23 ஜனவரி, 2012

அறிஞர்களின் பார்வையில் அண்ணல் நபி (ஸல்)



உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராகமுகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும்வினாவையும் எழுப்பலாம். சமயஞ்   சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.

                   -M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978)


உயர்ந்த இலட்சியம்குறைவான வசதிகள்வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவைமனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்சட்டங்களை இயற்றினார்கள்பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள்சட்டமியற்றும் சபைகள்பேரரசுகள்மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லைஅவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும்சமய நெறிகளையும்பல்வேறு கருத்துகளையும்கொள்கைகளையும்நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமைபணிவு,சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம்அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை,அவரது முடிவில்லாத தொழுகைகள்பிரார்த்தனைகள்,இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம்மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக,சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.
             - அல்போன்சு டி லாமார்ட்டின் - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமைதம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்புஎந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மைதம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்புஅவரது அஞ்சாமைஇறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.
                                      - மகாத்மா காந்தி - (Young India)

சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும்நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ
                               - Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship

அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார்முகம்மதை உண்மையான இறை த்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன்.
                                        - போஸ்வெர்த் ஸ்மித், Benjamin_Bosworth_Smith

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...