25 மார்ச், 2012

மண்ணின் மைந்தனே..




மண்ணின் மைந்தனே மண்ணின் மைந்தனே மறவாதே!
நீ செய்த சரித்திர சாதனை தன்னை மறவாதே!
தியாகத்தின் பரம்பரையே! தூய வீரத்தின் விளை நிலமே!
நாம் சிந்திய ரத்தத்தில் தியாகத்தில் வந்தது இந்திய சுதந்திரமே..
தாய்நாட்டின் விடுதலையே.. நம் நாட்டின் விடுதலையே!
                                               (மண்ணின் மைந்தனே)
ஜாலியன்வாலா படுகொலை

ஜாலியன்வாலா படுகொலை சோகக் காட்சிகளே
அந்த மஸ்ஜிது கூனெனும் பள்ளியின் ரத்த சாட்சிகளே
பூட்டிய ரயிலில் திணறிய மூச்சுக் காற்றுகளே
அங்கு சிதைந்து விழுந்த கேரள முஸ்லிம் சடலங்களே
சிப்பாய் கலகத்தில் வீரம் சொறிந்த சிங்கங்களே
அங்கு சீரிய தோட்டா சுமந்து மடிந்த நெஞ்சங்களே
ஆங்கில தர்பார் நடுங்கிடச் செய்த வீரர்களே
என்றும் மறக்க முடியா நாட்டின் சொக்கத் தங்கங்களே!
)                            தியாகத்தின் பரம்பரையே(
திப்பு சுல்தான்
திப்பு சுல்தானின் வீரமரணத் துணிவுகளே
வங்கத்து வேங்கை சிராஜுத் தவ்லா எழுச்சிகளே
சிறையின் சிங்கம் பகதூர்ஷாவின் உணர்வுகளே
யூசுஃப்கானெனும் மருதநாயகத்து மறவர்களே
எண்ணிலடங்கா தியாகச் சுடர்களின் வெளிச்சங்களே
தன்னலம் மறந்து மண்ணகம் காத்த உண்மைகளே
தேசியக் கொடியின் பச்சை நிறத்து சின்னங்களே
''ஹுப்புல் வதனி மினல் ஈமான்'' எனும் உணர்வுகளே
                              ( தியாகத்தின் பரம்பரையே)

சுதந்திரப் போரில் முன்னிலை வகித்த சமுதாயம்
அதில் அரை நூற்றாண்டுகள் கல்வியை இழந்த சமுதாயம்
எண்ணூறு ஆண்டுகள் நாட்டை ஆண்ட சமுதாயம்
இன்று உரிமை இழந்து போராடுகின்ற சமுதாயம்
உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த சமுதாயம்
என்றும் நாட்டுக்காகவே உழைத்து நிற்கும் சமுதாயம்
                             ( தியாகத்தின் பரம்பரையே

1 கருத்து:

  1. இந்திய நாட்டின் விடுதலைக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த ஒரு சமுதாயம் இன்று கல்வியில் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கி வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற பரிதாபத்தை சச்சார் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியும் இந்த சமுதாயத்தை முன்னுக்கு கொண்டு வர போதுமான விழிப்புணர்வும் நடவடிக்கையும் இல்லை என்பது குறித்து வேதனையுடன் சிந்திக்கவேண்டும். முதலில் இந்த முஸ்லிம் சமுதாயம் தன் முன்னோர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில் எழுதப்பட்ட பாடல் வரிகள்தான் இவை.

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

சொர்க்கமும் நரகமும் - ஓர் ஆய்வு

உள்ளடக்கம் : வாழ்க்கையில் கவனம் ; மறுமையில் சுவனம்!  கற்பனைக்கு எட்டாத கணக்கற்ற இன்பம்!  பிரமாண்ட சொர்க்கம்  அல்லாஹ்வின் பொருத்தம்! அலாதி இன...