08 நவம்பர், 2011

Eid al- alha ஹஜ்ஜுப் பெருநாள்



தியாகத் திருநாள்http://tawp.in/r/1grd

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகத் திருநாள் (Eid al-adhaஅரபுعيد الأضحى ஈத் அல்-அதா) அல்லது பக்ரித் பண்டிகை, உலக                                                      
அளவில் இசுலாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைவனின்
தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக,
ஒவ்வோர் ஆண்டும் அராபிய மாதம் துல்கச்சு (Dul Haji) 10-ம் நாள்
இது கொண்டாடப்படுகின்றது.
இந்த பண்டிகையையொட்டி இசுலாமியர்கள் மெக்கா நகரில் உள்ள
 புனித காபாவை நோக்கி ஃஅச்சு (Hajj) எனப்படும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்
. இது இவர்களின் அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமை ஆகும்[1].
இதன் பேரில் இந்த பண்டிகை ஃஅச்சுப் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள்
என பொருள்படும் அரபிய பதமான ஈத் அல்-அதா என்றே அழைக்கப்பட்டாளும்
, தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு
பக்ரித் (பக்ரு-ஆடு + ஈத்-பெருனாள்) என்ற உருது பதத்தில் அழைக்கப்படுகின்றது.
                                                            தொடர்ச்சி...

-----------------------------------------------------------------------------------------------------------------

ஹஜ்ஜுப் பெருநாள் பயானில் ... 



இன்றைய ஹஜ்ஜுப் பெருநாளில் ஆதமுடைய மகன் செய்யக்கூடிய அமல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தது  இரத்தத்தை ஓட்டுவதுதான் (குர்பானிதான்!)
                                          - நபி (ஸல்).
ஏன்?  அல்லாஹ்வுக்கு இறைச்சித் துண்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்பதாலா?
''அவற்றின் இறைச்சித்துண்டுகளோ இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்கள் இதயத்திலிருந்து எழும் இறையச்சமே அவனை அடையும்.'' --அல்குர்ஆன்
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உருவங்களையோ தோற்றங்களையோ கவனிப்பதில்லை; உங்கள் உள்ளங்களையும் செயல்களையும்தான் பார்க்கிறான்.- ஹதீஸ்
எந்த எண்ணத்தில் குர்பானி கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாலு பேர் புகழவேண்டும் என்பதற்காகவா?

ஏழு நாளைக்கு எடுத்து வைத்து தின்று தீர்க்கவேண்டும் என்பதற்காகவா?

குர்பானி இறைச்சியை மூன்று பங்கு வைக்கவேண்டும் என்பதும் அதில் ஒரு பங்கை தான் உண்ணலாம் என்பதும் ஒரு வழிமுறைதான். அதே நேரம் உறவினரும் ஏழைகளும் அதிகமாக இருந்தால் தன் பங்கைக் கூட எடுத்துக் கொடுப்பதுதான் ஏற்றமாகும்.

சுவாமி சுகபோகானந்தா எழுதுகிறார்;
''முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையின்போது அதிகம் சதைப் பிடிப்புள்ள இறைச்சித்துண்டை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது அவர்களிடம் எழுதப்படாத சட்டம்.''
இறைச்சி வழங்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?
இறைச்சி இல்லாவிட்டால் என்ன..மகிழ்ச்சி வழங்கலாமே !
             ''இன்சொல் கூறுவதும் தர்மமே''. -- நபி (ஸல்)
இன்சொல்லில் ஆகச் சிறந்தது ஸலாம்                           (முகமன் வாழ்த்து )                          அதை இந்நாளில் அதிகம் பரப்புவோம்!

நபிகளார் நவின்றார்கள்:
''உங்களுக்குள் சலாமைப் பரப்புங்கள்( சாந்தியைப் பரப்புங்கள்)''
சாந்தியைப் பரப்ப வேண்டிய இந்நாளில்
பிராந்தியை பரப்புகிறோமே நியாயமா?

சாந்தியைப் பரப்புனா சமாதானம்;
பிராந்தியைப் பரப்புனா சண்டை ; இதுதேவையா?

ஒரு பெருநாள் அன்று பெருமானார் (ஸல்) உணர்வூட்டும் உபதேசம் ஒன்று செய்தார்கள் :
''பெண்களே தான தர்மங்களை தாராளமாகச் செய்யுங்கள். உங்களை நரகத்தில் நான் அதிகமாகக் கண்டேன்.''
இதன் பிறகு பிலால் ரலி துண்டை விரித்துக் கொண்டு பெண்களிடம் சென்றார்கள்.      சுப்ஹானல்லாஹ்!
பெண்கள் தங்கள் கழுத்துகளிலும் கைகளிலும் கிடந்த பொன் நகைகளை கழற்றி தானம் செய்தார்கள். இது உண்மையான வரலாறு.
நாம் பொன் நகையைத் தருவது இருக்கட்டும்.முதலில் புன்னகையாவது தருகிறோமா? 
உன் சகோதரனைப் பார்த்து புன்சிரிப்பதும் தர்மமே! (அதற்கும் நன்மை உண்டு)      –- நபி (ஸல்)
எனவே இந் நன்னாளில் ஒருவருக்கொருவர் முகத்தைக் காட்டுவோம் ;
மூஞ்சியை அல்ல!
முகம் என்றால் என்ன?   மூஞ்சி என்றால் என்ன?

திருவள்ளுவர் அழகாகச் சொல்வார்:
''முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி- அகத்தானாம்இன்சொலினதே அறம்.''
புன்சிரித்து இன்சொல் கூறுவதும் தர்மமே! என்கிறார்.

புன்சிரிப்பது முகம் ; சிடுசிடுன்னு இருப்பது மூஞ்சி.

     எனவே இந் நன்னாளில் முக மலர்ச்சியுடன் முகமன் கூறி ஒருவரையொருவர் ஆரத் தழுவி அரவணைத்துக் கொள்வோம்.



2 கருத்துகள்:

  1. ''சாந்தியைப் பரப்ப வேண்டிய இந்நாளில்
    பிராந்தியை பரப்புகிறோமே நியாயமா? ''
    சரியான கேள்வி! சம்மட்டி அடி!!

    'நாம் பொன் நகையைத் தருவது இருக்கட்டும்.முதலில் புன்னகையாவது தருகிறோமா?'

    எப்படி சதக் ஆலிம்..
    இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா.. உங்கள் கருத்துக்கு
      மிக்க நண்றி நண்பா.

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

நபிமார்களின் அறிவுக் கூர்மை

   இப்ராஹீம் அலை மற்றும் இஸ்மாயீல் அலை ஆகியோரின் அறிவுக் கூர்மை : قَالَ ابْن عَبَّاس لما شب إِسْمَاعِيل تزوج امْرَأَة من جرهم فجَاء إِبْرَاه...