04 மார்ச், 2012

எங்கள் திருமணத்தின் துன்பச் சுமை தீராதா






யா அல்லாஹு.. அருட்கொடையாளனே..
துன்பங்கள் போக்கும் பேருபகாரனே
எங்கள் திருமணத்தின் துன்பச் சுமை தீராதா -அதனால் 
விளைந்த கொடுமைகளோ மாறாதா.. யா அல்லாஹ்!

பள்ளிவாசல் தோறும் தொடரும் குமருக்கான பிச்சைகள்
தன்மானம் இழந்தழுகும் பெண்ணைப் பெற்ற நெஞ்சங்கள்
திருமண சந்தையிலே மாப்பிள்ளைக்குப் பேரங்கள் 
கருவே கல்லறையாய் பெண்குழந்தை சிசுவுகள்
புதிதாய் மார்க்கம் வந்த புது முஸ்லிம் குடும்பங்கள் 
திருமணச் சுமையாலே மதம் மாறும் அவலங்கள் 
கருணை தயாளனே இது என்ன கொடுமைகள்
பரக்கத்தை தடை செய்யும் முசீபத்தின் அவலங்கள்

                                                     (எங்கள் திருமணத்தின்)

கஞ்சனும் காசை அள்ளி வீச வைக்கும் கல்யாணம்
வட்டிக் கடன் பட்டு சொத்தை விற்க வைக்கும் கல்யாணம் 
சமூகத்தின் பொருள்வளத்தை நாசமாக்கும் கல்யாணம்
தீமைக்கு தீமையாகி விளைந்து நிற்கும் கல்யாணம் 
வீண்விரைய செலவில் இறை சாபம் தேடும் கல்யாணம்
கவுரவம் தற்பெருமை காட்ட நடக்கும் கல்யாணம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 
என்றுதான் தீருமோ இந்தபெரும் அலங்கோலம் 

                                                    (எங்கள் திருமணத்தின்)

சொர்க்கத்து பந்தமாகும் திருமணத்தின் உறவுக்கு
நரகத்து வேதனையாய் சுட்டெரிக்கும் செலவுகள்
மருந்துண்ண வைக்குகின்ற விருந்து முறைகேடுகள்
கைக்கூலிக்கு கமிஷன் வாங்கும் கல்யாணத்து தரகர்கள்
எளிமைத் திருமணங்கள் 'மஹர்' கொடுத்து நடக்கணும்
இது ஒரு வணக்கம் என்ற உண்மைதனை உணரணும் 
வேதனைத் தீயில் வாடும் பெண்ணினத்தைக் காக்கணும் மார்க்கமும் மனசாட்சியும் இனியாவது ஜெயிக்கணும்
                                                    (எங்கள் திருமணத்தின்)

இந்த பாடலை ஆடியோவாக கேட்டு மகிழ இங்கே அழுத்தவும்:


http://www.ziddu.com/download/18763821/திருமணத்தின் துன்பச்
சுமை தீராதா.mp3.html



2 கருத்துகள்:

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download