04 ஜூன், 2013

நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ்



நினைவு யாவும் உங்கள்மீது யா ரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ்
அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி
அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ்
         (-நினைவு)

மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நதியென அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியென்றங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்டநேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே !
                (-நினைவு)

காணும் வரையில் கண்கள் தூங்காது !
காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது !
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது !
ஒளியைத் தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன் !
                 (-நினைவு)

உலகில் வாழவந்த உயிர்கள் யாவும்
உம்மி ரசூலே உங்கள் புகழ்பாடும் !
அருளாய் வந்திலங்கும் மறைமூலம்
அல்லாஹு போற்றும் மனித அனுகூலம் !
இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதயதீபமே
இறுதித் தூதராகவந்த இறையின் ஞானமே !
          (-நினைவு)


3 கருத்துகள்:

  1. மனாருல்ஹூதாவில் கேட்டது
    இன்னும் காதில் ஒளிக்கிறது

    ம்ம்ம் அது ஒரு பொற்காலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உண்மைதான் மஸ்லஹி
      ஆனால் மனாருல் ஹுதாவை விட்டு வந்த பிறகு
      அந்த பழைய குரலின் இனிமை இப்போது கிடையாது

      நீக்கு

படிச்சாச்சா.. எங்கே மனசுல பட்டத
பட்டுன்னு எழுதுங்க பாப்போம்!
அட..திட்டியாச்சும் இரண்டு வார்த்தை எழுதுங்களேன்

முக்கியப் பதிவுகள்

இஸ்லாமிய கீதங்கள்

 இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF  தொகுப்பு : ஆலிமா சாஜிதா பின்த் இஸ்மாயீல் இஸ்லாமிய கீதங்கள் பாடல்கள் PDF :  Download