22 பிப்ரவரி, 2014

கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

 قدم محمد عليه الصلاة والسلام



கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே
 திங்கள் இரசூலே உங்கள் அன்பை மனம் நாடுதே
கண்கள் இரண்டும் நபி பாதம்காண தேடுதே

மக்க நகர் மண்ணாய்ப் பிறந்தேனா நானும் 
மஹ்மூதர் பாதம் தொடர்ந்தேனா நானும்-2
 என்றுலகில் காண்பேன் எங்கள் நபி நாதர்
 இனிதான தோற்றம் கண்டாலே ஏற்றம்-2

                                                                 (கண்கள் இரண்டும்)

மதினாவிலே ஓர் மரமாகினேனா
 மாநபிக்குத் தென்றல் காற்றும் தந்தேனா-2
அவர் கையில் ஏந்தும் வாளாகினேனா
 அன்னல் நபி அன்புக்கு ஆளாகினேனா-2

                                                                (கண்கள் இரண்டும்)

கஃபாவிலே ஓர் கல்லாகினேனா
 காப்பவனின் வீட்டில் உள்ளாகினேனா-2
 கடும்பசி தாங்கி கருணை நபி வயிற்றில் 
கட்டிய கல்லில் இடமாகினேனா-2

                                                          (கண்கள் இரண்டும்)

ஒட்டகமாய் உலகில் பிறந்தேனா நானும்
 உத்தம நபியை சுமந்தேனா நானும்
 பேரித்தங்கனியாய் கனிந்தேனா நானும்
பெருமானின் உமிழ் நீரில் கலந்தேனும் நானும்

                                                     (கண்கள் இரண்டும்)



24 கருத்துகள்:

  1. இது அடியேன் பாலர் பருவத்திலிருந்தே மனமுருகிப் பாடிவந்த பாடல். எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் இந்த பாடலை எனக்கு நானே பாடி ஆனந்தப் பரவசம் அடைந்து ரிலாக்ஸ் செய்துகொள்வேன்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. இத.. இதைத்தேன் எதிர்பார்த்தேன்
      என்ன காதர் மஸ்லஹி.. ரொம்ப நாளா ஆளைக் காணோம்.
      என் பிளாக்கரில் உங்களையும் ஒரு ஆசிரியராக இணைத்துள்ளேன். எல்லா மஸ்லஹிகளையும் இணைத்து ஒரே தளத்தில் இணைப்பத்ற்காகத்தான் தலைப்பையும் பொதுவாக வெள்ளிமேடை பல்சுவைப் பக்கங்கள் என்று மாற்றியுள்ளேன் நாம் இனி இதயத்தால் மட்டுமல்ல இணைய தளத்தாலும் இணைந்திருப்போம்

      நீக்கு
  3. Unkalin aalntha karuthu padaluku.jazakallah...
    Neenkal koorvathu pool manathu relaksukkku.idu pondra padalhal paadum poothu manam nimmadi kidaikirathu...
    Neenkal madrasavil paditha padalhal innum athiham irukindrana
    avaihalayum neenkal edit seithal miha nandraha irukkum...
    Makthab madrasa padal halayum edit seithal payanullathaha irukkum... Unkalin padalhalai aavaludan edir parkum by.jinna

    பதிலளிநீக்கு
  4. உண்மையே இப்போதும் நீர் பாலகர்தான் ஆனால் வலை தளங்களில் விளையாடுவதில் மூத்தவர். விண்ணை முட்டட்டும் நும் சாதனைகள் صدق . "உண்மைக்காஹ" உண்மையுடன் உன் "மை" ரசிகன் அழீம் சிங்கப்பூர்..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை
      என் நெஞ்சுல பால வார்த்தீங்க..
      நான்கூட எனக்கு வயசாயிட்டோன்னு
      பயந்துட்டேன்..
      என் தாடியில் முளைத்திருக்கிற
      இரண்டு வெள்ள முடிகளைப் பார்த்து!
      அப்பாடா..
      இத முதல்ல
      என் வீட்டுக்காரிட்ட சொல்லிப் பெருமைப் படனும்..
      நான் இன்னும் குழந்தைதான்ன்னு!

      நீக்கு
    2. ஹல்லோ ஓதுர காலத்திலேயே தாடியில் இரண்டு வெள்ளை முடி பார்த்ததேனே ... இன்னுமா அதிகமாகல அய்யோ .. அய்யோ ..43 வயசு ஆனாலும் நீங்க வாலிபர்தாங்க dont worry be happy உங்களோட ஒரே ஜோக்குதான் போங்க

      நீக்கு
    3. ஓதுற காலத்துலேயே வெள்ள முடியா?! இதுலாம் ரொம்ப ஓவரா தெரியல? அப்ப எனக்கு தாடியே மொழைக்கல

      நீக்கு
  5. ماشاالله الحمدلله.تقبل الله جعلك الله وايانا مادحا الرسول صلي الله عليه وسلم

    பதிலளிநீக்கு
  6. الي سماحة الشيخ۔۔۔
    جزاكم الله خير الجزاء
    தங்களின் துஆவே
    எங்களின் அவா!

    பதிலளிநீக்கு
  7. Ungaladhu kuralil indha padalai kettu Romba naalahivittadhu.ippodhu marubadiyum kettadhil mikka mahilchi. Idhu neengal paduvadarkkaha eludhappatta padalo enra ennatthai marubadiyum erpadutthi vittdhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தீங்களா ஹதீஸ் மஸ்லஹி ,
      நாயகம் (ஸல்) மீது நமக்குள்ள பிரியம் நீண்ட பிரிவுக்குப் பின்
      நம்மை எங்கிருந்தாலும் இழுத்துக்கொண்டு வந்து விட்டதே

      நீக்கு
  8. Ungaladhu kuralil indha padalai kettu Romba naalahivittadhu.ippodhu marubadiyum kettadhil mikka mahilchi. Idhu neengal paduvadarkkaha eludhappatta padalo enra ennatthai marubadiyum erpadutthi vittdhu.

    பதிலளிநீக்கு
  9. அருமை நண்பரே.. இப்பாடல் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தை கண்முன் நிறுத்தி, கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா அருமை நண்பரே
      அந்தக் கண்ணீர், கண்மணி நாயகத்தின் மீது தாங்கள் வைத்துள்ள கண்ணியத்தைப் பிரதிபலிக்கிறது. ஜஸாக்கல்லாஹ்

      நீக்கு
  10. அருமையா இருக்கு கேட்பதற்க்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்ஹம்து லில்லாஹ் !
      பெருமையா இருக்கு நபி புகழை ரசிக்கின்ற நல்லவர்கள் நானிலத்தில் நிறைய உள்ளதைந்நினைக்கும்போது !

      நீக்கு
  11. அருமையா இருக்கு கேட்பதற்க்கு

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா27 மே, 2014 அன்று 3:28 PM

    ரசித்தேன் بارك الله

    பதிலளிநீக்கு
  13. அல்ஹம்துலில்லாஹ்! பாரக்கல்லாஹ்!!
    பாடிப்பார்த்தேன் மிகவும் அருமை! இன்னும் நான்கு பாரா எழுதுங்கள்! ப்ளீஸ்...!

    பதிலளிநீக்கு
  14. அல்ஹம்துலில்லாஹ்! பாரக்கல்லாஹ்!!
    பாடிப்பார்த்தேன் மிகவும் அருமை! இன்னும் நான்கு பாரா எழுதுங்கள்! ப்ளீஸ்...!

    பதிலளிநீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாம் வலியுறுத்திய இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இஸ்லாம் இயற்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மிகவும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும். திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் (ஹதீஸ்களிலும்)...