٍ أو ظالمٍ بل من كافر فإنّ الله تعالى يدفع بها أنواعًا من البلاء، وهذا أمر معلوم عند النّاس خاصتهم وعامتهم وأهل الأرض مقرون به لأنّهم قد جربوه.
ஃபிர்அவ்ன் ''தானே கடவுள்'' என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அனேக அட்டூழியங்களைப் புரிந்தவன். ஒரு கட்டத்திலே மூசா அலை அவர்களே, ''யா அல்லாஹ் இனியும் ஏன் அவனை விட்டுவைத்திருக்கிறாய்'' என்று பொறுமையிழந்து வினவியபொழுது அல்லாஹ் இப்படிக் கூறினானாம்: ''என்ன செய்வது நபியே.. அவன் ஒரு பக்கம் அநியாயம் புரிந்தாலும் மறுபக்கம் தான தர்மங்கள் தாராளமாக தருகிறான். அதனால் அவனை இன்னும் சிறிதுகாலத்திற்கு விட்டுவைத்திருக்கிறேன்''
அப்படியானால் தர்மம் தண்டனைகளைக் கூட தாமதப்படுத்துகிறது அல்லவா?
ரு விறகுவெட்டி தலையில் விறகுச் சுமையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். வரும் வழியில் எதிரில் ஒரு துறவிம்வருவதைப் பார்த்தான். அவருக்கு வழி விடுவதற்காக பாதையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றான். ஆனால் அவரோ திடீரென, ''விறகு சுமையை உடனே கீழே எறி'' என்றார். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. காலையிலிருந்து கஷ்டப்பட்டு வெட்டிக்கொண்டு வந்த விறகுகள் அவை. அவற்றை விற்றால்தான் அன்று அவனுக்கு உணவு. அந்த கட்டை எறியச் சொல்லுகிறாரே?
இருந்தாலும் அவர்மீதுள்ள மரியாதைக்காக விறகுக்கட்டை கீழே போட்டான். போட்ட வேகத்தில் கயிறு அறுந்து விறகுகள் சிதறின. அதற்குள்ளே இருந்து ஒரு கருநாகம் நெளிந்து ஓடியது. விறகுவெட்டி வியப்பாலும் அச்சத்தாலும் உறைந்து நின்றுவிட்டான். உடனே சுதாரித்துக்கொண்டு  ''அய்யா. நீங்கள் எனது உயிரைக் காப்பாற்றினீர்கள்'' என்றான். ''உன்னைக் காப்பாற்றியது நான் அல்ல; நீ செய்த தர்மம். இன்று ஏதாவது தர்மம் செய்தாயா?'' என்று கேட்டார் துறவி. ''நான் பரம ஏழை. விறகுவெட்டிப் பிழைப்பவன். தர்மம் செய்யும் சக்தி எனக்கு ஏது? என்றான்.
''நன்றாக யோசித்துப் பார்''. அவன் சிறிதுநேரம் சிந்தித்துப் பார்த்தான். அவனுக்கு நினைவுக்கு வந்துவிட்டது ''ஆமாம் அய்யா! இன்று பகல் விறகு வெட்டிக் களைத்துப் போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். கடுமையான பசி. கேழ்வரகு கூழ் கொஞ்சம் கொண்டு வந்திருந்தேன் அதை அருந்த நினைக்கும்போது அங்கே ஒரு பயணி வந்தார். ''நான் இரண்டு நாளாக பட்டினி. எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்'' என்றார். நான் என் கூழில் பாதியை அவருக்கு கொடுத்தேன். இதுதான் நான் செய்தது. இது என்னை மரணத்திலிருந்து காப்பாற்றுகிற அளவுக்கு பெரிய தர்மமா? ஆச்சரியமாக இருக்கிறதே'' என்றான்
துறவி, '' இன்று நீ பாம்பு கடித்து இறந்து போகக்கூடியவன். நீ செய்த தர்மம் உன்னைக் காப்பாற்றியது'' என்றார்.
விறகு வெட்டி கொடுத்தது கொஞ்சம் கூழ்தானே. அது ஒரு பெரிய தர்மமா என்று கேட்கலாம். அவன் என்ன கொடுத்தான் என்பது முக்கியமல்ல. யாருக்கு.. எந்த நேரத்தில் கொடுத்தான் என்பதுதான் முக்கியம். பயணி இரண்டு நாள் பட்டினி என்று சொன்னான் விறகு வெட்டிகூழ் கொடுத்திராவிட்டால் ஒருவேளை அவன் இறந்துபோயிருக்கலாம். எனவே பயணிக்கு விறகு வெட்டி கொடுத்தது கூழ் அல்ல; உயிர்.
அவன் ஒரு உயிரைக் காப்பாற்றினான். அந்த தர்மம் அவனின் உயிரைக் காப்பாற்றிவிட்டது.
ஆம். விதியையே மாற்றக்கூடிய வல்லமை தர்மத்திற்கு உண்டு அதனால்தான் திருவள்ளுவர் உயிருக்கு நன்மை தருவது அறத்தைவிட வேறு எது? என்கிறார்
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.
 
8. இறைவனின் திருப்பொருத்தம் கிடைக்கிறது:
மறுமை நாளில் அல்லாஹ் ஒரு அடியானை அழைத்து கேட்பான்; நான் உன் வீட்டுவாசலில் வந்து உணவு கேட்டேனே நீ ஏன் தரவில்லை?
அடியான், ''யா அல்லாஹ். உனக்கு பசி என்பது இல்லை; அப்படி இருக்க நீ வந்து என்னிடம் உணவு கேட்டாயா? என்ன இது வியப்பாக உள்ளதே '' ஆமாம் அன்றொருநாள் ஒரு யாசகன் உன் வீட்டுவாசலில் வந்து உணவு கேட்டான் நீ தரவில்லை. நீ அங்கு வந்து உணவு தந்திருந்தால் அந்த ஏழையிடம் என்னைக் கண்டிருப்பாய். சரி மற்றொருநாள் உன்னிடம் தண்ணீர் கேட்டேனே ஏன் தரவில்லை"?
யா அல்லாஹ் உனக்கு தாகம் என்பதே இல்லையே நீ என்னிடம் தண்ணீர் கேட்டாயா?''
ஆமாம் அன்றொருநாள் ஒரு யாசகன் உன் வீட்டுவாசலில் வந்து தண்ணீர் கேட்டான் நீ தரவில்லை. நீ அங்கு வந்து தண்ணீர் தந்திருந்தால் அந்த ஏழையிடம் என்னைக் கண்டிருப்பாய்........இப்படியே அந்த ஹதீஸ் தொடருகிறது. ஆக, ஏழைக்கு தரும் கொடையை தனக்குத் தருவதாக அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

ரு அரசன் சிவபக்தன். ஒரு சமயம் கடவுளுக்கு பிரமாண்டமான பாலாபிஷேகம் செய்ய நினைத்தான். நாடு முழுதும் உத்தரவு போட்டான். இன்று எல்லோரும் பால் கறந்து கொண்டு வந்து அரண்மனையில் உள்ள இந்த பெரிய அண்டாவில் ஊற்றவேண்டும். யாரும் அருந்தவோ விற்கவோ கூடாது. மொத்தப் பாலையும் கடவுளுக்கே அற்பணிக்கவேண்டும் என்ற கடும் கட்டளை. மக்கள் சாரைசாரையாக கொண்டு வந்து ஊற்றினர். நிரம்பவே இல்லை. இறுதியாக ஒரு பெண்மணி ஒரு சிறிய செம்பில் கொண்டு வந்து ஊற்றினாள். உடனே நிரம்பி வழிந்தது மன்னன் வியப்புடன் கேட்டான்: மக்கள் அத்தனை பேரும் குடம் குடமாக அண்டா அண்டாவாக கொண்டுவந்து ஊற்றியும் நிரம்பாத இந்த பாத்திரம் நீ கொண்டு வந்த ஒரு சிறிய பாத்திரப் பாலை ஊற்றியதும் எப்படியம்மா நிரம்பியது?
அவள் தயக்கத்தோடு கூறினாள்: மன்னா.. நீங்கள் என்னை மன்னிப்பதாக இருந்தால் அந்த ரகசியத்தை கூறுகிறேன்''
''சரி மன்னித்துவிட்டேன். சொல்.. அந்த ரகசியம் என்ன? ''
மன்னா. நான் தங்களின் ஆணைப்படி பாலைக் கறந்து முழுவதையும் இங்குதான் கொண்டுவந்து கொண்டிருந்தேன். குடிக்கவுமில்லை; விற்கவுமில்லை. வரும் வழியில் சில ஏழைக் குழந்தைகள் பசியில் துடித்துக் கொண்டிருந்த அலறலைக் கேட்டேன். என்னால் தாங்கமுடியவில்லை. ஒருபுறம் தங்களின் ஆணை. மறுபுறம் அந்த குழந்தைகளின் கொடூரமான பசி. உடனே அந்த குழந்தைகளுக்கு கொஞ்சம் பால் கொடுத்து பசியைத் தணித்துவிட்டு மீதியைத்தான் இங்கு கொண்டுவந்து ஊற்றினேன்.'' என்றாள். மன்னன் உணர்ந்தான்; மக்கள் உணர்ந்தனர்: பாலாபிஷேகம் என்ற பெயரில் பாலை கீழே கொட்டி வீணாக்குவதை விட கடவுளின் பெயரால் ஏழைகளுக்கு வழங்குவதே இறைவனைத் திருப்திப்படுத்தும் என்று.
''ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்''

9. அல்லாஹ்வின் பாதையில் தனக்கு விருப்பமானவற்றை தானம் செய்யும்பொழுதுதான் பரிபூரண நன்மை கிடைக்கிறது:
  
 أنّ العبد إنّما يصل حقيقة البر بالصدقة كما جاء في قوله تعالى: {لَن تَنَالُواْ الْبِرَّ حَتَّى تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَ} [سورة آل عمران: 92].
10. கொடுக்க கொடுக்க பெருகுகிறது:
 أنّ صاحب الصدقة يبارك له في ماله كما أخبر النبي صلى الله عليه وسلم عن ذلك بقوله: «ما نقصت صدقة من مال» [في صحيح مسلم].


இறைக்கிற கிணறு ஊறும்
இறைக்காத கிணறு நாறும்
ஒரு பெரியவர் தர்மப் பிரபுவாக வாழ்ந்தார். ஒருநாள் தன் மனைவியிடம் ''யார் வந்து யாசகம் கேட்டாலும் தாராளமாக கொடு'' என்று சொல்லிவிட்டு சென்றார். மனைவியும் தாராளமாக தானம் செய்தார். பிறகு கணவர் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் ஒரு வண்டி நிறைய தானிய மூட்டைகள் வந்து இறங்கின. இதுவெல்லாம் உங்களுக்கு அன்பளிப்புகளாக இன்னாரிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளது'' என்று கூறி மூட்டைகளை வீட்டுக்குள் அடுக்கிவிட்டுப் போனார்கள். இவர் மனைவியிடம் கேட்டார்: நீ எதையாவது தர்மம் செய்யாமல் விட்டாயா?'' ஆமாம். வீட்டிலுள்ள தானியங்களை எல்லாம் தர்மம் செய்தேன். மாவரைக்கும் திருகையை மட்டும் தேவைப்படும் என வைத்துக்கொண்டேன். என்றார். கணவர் சொன்னார்: அதையும் நீ தர்மம் செய்திருந்தால் கோதுமைக்குப் பதிலாக மாவாக வந்திருக்கும். இனி நீயே உட்கார்ந்து அந்த திருகையில் கோதுமையை அரைத்து அரைத்துக் களைத்துப் போ!''

11. பாவமற்ற பரிசுத்தமான வானவர்களின் துஆ கிடைக்கிறது:
«ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما: اللهم أعط منفقًا خلفاً، ويقول الآخر: اللهم أعط ممسكًا تلفًا» [في الصحيحين].

நபி (சல்) கூறினார்கள்: ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இரு வானவர்கள் பூமிக்கு வந்து யா அல்லாஹ்.. கொடுப்பவருக்கு வளத்தைக் கொடு. தடுப்பவருக்கு அழிவைக் கொடு.'' என்று பிரார்த்திக்கின்றனர்.


12. தர்மம் செய்வோருக்கு மறுமையிலும் மகத்தான பன்மடங்கு கூலி காத்திருக்கிறது:
 {إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضاً حَسَناً يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ} [سورة الحديد: 18]. وقوله سبحانه: {مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللّهَ قَرْضاً حَسَناً فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافاً كَثِيرَةً وَاللّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ} [سورة البقرة: 245].


13. மன நிம்மதி கிடைக்கும்:

  أنّ فيها انشراح الصدر، وراحة القلب وطمأنينته، فإن النبي صلى الله عليه وسلم ضرب مثل البخيل والمنفق كمثل رجلين عليهما جبتان من حديد من ثدييهما إلى تراقيهما فأما المنفق فلا ينفق إلا اتسعت أو فرت على جلده حتى يخفى أثره، وأما البخيل فلا يريد أن ينفق شيئا إلا لزقت كل حلقة مكانها فهو يوسعها ولا تتسع. [في الصحيحين] "فالمتصدق كلما تصدق بصدقة انشرح لها قلبه، وانفسح بها صدره، فهو بمنزلة اتساع تلك الجبة عليه، فكلمَّا تصدَّق اتسع وانفسح وانشرح، وقوي فرحه، وعظم سروره، ولو لم يكن في الصَّدقة إلاّ هذه الفائدة وحدها لكان العبدُ حقيقيا بالاستكثار منها والمبادرة إليها وقد قال تعالى: {وَمَن يُوقَ شُحَّ نَفسِهِ فَأُوْلَئِكَ هُمُ المُفْلِحُونَ} [سورة الحشر: 9].
14.  பொறாமைப் படத்தக்க பாக்கியம்:

 أنَّ النبَّي صلى الله عليه وسلم جعل الغنى مع الإنفاق بمنزلة القرآن مع القيام به، وذلك في قوله صلى الله عليه وسلم: «لا حسد إلاّ في اثنين: رجلٌ آتاه الله القرآن فهو يقوم به آناء الليل والنهار، ورجل آتاه الله مالًا فهو ينفقه آناء الليل والنهار»، فكيف إذا وفق الله عبده إلى الجمع بين ذلك كله؟ نسأل الله الكريم من فضله.
15.  நமது பொருளை சுத்தமாக்கி பாதுகாப்பைத் தரும்:
 أنَّ الصدقة مطهرة للمال، تخلصه من الدَّخن الذي يصيبه من جراء اللغو، والحلف، والكذب، والغفلة فقد كان النَّبي صلى الله عليه وسلم يوصي التَّجار بقوله: «يا معشر التجار، إنَّ هذا البيع يحضره اللغو والحلف فشوبوه بالصدقة» [رواه أحمد والنسائي وابن ماجة، صحيح الجامع].  

சகோதரர்களே! இந்த பதிவைப் பற்றி உங்கள் கருத்தை இங்கே இட்டுச் செல்லலாமே!

4 கருத்துகள்:

  1. வாவ்.. நல்ல அழகான கதை உவமானங்களுடன் எல்லோருக்கும் புரியும்படி இருக்கிறது . தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதை எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. வாவ்.. நல்ல அழகான கதை உவமானங்களுடன் எல்லோருக்கும் புரியும்படி இருக்கிறது . தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பதை எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே.. உங்களைப் போன்றவர்களின் கருத்துரைதான் எங்களுக்கு ஊட்டஸ் சத்து.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள் Part - 2

உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும் வெற்றியின் ரகசியங்கள்  part 2 தனித்து இயங்குவதை விட கூட்டு முயற்சி  Team Work நல்ல பலனையும் வெற்றியையும் ...